TNPSC Thervupettagam

பேரிடர் மேலாண்மை – பகுதி I

November 29 , 2019 1680 days 13679 0
  • இயற்கை அபாயங்களானது காயம் அல்லது உயிர் இழப்பு, சொத்துக்களுக்குச் சேதம், சமூக அல்லது பொருளாதார சீர்குலைவு மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன.
  • இந்தியாவைப் பொறுத்தவரை, பூகம்பங்கள், நிலச்சரிவுகள், வறட்சி, சூறாவளிகள், வெள்ளம், காட்டுத் தீ மற்றும் பிற தீ விபத்துக்கள் போன்றவை பெரும் ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன.
  • உலக வங்கியின் அறிக்கைப் படி, பேரிடர் காரணமாக இந்தியாவின் நேரடி இழப்பு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% ஆகும்.
  • 2010 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பேரிடர் குறைப்புக்கான சர்வதேச அமைப்பின் அறிக்கைப் படி, இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுவதில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, இந்தியாவின் தீ பாதுகாப்பு குறித்தப் பதிவுகள் திகிலூட்டுகின்றன. 2015 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 17,000க்கும் மேற்பட்டோர் தீ தொடர்பான விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.
  • இந்தத் துயரங்கள் இந்தியாவின் பேரிடர் மேலாண்மைக் கட்டமைப்பில் உள்ள இடைவெளிகளைச் சுட்டிக் காட்டுகின்றன.
  • இந்தச் சூழலில், பேரிடர் நிர்வாகத்தின் பல்வேறு அம்சங்களைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது.
  • அக்டோபர் 29 – தேசியப் பேரிடர் அபாயக் குறைப்பு நாளாக அனுசரிக்கப் படுகின்றது.

பேரிடர்

  • பேரிடர் என்பது சொத்துக்கள், உள்கட்டமைப்புகள், சுற்றுச்சூழல், அத்தியாவசியத் தேவைகள் & வாழ்வாதார வழிமுறைகளைச் சேதப் படுத்துதல் அல்லது அவற்றை இழத்தல் போன்றவற்றுக்கு வழி வகுக்கின்ற ஒரு நிகழ்வு அல்லது தொடர் நிகழ்வுகளாகும்.
  • ஐக்கிய நாடுகள் சபையானது பேரிடரைச்  "சமூகத்தின் அடிப்படை வசதிகள் மற்றும் இயல்பானச் செயல்பாடுகளை சீர்குலைக்கும் ஒரு திடீர் அல்லது பெரிய துரதிர்ஷ்டம்" என்று வரையறுக்கின்றது.
  • பேரிடர் என்பது ஒரு குறுகிய அல்லது நீண்ட காலத்திற்குள் நிகழும் ஒரு மோசமான இடையூறாகும். பேரிடரானது பாதிக்கப்பட்ட சமூக மக்கள் தங்களது சொந்த வளங்களைப் பயன்படுத்தி சமாளிக்கும் திறனுக்கும் அப்பாற்பட்ட மனித, பொருள், பொருளாதார அல்லது சுற்றுச்சூழல் இழப்பை ஏற்படுத்துகின்றது.
  • பேரிடர் என்பது சாதாரண வாழ்க்கையைத் திடீரென சீர்குலைக்க வழி வகுக்கக் கூடிய இயற்கையான அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட காரணங்களின் விளைவாகும்.  
  • இது பெரும்பாலும் மனிதக் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சக்திகளின் விளைவாக ஏற்படும் ஒரு விரும்பத் தகாத நிகழ்வாகும்.

பேரிடர்களின் வகைப்பாடு

  • பேரிடர்களானவை அதன் தோற்றத்தின் அடிப்படையில் இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரிடர்கள் என வகைப்படுத்தப் படுகின்றன.
  • தீவிரத்தின் அடிப்படையில், பேரிடர்கள் சிறியவை அல்லது பெரியவை (பேரிடர் தாக்கத்தின் விளைவைப் பொறுத்து) என வகைப்படுத்தப் படுகின்றன.
  • இயற்கைப் பேரிடர்களானவை திடீரென ஏற்படும் சுற்றுச்சூழல் இடையூறுகள் அல்லது அச்சுறுத்தல்களின் காரணமாக, அவற்றினால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் தானே சரிசெய்து கொள்ளும் திறனை மீறுகின்றன. எனவே அந்தச் சமூகத்திற்கு வெளிப்புற உதவிகள் தேவைப் படுகின்றன.
    • பரவலாக இயற்கைப் பேரிடர்களைப் பின்வரும் காரணிகள் மூலம்  வகைப்படுத்தலாம். அவை
      • பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் போன்ற புவி இயற்பியல் காரணிகள்;
      • வெள்ளம் போன்ற நீரியல் காரணிகள்;
      • சூறாவளி போன்ற வானிலை ஆய்வுக் காரணிகள்;
      • வெப்ப அலைகள், குளிர் அலைகள் மற்றும் வறட்சி போன்ற காலநிலைக் காரணிகள்;
      • தொற்றுநோய் போன்ற உயிரியல் காரணிகள்.
  • மனிதனால் உருவாக்கப்பட்ட பேரிடர்களில் அபாயகரமானப் பொருள் கசிவுகள், தீ, நிலத்தடி நீர் மாசுபாடு, போக்குவரத்து விபத்துக்கள், கட்டமைப்புத் தோல்விகள், சுரங்க விபத்துக்கள், வெடிப்புகள் மற்றும் பயங்கரவாதச்  செயல்கள் ஆகியவை அடங்கும்.

