TNPSC Thervupettagam

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024

July 24 , 2024 172 days 199 0
  • சர்வதேச விளை​யாட்டுத் திரு​விழாக்​களில் பிரம்​மாண்​ட​மானது ஒலிம்​பிக் போட்டி. 33ஆவது ஒலிம்​பிக் திரு​விழா, ‘காதல் நகரம்’ என்றழைக்​கப்​படும் ஃபிரான்​ஸின் தலைநகர் பாரிஸில் ஜூலை 26 தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது. லண்டன் நகரத்​துக்​குப் பிறகு மூன்​றாவது முறையாக ஒலிம்​பிக் விளை​யாட்டை நடத்​த​விருக்​கும் நகரம் (1900, 1924, 2024) என்கிற பெரு​மையோடு பாரிஸ் ஆயத்​த​மாகிவரு​கிறது.

ஒலிம்​பிக்​கில் புது​மை​கள்:

  • 2024 ஒலிம்​பிக் போட்டிகளை நடத்​து​வதற்கான ஒப்புதல், சர்வதேச ஒலிம்​பிக் குழு​வால் பாரிஸ் நகரத்​துக்கு 2017இல் வழங்​கப்​பட்டது. அன்று முதல் 7 ஆண்டுகளாக ஒலிம்​பிக் திரு​விழாவுக்கான முன்னேற்​பாடுகளை பாரிஸ் மேற்​கொண்​டுவரு​கிறது.
  • உலகப் பிரபலமான ஈஃபிள் டவர் மைதானம், கான்​கார்ட், மார்​செய் உள்ளிட்ட 35 இடங்​களில் ஒலிம்​பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இவற்றில், ஒலிம்​பிக் நடைபெறு​வதற்கான 95% இடங்​கள் ஏற்கெனவே கட்டப்​பட்டுள்ள அரங்​கு​களி​லும், எஞ்சிய இடங்​கள் போட்டிக்​குப் பிறகு மறுசுழற்சி செய்​யப்​படும் வகையிலும் கட்டப்​பட்டுள்ளன.
  • அதிகப் பொருள் செலவு ஏற்படுவ​தால், கடந்த மூன்று ஒலிம்​பிக் தொடர்​கள் ஒவ்வொன்றிலும் கிட்டத்​தட்ட 3.5 மில்​லியன் டன் கார்​பன் உமிழ்வு ஏற்பட்ட​தாகக் கண்டறியப்​பட்டுள்​ளது. பாரிஸில் இந்த அளவைப் பாதி​யாகக் குறைக்​கும் முனைப்​பில் நடவடிக்​கைகளைத் தீவிரப்​படுத்​தி​யுள்ளது ஒலிம்​பிக் ஏற்பாட்டுக் குழு. இது சாத்​தி​ய​மானால், சூழலுக்கு ஏற்படும் சேதம் ஓரளவு குறையும்.
  • இந்த ஒலிம்​பிக்​கில் பேஸ்பால், கராத்தே, சாஃப்ட்​பால் போன்ற விளை​யாட்டுகள் நீக்​கப்​பட்டிருக்​கின்றன. அவற்​றுக்​குப் பதிலாக ஸ்கேட் போர்​டிங், பிரேக்​கிங், சர்ஃபிங், ஸ்போர்ட் கிளைம்​பிங் போன்ற விளை​யாட்டுகள் சேர்க்​கப்​பட்டுள்ளன. வீரர் - வீராங்​க​னைகள் கொடிகளை ஏந்தி அணிவகுத்து வரும் தொடக்க விழாவை, ஒலிம்​பிக் வரலாற்றில் முதல் முறையாக பாரிஸின் அடையாளமான சீன் நதியில் நடத்​தத் திட்ட​மிடப்​பட்டுள்​ளது.

