பிரிக்ஸ்
- பிரிக்ஸ் என்பது உலகின் முன்னணி வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா (Brazil, Russia, India, China, and South Africa - BRICS) ஆகியவற்றின் சுருக்கமாகும்.
- 2001 ஆம் ஆண்டில், பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நான்கு வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளை விவரிக்க கோல்ட்மேன் சாக்ஸ் என்ற சொத்து மேலாண்மை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் ஜிம் ஓ நீல் என்பவர் “BRIC” (Brazil, Russia, India, and China) என்ற வார்த்தையை உருவாக்கினார்.
பிரிக்ஸ் உச்சி மாநாடு
- 2006 ஆம் ஆண்டில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்ற BRIC வெளியுறவு அமைச்சர்களின் முதல் மாநாட்டின் போது இந்தக் குழு முறைப்படுத்தப் பட்டது.
- தென்னாப்பிரிக்க நாட்டை 2010 ஆம் ஆண்டில் BRIC அமைப்பில் சேர அழைப்பு விடுத்த பின்னர் இந்த அமைப்பு BRICS என்று உருமாறியது.
- ஐந்து BRICS நாடுகளும் ஜி -20 என்ற அமைப்பின் உறுப்பினர்களாகவும் உள்ளன.
- இந்த அமைப்பானது உலக மக்கள் தொகையில் 42%, உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 23% மற்றும் உலக வர்த்தகத்தில் 17% ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
- B-R-I-C-S என்ற சுருக்கெழுத்திற்கு ஏற்ப, அந்த அமைப்பின் தலைவர் பதவியானது ஆண்டுதோறும் உறுப்பினர்களிடையே சுழற்சி முறையில் வகிக்கப் படுகிறது.
- இந்த அமைப்பின் தற்போதைய தலைவர் நாடு பிரேசில் ஆகும்.
- ஆண்டுதோறும் BRICS தலைவர்களின் உச்சி மாநாடு கூட்டப் படுகிறது.
- 2014 ஆம் ஆண்டு ஃபோர்டலிஸாவில் நடைபெற்ற ஆறாவது BRICS உச்சி மாநாட்டின் போது தலைவர்கள் புதிய வளர்ச்சி வங்கியை (New Development Bank - NDB) நிறுவுவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அவர்கள் BRICS அவசரகால நிதி ஒதுக்கீட்டு (Contingent Reserve Arrangement - CRA) அமைப்பிலும் கையெழுத்திட்டனர்.
பிரிக்ஸ் மாநாடுகளின் பட்டியல்
மாநாட்டினை நடத்தும் நாடு
|
ஆண்டு
|
1. எகாடெரின்பர்க், ரஷ்யா
|
2009
|
2. பிரேசிலியா, பிரேசில்
|
2010
|
3. சான்யா, சீனா
|
2011
|
4. புது தில்லி, இந்தியா
|
2012
|
5. டர்பன், தென்னாப்பிரிக்கா
|
2013
|
6. ஃபோர்டலிஸா, பிரேசில்
|
2014
|
7. உஃபா, ரஷ்யா
|
2015
|
8. பெனௌலிம், (கோவா) இந்தியா
|
2016
|
9. ஜியாமென், சீனா
|
2017
|
10.ஜோகன்னஸ்பர்க், தென்னாப்பிரிக்கா
|
2018
|
11. பிரேசிலியா, பிரேசில்
|
2019
|
12. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா
|
2020
|
சமீபத்தியச் செய்திகள்
- 11வது BRICS உச்சி மாநாடு 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரேசிலின் தலைநகரான பிரேசிலியாவில் நடந்தது.
- 2019 ஆம் ஆண்டிற்கான BRICS உச்சி மாநாட்டின் கருப்பொருள் "ஒரு புதுமையான எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி" என்பதாகும்.
- BRICS நாடுகள் பிரேசிலியா பிரகடனத்தை ஏற்றுக் கொண்டன.
- முக்கியக் குறிக்கோள்: பயங்கரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பு.
பிரேசிலியா பிரகடனம்
- இது சர்வதேச விவகாரங்களில் பன்னாட்டு அமைப்புகளின் பங்கு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் முக்கியப் பங்கு, சர்வதேசச் சட்டத்தை மதிக்கும் வாதம் ஆகியவற்றை ஆதரிக்கின்றது.
- பன்னாட்டு அமைப்புகள் சீர்திருத்தம்: வளரும் நாடுகள் கொண்டுள்ள குறிப்பிடத் தக்க சவால்களை எதிர்கொள்ள ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வர்த்தக அமைப்பு & சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பிற பன்னாட்டு அமைப்புகளை வலுப்படுத்துவதும் சீர்திருத்துவதும் தற்போதைய தேவையாக உள்ளது.