பேரிடர் ஏற்படுவதற்கான காரணங்கள்

  • சுற்றுச்சூழல் சீரழிவு:
    • மரங்கள் மற்றும் வனப்பகுதிகளை அகற்றுதல், மண் அரிப்பு, வெள்ளச் சமவெளிகளின் விரிவாக்கம் மற்றும் நிலத்தடி நீர் குறைவு.
  • மேம்பாட்டுச் செயல்முறை:
    • நிலப் பயன்பாட்டை சுரண்டுவது, உள்கட்டமைப்பின் வளர்ச்சி, விரைவான நகரமயமாக்கல் மற்றும் இயற்கை வளங்களின் மீதான தொழில்நுட்ப வளர்ச்சி.
  • அரசியல் பிரச்சினைகள்:
    • போர், அணுசக்தி, நாடுகளுக்கு இடையிலான சண்டை போன்றவை. ஹிரோஷிமா அணு வெடிப்பு, சிரிய உள்நாட்டுப் போர் போன்றவை பெரிய அளவிலான பேரழிவு நிகழ்வுகளாக மாறியுள்ளன.
  • தொழில்மயமாக்கல்:
    • இது பூமியின் வெப்பமயமாதலுக்கு வழிவகுத்தது மற்றும் இதன் மூலம் தீவிர வானிலை நிகழ்வுகளின் அலைவெண்ணும் அதிகரித்துள்ளது.

பேரிடரின் தாக்கங்கள்

  • பேரிடரானது தனிநபர்களை உடல் ரீதியாகவும் (உயிர் இழப்பு, காயம், உடல்நலம், இயலாமை மூலம்) உளவியல் ரீதியாகவும் பாதிக்கின்றது.
  • பேரிடரானது சொத்து, மனிதக் குடியேற்றங்கள் மற்றும் உள்கட்டமைப்பு போன்றவற்றை அழிப்பதால் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றது.
  • பேரிடரானது இயற்கைச் சூழலை மாற்றுவதனால் பல தாவரங்கள் மற்றும் விலங்குகள் தங்களது வாழ்விடத்தை இழக்கின்றன மற்றும் பல சுற்றுச்சூழல் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றது.
  • இயற்கைப் பேரழிவுகளுக்குப் பிறகு, உணவு மற்றும் நீர் போன்ற பிற இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவதன் விளைவாக பெரும்பாலும் உணவு மற்றும் நீர் போன்றவை பற்றாக்குறையாகின்றன.
  • பேரிடரின் விளைவாக மக்கள் இடம்பெயர நேரிடுகின்றனர்.  இடம்பெயர்ந்த மக்கள் பெரும்பாலும் புதிய குடியேற்றங்களில் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்.

இந்தியாவின் பேரிடர் பாதிப்பு விவரங்கள்

  • இந்தியா பல்வேறு முறைகளில், ஏராளமான பேரழிவுகளால் பாதிக்கப் படக்கூடியது ஆகும்.
  • நிலப்பரப்பில் சுமார் 59% மிதமான மற்றும் அதிக தீவிரம் கொண்ட பூகம்பங்களுக்கு ஆளாகின்றது.
  • நிலத்தில் சுமார் 12% (40 மில்லியன் ஹெக்டேருக்கும் அதிகமாக) வெள்ளம் மற்றும் நதி அரிப்புக்கு ஆளாகின்றது.
  • 7,516 கி.மீ நீளமுள்ள கடற்கரையோரத்தில் சுமார் 5,700 கி.மீ. கடற்கரையானது  சூறாவளி மற்றும் சுனாமியால் பாதிக்கப் படுகின்றது.
  • அதன் சாகுபடி பரப்பளவில் 68% வறட்சிக்கு ஆளாகின்றது; மேலும், மலைப் பாங்கானப் பகுதிகளானவை நிலச்சரிவுகள் மற்றும் பனிச் சரிவுகளால் பாதிக்கப்படுகின்றன.
  • மேலும், வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (Chemical, Biological, Radiological and Nuclear - CBRN) அவசரநிலைகள் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பிற பேரழிவுகளாலும் இந்தியா பாதிக்கப் படுகின்றது.
  • மாறிவரும் புள்ளிவிவரங்கள் மற்றும் சமூக-பொருளாதார நிலைமைகள், திட்டமிடப்படாத நகரமயமாக்கல், அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளுக்குள் வளர்ச்சி, சுற்றுச்சூழல் சீரழிவு, காலநிலை மாற்றம், புவியியல் அபாயங்கள், தொற்றுநோய்கள் தொடர்பான பாதிப்புகளை அதிகரிப்பதன் மூலம் இந்தியாவில் பேரிடர் அபாயங்கள் மேலும் அதிகரிக்கின்றன.
  • இந்தியாவின் பொருளாதாரம், அதன் மக்கள் தொகை மற்றும் நிலையான வளர்ச்சியை தீவிரமாக பாதிக்கும் நிலைக்கு மேற்கண்ட பேரிடர் காரணிகள் அனைத்தும் பங்களிக்கின்றன என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