கேள்​விக்​குள்​ளாகும் பாது​காப்பு:

  • மத்தி​யக் கிழக்கு நாடுகள், உக்ரைன் போன்ற பகுதி​களில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக பாரிஸ் ஒலிம்​பிக் பாது​காப்​புப் பணிகளில் ஃபிரெஞ்சு அரசு தீவிரம் காட்டிவரு​கிறது. அசம்​பாவிதம் எதுவுமின்றி அமைதியான முறை​யில் போட்டிகள் நடைபெற, 45,000 உள்நாட்டுக் காவல் துறை​யினர், 35,000 ராணுவத்​தினரோடு சேர்ந்து வெளி​நாட்டைச் சேர்ந்த பாது​காப்​புப் படை வீரர்​களும் களம் காண உள்ளனர்.
  • அண்மையில் நடந்து முடிந்த ஃபிரான்ஸ் தேர்​தல் முடிவில் இழுபறி நிலவுவ​தால், தொங்கு நாடாளு​மன்​றம் உருவாகும் நிலை ஏற்பட்டுள்​ளது. இதனால் ஒலிம்​பிக் தொடரின்​போது ஆட்சி​யில் யார் பொறுப்​பில் இருப்​பார்​கள் என்கிற குழப்​பம் ஏற்பட்டுள்​ளது. தொடக்க விழாவோடு நீச்​சல் விளை​யாட்டுகளும் சீன் நதியில் நடத்​தத் திட்ட​மிடப்​பட்டுள்​ளது. சீன் நதிக்​கரையிலிருந்து சுமார் 3,00,000 பேர் ஒலிம்​பிக் தொடக்க விழாவைக் காண ஏற்பாடுகள் செய்​யப்​பட்டுள்ளன.
  • ஆனால், இந்த ஏற்பாடுகள் போது​மானதாக இருக்​கின்​றனவா என்பது கேள்​விக்​குறியாக உள்ளது. சீன் நதி அமைந்துள்ள பகுதி​யில் நிலவும் மாசு காரண​மாக, கடந்த சில நூறாண்​டுகளாக இந்நதி​யில் நீச்​சலடிக்​கத் தடை விதிக்​கப்​பட்டிருந்​தது. ஒலிம்​பிக் தொடர் நடைபெற இருப்​ப​தால், சீன் நதியைத் தூய்​மைப்​படுத்​தும் பணிக்காக மட்டும் 150 கோடி அமெரிக்க டாலருக்​கும் அதிகமாக நிதி ஒதுக்கியிருக்​கும் ஃபிரெஞ்சு அரசு, அப்பணி​யைத் திறம்​படச் செய்​துள்​ளதா என்பது சந்தேகமே.
  • தொடர்ந்து சீன் நதிக்​கரையின் தூய்​மையைப் பரிசோதித்​தும் கண்காணித்​தும் வருகிறது சர்வதேச ஒலிம்​பிக் குழு. முடிவு​கள் மாறி மாறி வருவ​தால், ஒரு வேளை போட்டி தொடங்​கும் நாளன்​றும் பரிசோதனை முடிவு​கள் சாதகமாக வரவில்லை எனில், மாற்று இடத்​தில் தொடக்க விழாவும் நீச்​சல் போட்டிகளும் நடத்​தப்​படும் என்று ஃபிரெஞ்சு ஒலிம்​பிக் குழு தெரி​வித்​துள்​ளது.

அனைத்​துப் பாலினத்​துக்​கும் வாய்ப்பு:

