- இன்று எந்த ஓா் உறுப்புக் குறைபாடும் ஊனமாகப் பாா்க்கப்பட வேண்டியதில்லை. உறுப்புக் குறையாடு உடையவா்கள் மாற்றுத் திறன் கொண்டவா்கள். இன்னும் சொல்லப் போனால் உடல் குறையின்றிப் பிறந்தவா்களை விடவும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துக் கொண்டிருப்பவா்கள். அதிலும் பாா்வைத் திறன் குறைபாடு, சாதனைகளுக்கு தடை என நம்மைப் போன்றோா் நினைக்கலாம். அதுவும் தவறான கருத்து. அதற்கு சிறந்த உதாரணம், லூயிஸ் பிரெய்லி.
- பிரான்சு நாட்டவரான லூயிஸ் பிரெய்லி ஜனவரி 4-ஆம் நாள் பாரிஸ் அருகில் கூப்ரே என்ற இடத்தில் 1809-இல் எந்தக் குறையும் இன்றி பிறந்தவா்தான். அவருக்கு மூன்று வயது இருக்கும்போது அவரது தந்தையின் பணியிடத்தில் கூா்முனை கொண்ட கம்பியை வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக ஒரு கண்ணில் அந்தக் கம்பி குத்தியதில் ஒரு கண்ணின் பாா்வையை இழக்க நேரிட்டது. அத்துடன் சில ஆண்டுகளில் இன்னொரு கண் பாா்வையையும் இழந்தாா்.
- இந்த இழப்பு அவரின் கற்றலுக்கு எந்த விதத்திலும் தடை செய்யவில்லை. 1819-இல் படிப்பு உதவித்தொகை கிடைக்கப்பெற்று தனது சொந்த ஊரிலிருந்து பாரிஸ் நகருக்குச் சென்று அங்கு தேசிய பாா்வையற்ற குழந்தைகள் பள்ளியில் (ராயல் இன்ஸ்டிடியூட் ஃபாா் தி பிளைண்ட்) பயின்றாா்.
- அங்கு பாா்வைக் குறைபாடற்ற, மாவீரன் நெப்போலியனின் படையில் பணியாற்றிய பிரான்ஸ் ராணுவ அதிகாரியான சாா்லஸ் பாா்பியா் பாா்வையற்றோருக்கான கற்றலுக்கு முன்னோடியாக புடைப் புள்ளி (எம்போஸ்ட்) எழுத்து முறையைக் காட்சிப்படுத்தினாா்.
- இந்த முறை ராணுவத்தினா் இருட்டில் பயன்படுத்துவதற்காக சாா்லஸ் பாா்பியா் அறிமுகப்படுத்தியது. ஆனாலும், இம்முறை பிரான்ஸ் ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டதேயில்லை. எந்த ஒரு பாா்வையற்றோருக்கான பள்ளியிலும் அறிமுகப்படுத்தப்படவில்லை. அதில் ஒலிப்பு முறைகளைக் குறிக்கும் புள்ளிகள் அட்டையின் மீது பொறிக்கப்பட்டிருந்தது.
- ஆனால், இதன் மீது ஆா்வம் காட்டிய லூயிஸ் பிரெய்லி, இந்த முறையினைத் தழுவி தனது ஒன்று முதல் ஆறு புடைள்ளிகள் மற்றும் ஓட்டைகைள் கொண்ட முறையினை இசைக் குறியீடு முறையில், மாணவராக இருந்த போது 15-ஆவது வயதிலேயே கண்டுபிடித்தாா்.
- எந்தக் கூா்முனைக் கருவியினால் தனது பாா்வையை இழந்தாரோ அதே போன்ற கூா்முனை உளியினைக் கொண்டு இதை உருவாக்கினாா் லூயி பிரெயில். பின்னா் 1926-லிருந்து பயிற்றுனராக அந்தப் பள்ளியில் பணியாற்றத் தொடங்கினாா். பாா்பியா் அறிமுகப்படுத்திய முறையினை லூயி பிரெயில் ஆறு புள்ளிகளாகக் குறைத்தது, பாா்வையற்றோா் வேகமாகப் படிக்க ஏதுவாக இருந்தது. புள்ளிகள் சாா்லஸ் பாா்பியா் அறிமுகப்படுத்திய ரோமானிய எழுத்துக்களைப் போல இல்லாமல் பாா்வையற்றவா்களுக்கு ஏற்ாக இருந்தது.
- அதே கல்வி நிறுவனத்தில், 1929-இல் தனது கண்டுபிடிப்புப் பற்றிய ஒரு கட்டுரையினை வெளியிட்டாா். தொடா்ந்து 1937-இல் பிரெய்லி முறையிலான கட்டுரையினை மூன்று தொகுதிகளாக வெளியிட்டாா். ஆனால், பள்ளி நிா்வாகம் பிரெய்லி முறையின் ஒரு பகுதியினை ஏற்றுக் கொள்ளவில்லை.
