TNPSC Thervupettagam

பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா 2023 - பகுதி 2

October 10 , 2023 458 days 909 0

 (For English version to this please click here)

பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா

இருக்கைகளின் சுழற்சி

  • பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையானது, ஒவ்வொரு எல்லை நிர்ணயத்திற்கும் பிறகு, பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டத்தால் தீர்மானிக்கப் படுகிறது.

மசோதாவின் முக்கியத்துவம்

  • இந்தியாவில் பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவின் முக்கியத்துவமானது, பன்முகத் தன்மையோடு தொலைநோக்குத் தாக்கங்களையும் கொண்டுள்ளது.

சட்டமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம்

  • உலகளவில், தற்போது பெண்கள் நாடாளுமன்றதில் 26.7% இடங்களிலும், உள்ளாட்சி பதவிகளில் 35.5% இடங்களை மட்டுமே வகிக்கின்றனர்.
  • ஒரு பெரிய பொருளாதார நாடான இந்தியாவின் இத்தகைய நடவடிக்கையானது, உலக அளவிலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

பாலின சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தல்

  • இந்த மசோதாவின் முதன்மை நோக்கமானது, பாலினச் சமத்துவத்தை ஊக்குவிப்பதோடு, பெண்களுக்குப் போதுமான அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதுமாகும்.
  • இந்தியாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதிப் பேர் பெண்கள் என்பதாலும், மேலும் முடிவெடுக்கும் நடைமுறைகளில் அவர்களின் பங்களிப்பை உறுதி செய்வதும் பாலின நீதியின் அடிப்படை அம்சமாகும்.

அரசியல் பங்கேற்பு

  • இந்த மசோதா அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் பெண்களின் அரசியல் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம், பெண்களை அரசியலில் நுழைய செய்வதோடு, தேர்தலில் போட்டியிடவும், அரசாங்கப் பதவிகளை வகிக்கவும் ஊக்குவிக்கிறது.

பெண்களின் குரல்கள் மற்றும் பிரச்சினைகள்

  • சட்டமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதன் மூலம், பெண்களின் உரிமைகள், கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளில் பெண்களின் குரல்கள் கேட்கப்படுவதை உறுதி செய்கிறது.
  • இது பாலின அடிப்படையிலான பாகுபாடு மற்றும் வன்முறைக்கு தீர்வு காணும் கொள்கைகள் மற்றும் சட்டங்களுக்கும் வழிவகுக்கும்.
  • அரசியல் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் பெரும்பாலும் மற்ற பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் முன்மாதிரியாக இருக்க முடியும்.
  • இது அரசியல் உட்பட பல்வேறு துறைகளில் தலைமைப் பங்கினைத் தொடர அவர்களுக்கு ஊக்கமளிக்கிறது.

ஆணாதிக்கத்தைக் கையாளுதல்

  • பெண்களுக்கான இட ஒதுக்கீடானது பாரம்பரிய பாலினப் பங்கு மற்றும் மாறாக்க ருத்துருக்கள் மீதான ஐயப்பாட்டை ஏற்படுத்திக்கிறது.
  • மேலும் இது இந்தியாவின் அரசியல் மற்றும் சமூகத்தின் மீதான ஆணாதிக்கத் தன்மைக்கும் சவால் விடுகிறது.

பாலினத்தை உள்ளடக்கிய ஆட்சி

  • முடிவெடுக்கும் அமைப்புகளில் பாலின ரீதியான வேறுபாடு இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது.
  • இது சட்டமன்றங்கள் உட்பட, பலதரப்பட்ட முன்னோக்குகள் மற்றும் அனுபவங்கள் போன்றவற்றை கருத்தில் கொள்வதால், சிறந்த நிர்வாகத்திற்கும் முடிவெடுப்பதற்கும் வழி வகுக்கிறது.

சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி

  • பெண்களுக்கு அரசியல் ரீதியாக அதிகாரமளிப்பது என்பது சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
  • இது பாலின-உணர்திறன் மேம்பாடு, பெண்களுக்கான கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான மேம்பட்ட அணுகல் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்கும் கொள்கைகளுக்கு வழி வகுக்கிறது.

பாலின வேறுபாடுகளைக் கண்டறிதல்

  • இந்த மசோதாவானது பல்வேறு துறைகளில் நிலவும் பாலின வேறுபாடுகளைக் குறைப்பதற்காக பங்களிக்கும் வகையில் செயல்படும்.
  • இது கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரம் உட்பட, பெண்களின் கவலைகள் மற்றும் முன்னுரிமைகள் பற்றி அதிகம் கண்காணிக்கும் வகையில் உள்ளது.