  • டோக்​கியோவை அடுத்து பாரிஸிலும் 150க்​கும் மேற்​பட்ட பால்​புது​மையினர் ஒலிம்​பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். தன்பாலீர்ப்பு, எதிர்​பாலீர்ப்பு, இருபாலீர்ப்பு போன்று பாலின அடையாளங்களை வெளிப்​படுத்​தி​யும் அறிவித்​தும் உள்ளவர்​கள், இந்த ஆண்டு நடைபெறும் ஒலிம்​பிக்​கில் பங்கேற்க உள்ளனர்.
  • பால்​புது​மையினர், பால்​புதுமை ஆதரவாளர், வீரர், வீராங்​க​னைகள் என அனைவரும் கூடிக் கலந்துரையாட​வும், விழிப்​புணர்வு ஏற்படுத்​தவும் பாரிஸ் ஒலிம்​பிக் கிராமத்​தின் மையப்​பகுதி​யில் ‘பிரைடு ஹவுஸ்’ (பெருமித இல்லம்) அமைக்​கப்​பட்டுள்​ளது. 200க்​கும் மேற்​பட்ட நாடுகளைச் சேர்ந்த 10,500 பேர் போட்டிகளில் பங்கேற்க உள்ள நிலை​யில், அனைத்​துப் பாலினங்​களை​யும் உள்ளடக்கிய ஒலிம்​பிக்காக இது உருவெடுத்​துள்​ளது.

தயார் நிலை​யில்...

  • ஒலிம்​பிக்​கின்​போது உலகின் பல்வேறு நாடுகளில்இருந்தும் பாரிஸ் செல்​பவர்​களுக்கு உதவும் வகையில், செயற்கை நுண்​ணறி​வுத் தொழில்​நுட்ப வசதி​யோடு இயங்​கும் மொழிபெயர்ப்​புச் சேவை​கள் பொதுப் போக்கு​வரத்து வசதி​களில் அறிமுகப்​படுத்​தப்​பட்டுள்ளன.
  • சர்வதேச ஊக்க மருந்துத் தடுப்பு நிறு​வனத்​தின் கீழ் இயங்​கும் ஃபிரெஞ்சு ஊக்க மருந்துத் தடுப்பு நிறு​வனம், ஒலிம்​பிக் தொடரின்​போது சுமார் 6,000 மாதிரி​களைப் பரிசோதனை செய்ய உள்ளது. நியாயமான முறை​யில் ஒலிம்​பிக் நடைபெறு​வதும், தகுதி​யானவர்​கள் அங்கீகரிக்​கப்​படுவதும் இந்நிறு​வனத்​தின் அயராத உழைப்​பின் வெளிப்​பாடாக இருக்​கும் என்ப​தால், ஊக்க மருந்து பரிசோதனைக்கான கூடம் பெரிய அளவில் அமைக்​கப்​பட்டிருக்​கிறது.

ஒலிம்​பிக்​கில் இந்தியா:

  • இந்தி​யாவைப் பொறுத்​தவரை 2020 டோக்​கியோ ஒலிம்​பிக்​கில் 127 பேர் பங்கேற்றிருந்த நிலை​யில், இந்த ஆண்டு இந்திய வீரர், வீராங்​க​னைகளின் எண்ணிக்கை சற்றுக் குறைந்துள்​ளது. மகளிர் ஹாக்கி அணி தேர்ச்சி பெறாததால், மொத்​தம் 16 விளை​யாட்டுகளைச் சேர்ந்த 117 வீரர், வீராங்​க​னைகள் பாரிஸ் ஒலிம்​பிக்​கில் பங்கேற்​கின்​றனர். இதில் தமிழ்​நாட்டைச் சேர்ந்த 13 பேர் தடகளம், பாய்​மரப் படகு, துப்​பாக்​கிச் சுடுதல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளனர்.
  • இந்திய அணியோடு பயிற்​சி​யாளர்​கள், உதவியாளர்​கள் என 140 பேர் பயணிக்க உள்ளனர். மனநல மருத்​து​வர் ஒருவரும், விளை​யாட்டுத் துறை​யில் நிபுணத்​து​வம் பெற்ற மனநல ஆலோசகர் ஒருவரும் உடன் பயணிப்பது இதுவே முதல் முறை. டோக்​கியோ ஒலிம்​பிக்​கில் ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்​கலம் என 7 பதக்​கங்​களு​டன் நிறைவுசெய்த இந்தி​யா​வுக்​குப் பாரிஸில் முன்பைவிட அதிகப் பதக்கங்கள் கிடைக்குமா என்கிற எதிர்​பார்ப்பு கூடியுள்​ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்