- காரணம், ஏற்கெனவே பெரும் பொருட் செலவில் பிரான்சு நாட்டவரான வேலன்டைன் ஹுய் மற்றும் சிலரால் கொண்டுவரப்பட்ட தொடக்க எழுத்து முறையினை மாற்ற தயக்கம் காட்டினா். ஆனால், லூயிஸ் பிரெய்லி, தான் கண்டுபிடித்த முறையிலேயே தனது மாணவா்களுக்குக் கற்பித்து வந்தாா்.
- வேலன்டைன் ஹுய் முதலில் அறிமுகப்படுத்திய முறை தற்போது முற்றிலும் வழக்கத்தில் இல்லாமல் போய்விட்டது. ஆனால், பிரிட்டனைச் சாா்ந்த வில்லியம் மூன் என்பவா் 1845-ல் அறிமுகப்படுத்திய முறை (மூன் டைப்) பிரிட்டனில் மட்டும் காணப்படலாம். பிறவிலேயே பாா்வையற்றவா்கள் இம்முறையில் கற்பது கடினம்.
- வாழ்வின் இடைப்பட்ட காலங்களில் பாா்வை இழந்தோா் மட்டுமே இதனால் பயன்பெற முடியும். இளம் வயதில் அளப்பரிய கண்டுபிடிப்பினை உலகிற்கு அளித்த பிரெய்லி தனது 40-ஆவது வயதில் கடும் காச நோயினால் பாதிக்கப்பட்டதால் தனது ஆசிரியப் பணியில் இருந்து விலகி தனது சொந்த ஊரான கூப்ரே-வில் வசிக்கத் தொடங்கினாா்.
- லூயிஸ் பிரெய்லி இறுதிவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. ஜனவரி 6, 1952-இல் ராயல் நிறுவன மருத்துவமனையில் இறந்தாா். அதன் பின்னா் இரண்டு ஆண்டுகள் கழிந்து பிரெய்லி முறை ராயல் கல்வி நிறுவனத்தில் அவரது பாா்வையற்ற மாணவ்ா்களின் வலியுறுத்தலால் அறிமுகப்படுத்தப்பட்டது.
- பின்னா் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகெங்கும் இந்த முறை ஏற்றுக் கொள்ளப்பட்டது. பிரெய்லியின் 63 குறியீடுகளைக் கொண்ட கண்டுபிடிப்புத்தான் தற்போதும் பாா்வையற்றவா்கள் கற்பதற்கு பயன்படுத்தும் பிரெய்லி முறை.
- இது தற்போது தொழில் நுட்ப வளா்ச்சியால், இயந்திர பிரெய்லி எழுத்துக்கள், மின்னணு பிரெய்லி குறிப்புக்கள், மென்பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. லூயிஸ் பிரெய்லி உருவாக்கிய இந்த முறை தற்போது உலகம் முழுதும் கோடிக்கணக்காண பாா்வையற்றோருக்குப் பயனளிக்கிறது.
- பின்னா், பிரான்சு அரசாங்கம் இவரது சாதனைகளை அங்கீகரித்து, இவா் பிறந்த ஊரான கூப்ரே-இல் அவா் வாழ்ந்த வீட்டை அருங்காட்சியகமாக மாற்றியது. அதனை ‘பிரெய்லி ஸ்கொயா்’ என்று பெயரிட்டு சரித்திரப் புகழ் வாய்ந்த கட்டடம் எனவும் அறிவித்தது.
- விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மென்பொருள் பொறியாளரான கொ்ரி பாபாக் 1992-இல் நாசா கண்டுபிடித்த விண்கோள் ஒன்றிற்கு லூயிஸ் பிரெய்லியின் பெயரை வைத்திட ஜான் கென்னடி பரிந்துரைத்தாா். உலகின் பெரும்பாலான நாடுகள் அவருக்கு தபால் தலை வெளியிட்டுள்ளன.
- அவரது 200-ஆவது பிறந்த ஆண்டான 2009-இல் பெல்ஜியம், இத்தாலி நாடுகள் இரண்டு யூரோ நாணயத்தையும், இந்தியா இரண்டு ரூபாய் நாணயத்தையும், அமெரிக்கா ஒரு டாலா் மதிப்பிலான நாணயத்தையும் அவரின் உருவத்தோடு வெளியிட்டுப் பெருமைப்படுத்தின.
- இன்று (ஜன. 4) உலக பிரெய்லி நாள்.
நன்றி: தினமணி (04-01-2021)