உச்சி மாநாட்டின் போதான சில முக்கிய நிகழ்வுகள்:
- BRICS உச்சி மாநாட்டில் இந்தியா:
- ‘ஆரோக்கியமான இந்தியா இயக்கம்’
- உடற் தகுதி மற்றும் ஆரோக்கியம் போன்ற துறைகளில் BRICS நாடுகளுக்கு இடையே தொடர்பு மற்றும் பரிமாற்றம் மேற்கொள்ள இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
- பேரழிவுகளைத் தாங்கக் கூடிய உள்கட்டமைப்பு மேம்பாடு
- பேரழிவுகளைத் தாங்கக் கூடிய உள்கட்டமைப்பின் மேம்பாட்டிற்கான கூட்டணியில் சேர BRICS நாடுகளையும் புதிய வளர்ச்சி வங்கியையும் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
- இந்தியா - பிரேசில்
- 2020 ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தின விழாவில் பங்கேற்க பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவை பிரதம விருந்தினராக இந்தியா அழைத்துள்ளது.
- இந்தியக் குடிமக்களுக்கு நுழைவு இசைவு (விசா) இல்லாத பயணத்தை வழங்க பிரேசில் முடிவு செய்துள்ளது.
- இந்தியா - சீனா
- சீன ஜனாதிபதி 2020 ஆம் ஆண்டில் சீனாவில் நடைபெற இருக்கும் மூன்றாவது முறைசாரா உச்சி மாநாட்டிற்கு இந்தியப் பிரதமரை அழைத்துள்ளார்.
- முதல் முறைசாரா உச்சி மாநாடு - வுஹான் (சீனா - 2018) & இரண்டாவது முறைசாரா உச்சி மாநாடு - மாமல்லபுரம் (இந்தியா - 2019).
- 2020 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 70வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கான முன்னேற்பாடுகளை இரு தலைவர்களும் மதிப்பாய்வு செய்தனர்.
- இந்தியா - ரஷ்யா
- ரஷ்ய மாகாணங்கள் மற்றும் இந்திய மாநிலங்கள் அளவிலான முதலாவது இருதரப்புப் பிராந்திய மன்றம் 2020 ஆம் ஆண்டில் நடைபெற உள்ளது.
- ஆர்க்டிக் பிராந்தியத்தில் முதலீடு செய்ய இந்தியா அழைக்கப் பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டளவில் இருதரப்பு வர்த்தகத்தின் அளவாக 25 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற இலக்கு ஏற்கனவே அடையப் பட்டுள்ளது.
- மே மாதம் நடைபெற இருக்கும் வெற்றி நாள் அனுசரிப்பு நிகழ்வுகளுக்காக ரஷ்யாவிற்கு வருகை தர இந்தியப் பிரதமரை ரஷ்யா அழைத்துள்ளது.
ஒத்துழைப்புப் பகுதிகள்
- பொருளாதார ஒத்துழைப்பு
- BRICS நாடுகளுக்கு இடையில் வேகமாக வளர்ந்து வரும் வர்த்தகம் & முதலீடுகள் மற்றும் பல்வேறு துறைகளில் பொருளாதார ஒத்துழைப்பு நடவடிக்கைகள் உள்ளன.
- பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் ஒப்பந்தங்கள் அமலாக்கப் பட்டுள்ளன; புத்தாக்க ஒத்துழைப்பு, சுங்க ஒத்துழைப்பு; BRICS அமைப்பின் வர்த்தக மன்றம், அவசரகால நிதி ஒதுக்கீட்டு அமைப்பு (Contingent Reserve Agreement - CRA) மற்றும் புதிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றுக்கு இடையேயான மூலோபாய ஒத்துழைப்பு முதலிய ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.
- மக்களுக்கிடையேயான பரிமாற்றம்
- இந்த அமைப்பின் நாடுகளில் உள்ள மக்களுக்கிடையேயான பரிமாற்றத்தை வலுப்படுத்துவதற்கும் கலாச்சாரம், விளையாட்டு, கல்வி, திரைப்படம் மற்றும் இளைஞர் மேம்பாடு ஆகிய துறைகளில் நெருக்கமான ஒரு ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் வேண்டிய தேவையை BRICS உறுப்பு நாடுகள் அங்கீகரித்துள்ளன.
- அரசியல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு
- BRICS உறுப்பு நாடுகளின் அரசியல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பானது மிகவும் சமமான மற்றும் நியாயமான முறையில் உலகத்திற்கான அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி போன்றவற்றில் ஒத்துழைப்பு அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- உள்நாட்டு மற்றும் பிராந்திய சவால்களின் அடிப்படையில் கொள்கை ஆலோசனைகளையும் சிறந்த நடைமுறைகளின் பரிமாற்றங்களையும் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகளை BRICS அமைப்பு வழங்குகிறது.