சர்வதேச அளவிலான கடமைகள்

  • பாலினச் சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் மாநாடுகளில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
  • பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை நடைமுறைப்படுத்துவதன் மூலம், இந்த சர்வதேச கடமைகளின் மீதான இந்தியாவின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
  • இந்த மசோதாவானது அரசியல் கட்சிகள், அதன் பெண் தலைவர்களை ஊக்குவிப்பதோடு, தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கவும், மிகவும் உள்ளடக்கிய மற்றும் மாறுபட்ட பன்முகத்தன்மை கொண்ட அரசியல் காட்சிக்கும் வழி வகுக்கிறது.

மசோதா மீதான விமர்சனம்

  • இரண்டு காரணங்களுக்காக 2023 ஆம் ஆண்டு இடஒதுக்கீடு மசோதாவை விமர்சிக்க வேண்டும்.
  • முதலாவதாக, செயலாக்க அட்டவணையின் சிக்கலானத் தன்மை.
  • 2023 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு (நூற்றி இருபத்தி எட்டாவது திருத்தம்) சட்டமானது "அந்தச் சட்டம் அறிவிக்கப் பட்ட தேதிக்குப் பிறகு எடுக்கப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்புத் தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிடச் செய்வதோடு, அதன் நோக்கத்தினை அடைய எல்லை நிர்ணய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வரும்.
  • பெண்களின் நியாயமான பங்களிப்பைப் பெறுவதற்கான தேர்தல் சுழற்சி பற்றி இது எதையும் குறிப்பிடப்படவில்லை.
  • இரண்டாவதாக, முந்தைய ஆட்சிகளின் போது, புதிய மசோதாவானது மாநிலங்களவை மற்றும் மாநிலச் சட்ட மன்றங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டினை வழங்கவில்லை.
  • மக்களவையை விட தற்போது மாநிலங்களவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது.
  • கீழ் மற்றும் மேல் அவைகள் இரண்டும் பிரதிநிதித்துவம் என்ற கருத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

  • முன்பு, அரசியலில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு எதிராக பல்வேறு விமர்சன வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
  • இடஒதுக்கீட்டுக் கொள்கைகள் மேலோட்டமான நடைமுறைகளுக்கு வழிவகுக்கும் என்று சிலர் வாதிடுகின்றனர்.
  • மேலும் பெண்களுக்கு உண்மையான ஆதரவு மற்றும் அதிகாரமளிப்பதை விட இட ஒதுக்கீட்டை வழங்கி அதனை நிரப்புவதாகக் கருதுகின்றனர்.
  • தலைமைப் பாத்திரங்களில் பங்களிப்பதில் பெண்களுக்கு எதிராக தடையும் பின்னடைவும் இருக்கலாம், அது வேரூன்றிய ஆணாதிக்கத்தை அகற்ற வேண்டிய பலத்தைக் கொண்டிருக்கவில்லை.
  • இடஒதுக்கீட்டுக் கொள்கைகள் பொதுவாக அரசியல் பிரதிநிதித்துவத்திற்குப் பொருந்தும், ஆனால் ஆணாதிக்கத்தை நிலைநிறுத்தும் பரந்த சமூக மற்றும் கலாச்சார நெறிமுறைகளை அது கையாளாது.
  • இடஒதுக்கீட்டுக் கொள்கைகளின் செயல்திறன் என்பது வெவ்வேறு சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார பின்னணியில் உள்ள பெண்களுக்கு மாறுபடலாம்.
  • பல வகையான பாகுபாடுகள் ஒன்றுடன் ஒன்று கலந்திருப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
  • இடஒதுக்கீட்டுக் கொள்கைகள் ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கலாம், ஆனால் அது பாலினச் சமத்துவத்தில் நீடித்த மாற்றத்தை அடைவதற்கு தேவையான அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு அப்பாற்பட்ட முறையான சிக்கல்களைத் தீர்க்க வேண்டும்.

https://www.orfonline.org/wp-content/uploads/2023/09/44-1-300x182.png

இந்தியாவில் பெண்கள் இட ஒதுக்கீட்டின் நிலை

  • குஜராத் - 182 உறுப்பினர்களைக் கொண்ட அதன் சட்டமன்றத்தில் வெறும் 8% பெண் சட்டமன்ற உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • ஹிமாச்சலப் பிரதேசம் - ஒவ்வொரு இரண்டாவது வாக்காளரும் ஒரு பெண்ணாக இருக்குமிடத்தில், 67 ஆண்களும் 1 பெண்ணும் மட்டுமே தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
  • தேசிய சராசரி - அனைத்து மாநிலச் சட்டசபைகளிலும் பெண்களின் தேசிய சராசரி 8% ஆக உள்ளது.
  • தரவரிசைப் பட்டியல் - பாராளுமன்றங்களுக்கிடையேயான சங்க அமைப்பு வழங்கிய அறிக்கையின்படி, நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தில் 193 நாடுகளில் இந்தியா 144வது இடத்தில் உள்ளது.
  • நமது உடனடி அண்டை நாடுகளான, வங்களாதேசம், பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தை விட இந்தியா பின்தங்கியுள்ளது.

