- ஆஸ்கர் விருதுகளை அதிக எண்ணிக்கையிலான பெண்கள் வென்று சாதனை படைத்துள்ளார்கள்.
- 93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்ரவரி 28 அன்று நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், உலகம் முழுக்க கரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவுவதால் ஆஸ்கர் விருது வழங்கும் விழா இரு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
- 2021 பிப்ரவரி 28-க்குப் பதிலாக ஏப்ரல் 25 அன்று ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.
- ஆஸ்கர் விருது வழங்கும் விழா நேரடியாகவும் இணையம் வழியாகவும் நேற்றிரவு நடைபெற்றது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள யூனியன் ஸ்டேஷன், டால்பி திரையரங்கம் ஆகிய இடங்களில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
- விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்களும் விருந்தினர்களும் நியூ யார்க் மற்றும் லண்டனில் அமைக்கப்பட்ட கூடுதல் விழா அரங்கிலும் கலந்துகொண்டார்கள்.
விருதுகள்
- சிறந்த படத்துக்கான விருதை நோமட்லேண்ட் பெற்றுள்ளது.
- சிறந்த இயக்குநருக்கான விருதை குளோயி ஜாவ் (நோமட்லேண்ட்), சிறந்த நடிகருக்கான விருதை ஆந்தனி ஹாப்கின்ஸ் (தி ஃபாதர்), சிறந்த நடிகைக்கான விருதை பிரான்சஸ் மெக்டர்மாண்ட் (நோமட்லேண்ட்) சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை எரிக் (மான்க்) ஆகியோர் பெற்றுள்ளார்கள்.
- சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான விருதை டென்மார்க்கின் அனதர் ரவுண்ட் படம் பெற்றுள்ளது.
- 70 பெண்கள், இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் 17 விருதுகளை பெண்கள் வென்று சாதனை படைத்துள்ளார்கள்.
- சிறந்த இயக்குநர், சிறந்த படம் (அசல் திரைக்கதை), சிறந்த அனிமேஷன் படம், சிறந்த அசல் பாடல் போன்ற முக்கிய விருதுகளை பெண்கள் வென்றுள்ளார்கள்.
- 2019-ல் 15 பெண்கள் வென்ற நிலையில் இந்தமுறை தான் அதிக எண்ணிக்கையிலான ஆஸ்கர் விருதுகளை பெண்கள் வென்று சாதனை படைத்துள்ளார்கள். அதாவது 17 விருதுகளை 15 பெண்கள் வென்றுள்ளார்கள்.
- 63 வயது பிரான்சஸ் மெக்டர்மாண்ட் சிறந்த நடிகை மற்றும் சிறந்த படம் (நோமட்லேண்ட் தயாரிப்பாளர்களில் ஒருவர்) என இரு விருதுகளை வென்றுள்ளார்.
- அதேபோல சீனாவைச் சேர்ந்த 39 வயது குளோயி ஜாவ் சிறந்த இயக்குநர், சிறந்த படம் (நோமட்லேண்ட்) என இரு விருதுகளை வென்றுள்ளார்.
- சிறந்த இயக்குநருக்கான விருதை வென்ற 2-வது பெண் மற்றும் முதல் ஆசியப் பெண் என்கிற பெருமையை ஜாவ் பெற்றுள்ளார். சிறந்த ஒப்பனைக்கான விருதை முதல்முறையாகக் கருப்பினப் பெண் வென்றுள்ளார்.
- சிறந்த துணை நடிகைக்கான விருதை யுஹ்-ஜுங் யோன், மினாரி படத்துக்காக வென்றுள்ளார். இந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, வெற்றி கண்ட முதல் கொரிய நடிகை.
- 2020-ம் வருடம் இந்த வருடத்தை விடவும் அதிகமான பெண்கள், விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்கள். எனினும் 13 பேர் மட்டுமே வெற்றியாளர்கள் ஆனார்கள். 2018-ல் ஆறு பெண்களும் 2015 மற்றும் 2007-ல் அதிகபட்சமாக 12 பெண்களும் விருதுகளை வென்றார்கள்.
ஆஸ்கர் 2021: முக்கிய விருதுகளை வென்றுள்ள பெண்கள்
- பிரான்சஸ் மெக்டர்மாண்ட் - குளோயி ஜாவ் - மொல்லி ஆஷர் (நோமட்லேண்ட் படக்குழு)
- குளோயி ஜாவ் - சிறந்த இயக்குநர் (நோமட்லேண்ட்)
- குளோயி ஜாவ், பிரான்சஸ் மெக்டர்மாண்ட், மொல்லி ஆஷர் - சிறந்த படம் (நோமட்லேண்ட்)
- எமரால்ட் ஃபென்னல் - அசல் திரைக்கதை (பிராமிசிங் யங் வுமன்)
- டானா முர்ரே - சிறந்த அனிமேஷன் படம் (சோல்)
- பிப்பா எர்லிச் - சிறந்த ஆவணப்படம் (மை ஆக்டோபஸ் டீச்சர்)
- அலைஸ் டோயர்ட் - சிறந்த ஆவணக் குறும்படம் (கொலட்)
- அன்னே ராத் - சிறந்த ஆடை வடிவமைப்பு (மா ரையினிஸ் பிளாக் பாட்டம்) (போட்டிப் பிரிவில் ஆஸ்கர் வென்ற வயதான பெண்)
- மியா நீல், ஜாமிகா வில்சன் - சிறந்த ஒப்பன் & கூந்தல் அலங்காரம் (மா ரையினிஸ் பிளாக் பாட்டம்)
- மிச்செல் - ஒலி வடிவமைப்பு (சவுண்ட் ஆஃப் மெடல்)
- ஜான் பாஸ்கல் - கலை இயக்கம் (மான்க்)
- ஹெர் (கேப்ரியல்லா), டியாரா தாமஸ் - அசல் பாடல் (ஃபைட் ஃபார் யூ)
நன்றி: தினமணி (27 – 04 - 2021)