- ஒத்துழைப்பு நடைமுறை
- இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு பின்வருமாறு அறியப் படுகிறது:
- படி I: அரசாங்கங்களுக்கிடையில் முறையான இராஜதந்திர உறவுகள்.
- படி II: அரசு அங்கீகாரம் கொண்ட நிறுவனங்கள் மூலம் உறவுகள். எ.கா. அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள்.
- படி III: உள்நாட்டு மக்களுக்கு இடையேயான மற்றும் சிவில் சமூகத்திற்கு இடையேயான உறவுகள்.
புதிய வளர்ச்சி வங்கி & CRA
- புதிய வளர்ச்சி வங்கியின் தலைமையகம் ஷாங்காயில் உள்ளது.
- 2012 ஆம் ஆண்டு புது தில்லியில் நடந்த நான்காவது BRICS உச்சி மாநாட்டில், மூலதனங்களைத் திரட்ட புதிய வளர்ச்சி வங்கி அமைப்பதற்கான ஒரு சாத்தியக் கூறு காணப்பட்டது.
- 2014 ஆம் ஆண்டு ஃபோர்டாலிஸாவில் நடந்த ஆறாவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது தலைவர்கள் புதிய வளர்ச்சி வங்கியை நிறுவுவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
- தூய்மையான எரிசக்தி, போக்குவரத்து உள்கட்டமைப்பு, நீர்ப்பாசனம், நிலையான நகர மேம்பாடு மற்றும் உறுப்பு நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவை இதன் முக்கியச் செயல்பாடுகள் ஆகும்.
- BRICS உறுப்பினர்களிடையே சமமான உரிமைகளைக் கொண்டுள்ள அனைத்து உறுப்பு நாடுகளுடனும் ஒரு ஆலோசனை நடைமுறையில் புதிய வளர்ச்சி வங்கி செயல்படுகின்றது.
- உலகளவில் நிதி நெருக்கடி அதிகரித்து வரும் நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, ஆறாவது BRICS உச்சி மாநாட்டில் ஃபோர்டாலிஸா பிரகடனத்தின் ஒரு பகுதியாக BRICS நாடுகள் 2014 ஆம் ஆண்டில் BRICS அவசரகால நிதி ஒதுக்கீட்டில் (Contingent Reserve Arrangement- CRA) கையெழுத்திட்டன.
- வரவு செலவு சமநிலையின் நெருக்கடி நிலைமையைத் தணிக்கவும் நிதி நிலைத்தன்மையை மேலும் வலுப்படுத்தவும் உதவும் வகையில் நாணயப் பரிமாற்றங்கள் மூலம் உறுப்பு நாடுகளுக்கு குறுகிய கால நிதியுதவி வழங்குவதை BRICS - CRA நோக்கமாகக் கொண்டுள்ளது.
- CRAஇன் ஆரம்ப கால மொத்த மூலதன மதிப்பானது நூறு பில்லியன் டாலர்கள் (100 பில்லியன் அமெரிக்க டாலர்) ஆகும்.
BRICS உறுப்பு நாடுகளிடையேயான பொருளாதார நெருக்கடி
- BRICS அமைப்பின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான சீனா மற்றும் இந்தியா ஆகியவை ஏற்றுமதி வீழ்ச்சி சிக்கல்களைக் கொண்டுள்ளன.
- அமெரிக்காவுடனான சமீபத்திய வர்த்தகப் போரின் காரணமாக, சீனா ஏற்றுமதியில் விரைவான வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
- வர்த்தக ஏற்றுமதியைத் தூண்டுவதற்கு இந்தியாவும் இதே போல் முயற்சி செய்து வருகின்றது.
- மாஸ்கோவும், நிகழாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ஏற்றுமதியில் 4.8 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
- பிரேசில் தனியார் துறையைப் புதுப்பிக்க ஒரு விரிவான பொருளாதாரத் தொகுப்பை வெளியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறது.
- சர்வதேச நாணய நிதியம் ஆனது தென்னாப்பிரிக்காவின் 2019 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி மீதான முன்கணிப்பை 0.5 சதவீத புள்ளிகளாக குறைத்துள்ளது (ஏப்ரல் மாத முன்கணிப்பான 1.2 சதவீதத்திலிருந்து தற்போது அது 0.7 சதவீதமாக குறைந்துள்ளது).
சவால்கள்
- மூன்று பெரிய நாடுகளான ரஷ்யா-சீனா-இந்தியா ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க ஆதிக்கமானது BRICS அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறிட ஒரு சவாலாக உள்ளது.