https://www.orfonline.org/wp-content/uploads/2023/09/88-300x265.png

மசோதாவின் முக்கியத்துவம்

  • முறையான சமத்துவமின்மை மற்றும் தடைகள் காரணமாக பெண்கள் வரலாற்று ரீதியாக பாதிக்கப் பட்டுள்ளனர்.

சாதியக் குழுக்கள்

  • பெண்கள் இடஒதுக்கீட்டின் எந்தவொரு திட்டமும் அரசியலமைப்புச் சட்டங்களுக்கு உட்பட்டதாக இருப்பதோடு சாதிக் குழுக்களுக்கிடையே அதன் பிரதிநிதித்துவத்தையும் அது கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பாலின ஒதுக்கீடு

  • பாலின ஒதுக்கீடு இல்லாமல், பெண்களின் பிரதிநிதித்துவமானது தொடர்ந்து விளிம்பு நிலையிலேயே இருப்பது என்பது, நமது ஜனநாயகத்தில் பெரியளவிலான ஒரு பற்றாக்குறையையும் ஏற்படுத்தும்.

https://www.orfonline.org/wp-content/uploads/2023/09/66-300x197.png

பஞ்சாயத்துகள்

  • பஞ்சாயத்துகள் பற்றிய சில சமீபத்திய ஆய்வுகள், பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் வளங்களை ஒதுக்கீடு செய்வதில் இட ஒதுக்கீட்டின் நேர்மறையான விளைவைக் காட்டுகின்றன.

வாக்குகளின் பங்களிப்பு

  • பெண்களின் வாக்கு சதவீதமானது அதிகரித்தாலும் அதிகாரப் பதவிகளில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

முன்னோக்கிய பாதை

  • இந்தியா அதன் பரந்த பெண் மக்கள்தொகையுடன், ஒரு பெரிய ஆற்றல் நீர்த் தேக்கத்தைக் கொண்டுள்ளதோடு, அது செயல்முறைப்படுத்தப்பட்டால், அது நாட்டை மிகவும் முன்னோக்கிக் கொண்டு செல்லும்.
  • பெண்களுக்கான இடஒதுக்கீடு மக்களாட்சி செயல்முறையைத் தொடங்கும்.
  • கணிசமாகப் பெரும்பான்மையினரை தங்கள் வாழ்க்கை எவ்வாறு நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதில் கருத்து தெரிவிக்க இது அனுமதிக்கிறது.
  • அரசியலில் பெண்களுக்கான இடஒதுக்கீடு என்பது ஆணாதிக்கத்திற்குச் சவால் விடுவதற்கும் பாலினச் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு மதிப்புமிக்க கருவியாக இருக்கும்.
  • ஆனால், இது கலாச்சார விதிமுறைகள், கல்வி, பொருளாதார வலுவூட்டல் மற்றும் சமூக மாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய மற்றும் சமத்துவமானச் சமூகத்தை உருவாக்குவதற்கான பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
  • கூடுதலாக, அத்தகையக் கொள்கைகளின் தாக்கமும், மேலும் அவற்றின் வடிவமைப்பு மற்றும் செயல்படுத்தல் உட்பட பல்வேறு காரணிகளைப் பொறுத்து அவற்றின் வெற்றியும் மாறுபடலாம் .
  • ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, “பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடானது இந்தியாவை உலகெங்கிலும் உள்ள 64 நாடுகளில் ஒன்றாக உயர்த்தும்.
  • அது அவர்களின் தேசியப் பாராளுமன்றங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டையும் வழங்கியுள்ளது.
  • பொதுவாக, பாராளுமன்றத்தில் பெண்களின் 30 சதவீதப் பிரதிநிதித்துவத்தை வழங்குவது பெண்களின் அதிகாரமளிப்புக்குச் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாக அறியப் படுகிறது.
  • எவ்வாறாயினும், இது போன்ற இடஒதுக்கீடுகளை நடைமுறைப்படுத்துவது இறுதியில் உலகெங்கிலும் உள்ள பாராளுமன்றங்களில் பெண்களின் 50 சதவீதப் பிரதிநிதித்துவத்தை அடைய வழிவகுக்கும் என்று நாமும் நம்பலாம்.

https://thedailyguardian.com/wp-content/uploads/2023/09/Capture-81.jpg

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்