- ஒருங்கிணைந்த தேசிய அரசுகளை ஒரு பரந்த அரசியல் ஏற்பாட்டில் இணைக்கும் சீனாவின் முயற்சிகள் (கடல்வழிப் பட்டுப் பாதை முன்னெடுப்பு போன்றவை) BRICS உறுப்பு நாடுகளிடையே குறிப்பாக சீனா மற்றும் இந்தியா இடையே மோதலை ஏற்படுத்தும்.
- ஒருபுறம் ரஷ்யா-சீனா ஆகிய நாடுகளுக்கும் மறுபுறம் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒரு சமநிலைப் படுத்தும் செயலை இந்தியா தொடர வேண்டும்.
- BRICS அமைப்பானது அதன் ஆரம்ப இலக்குகளை அடைவதற்கு இன்னும் முயற்சிகள் எடுக்க வேண்டும்:
- உலகளாவிய நிதி நிர்வாகத்தின் சீர்திருத்தம், ஐக்கிய நாடுகள் சபையின் ஜனநாயகமயமாக்கல் மற்றும் பாதுகாப்பு மன்றத்தின் விரிவாக்கம் போன்ற இலக்குகள்.
- குழுவின் தெளிவற்ற தன்மை: BRICS அமைப்பு என்பது பிராந்தியம் அல்லாத குழுவாகும்.
- அமெரிக்காவிற்கு எதிரான நிலை:
- அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுக்கு எதிராக அரசியல் செல்வாக்கை உருவாக்கும் ஒரு வழியாக மாஸ்கோவானது (ரஷ்யா) BRICS அமைப்பைப் பார்க்கின்றது.
- சீனா தனது சொந்த உலகளாவியப் பொருளாதார செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான ஒரு கருவியாக இந்த அமைப்பைக் கருதுகின்றது.
- நான்கு நாடுகள் அமைப்புடனான QUAD (Quadrilateral Security Dialogue - பாதுகாப்பு உரையாடலிற்கான நான்கு நாடுகள் – அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா) மூலோபாயக் கூட்டாட்சியை விரிவுபடுத்தும் அதே வேளையில், BRICS அமைப்புடனும் இந்தியா நல்லுறவு கொண்டுள்ளது.
- அரசியல் ரீதியாக, இந்த நாடுகள் அனைத்தும் ஒரே தரப்பில் இல்லை:
- இந்தியாவும் ரஷ்யாவும் வரலாற்று ரீதியாக நெருக்கமான உறவுகளைப் பகிர்ந்து கொண்டாலும் பிராந்திய அளவில் அருகருகே அமையவில்லை.
- இந்தியா-சீனா உறவுகள் ஒரு ஊசல் போல ஊசலாடுகிறது.
- பிரேசில் தற்போது அமெரிக்காவுடன் நெருக்கமாக உள்ளது.
- புதிய வளர்ச்சி வங்கியின் மோசமான செயல்திறன்:
- எந்த ஒரு பெரிய திட்டத்திற்கும் இந்த அமைப்பால் கடன் கொடுக்க முடியவில்லை. வெளிப்படைத் தன்மை மற்றும் திறமையான நிர்வாகம் இல்லாமை, உறுப்பு நாடுகளிடையே உள்ள உறவுகள் போன்ற காரணங்களால் இந்நிலைமை அங்கு ஏற்பட்டுள்ளது.
செல்ல வேண்டியப் பாதை
- BRICS நாடுகள் தங்கள் அணுகுமுறைகளையும் ஆரம்ப கால நெறிமுறைகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
- காலநிலை மாற்றம் மற்றும் ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகள் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட BRICS தலைமையிலான முயற்சிகளை BRICS அமைப்பு கருத்தில் கொள்ள வேண்டும்.
- BRICS உறுப்பு நாடுகளிடையேயான நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கிய முன்னெடுப்புக்களுக்கு நிதியளிப்பதற்கான ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாக, புதிய வளர்ச்சி வங்கியானது மற்ற வளர்ச்சி அமைப்புகளுடன் இணைந்து செயல்படலாம்.
- ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்ஸ், மூடிஸ் போன்ற மேற்கத்திய நிறுவனங்களுக்கு எதிராக, இந்தியாவால் முன்மொழியப்பட்ட படி BRICS தர மதீப்பீட்டு ஆணையம் (BRICS Credit Rating Agency - BCRA) என்ற ஒன்றை அமைப்பதற்கான யோசனை BRICS அமைப்பின் எதிர்கால நிகழ்ச்சி நிரலில் இருக்கலாம்.
ó ó ó ó ó ó ó ó ó ó