இந்தியாவில் ஏற்பட்ட மோசமானப் பேரழிவுகள்

  • கேரள வெள்ளம் (2019) – பருவ மழைக்காலத்தில் பெய்த மழையால் 121 பேர் இறந்துள்ளனர் மற்றும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • காஷ்மீர் வெள்ளம் (2014) - 500க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
  • உத்தரகாண்ட் வெள்ளம் (2013) - 5,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
  • இந்தியப் பெருங்கடல் சுனாமி (2004) - தென்னிந்தியா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள், இலங்கை, இந்தோனேசியா போன்ற பகுதிகளைப் பாதித்தது. இதன் விளைவாக 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.
  • குஜராத் பூகம்பம் (2001) - இதன் விளைவாக 20,000க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
  • ஒடிசா சூப்பர் சூறாவளி அல்லது பாரதீப் சூறாவளி (1999) - இதன் விளைவாக 10,000க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
  • போபால் எரிவாயு சோகம் (டிசம்பர், 1984) - உலகளவில் நிகழ்ந்த மிக மோசமான இரசாயன பேரழிவுகளில் ஒன்றாகும். இதன் விளைவாக 10,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 5.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • பெரும் பஞ்சம் (1876-1878) மதராஸ், மைசூரு, ஹைதராபாத் மற்றும் பம்பாய் பகுதிகளைப் பாதித்தது. இதனால் சுமார் 3 கோடி மக்கள் இறந்தனர்.
    • இன்றும் கூட, இது இந்தியாவின் மிக மோசமான இயற்கைப் பேரழிவுகளில் ஒன்றாகக் கருதப் படுகின்றது.
  • 1770 மற்றும் 1943 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வங்காளப் பஞ்சம் ஆனது வங்காளம், ஒடிசா, பீகார் ஆகிய பகுதிகளை மிகவும் மோசமாகப் பாதித்தது. இதனால் சுமார் 1 கோடி மக்கள் இறந்தனர்.

  • சமீப காலங்களில் ஏற்பட்ட பேரிடர்கள்
    • ரயில் விபத்துகள் (2018 ஆம் ஆண்டில் தசரா கூட்டத்தின் காரணமாக ஏற்பட்ட நெரிசலினால் மக்கள், ரயில்களால் ரயில் தடங்களில் நசுக்கப்பட்டு இறந்தனர்).
    • தற்போதுள்ள கட்டாய தீ பாதுகாப்பு விதிமுறைகளை அலட்சியம் செய்தல் மற்றும் விதிமுறைகளை செயல்படுத்தாததால் மருத்துவமனைகளில் ஏற்படும் தீ விபத்துக்கள்.
    • மோசமான மக்கள் மேலாண்மை மற்றும் போதுமான உள்கட்டமைப்பு இல்லாமை ஆகியவற்றால் கும்பமேளா போன்ற கூட்ட நெரிசலில் சிக்கி பலர் இறக்க நேரிடுகின்றனர்.

பேரிடர் நிர்வாகத்தில் உள்ள நிலைகள்

  • பேரிடர் மேலாண்மை முயற்சிகள் பேரிடர் அபாய மேலாண்மைக்கு உதவுகின்றன.
  • இயற்கை ஆபத்துகள் மற்றும் அது தொடர்புடைய சுற்றுச்சூழல் & தொழில்நுட்பப் பேரழிவுகளின் தாக்கத்தைக் குறைக்க சமூகங்களின் கொள்கைகள், உத்திகள் மற்றும் சமாளிக்கும் திறன்களை செயல்படுத்துவதற்கான நிர்வாக முடிவுகள், அமைப்பு, செயல்பாட்டுத் திறன்களைப் பயன்படுத்துவதற்காக முறையான செயல்முறைகளைப்  பேரிடர் அபாய மேலாண்மை பின்பற்றுகின்றது.
  • இவை, பேரிடர் தடுப்பு அல்லது அபாயங்களின் பாதகமான விளைவுகளைக் கட்டுப்படுத்த (குறைத்தல் மற்றும் தயார்நிலை) கட்டமைப்பு கொண்டுள்ள மற்றும் கட்டமைப்பு அல்லாத நடவடிக்கைகள் உட்பட அனைத்து முறைகளையும் உள்ளடக்கியுள்ளன.
  • பேரிடர் நிர்வாகத்தில் மூன்று முக்கிய நடவடிக்கைகள் உள்ளன. அவை:
    • பேரிடருக்கு முன்: பேரிடர் அபாயங்களால் ஏற்படும் மனித, பொருள் அல்லது சுற்றுச்சூழல் இழப்புகளுக்கானத் திறன்களைக் குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள்.
    • பேரிடரின் போது: பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கும், பாதிப்புகளைக் குறைப்பதற்கும் எடுக்கப் படும் நடவடிக்கைகள்.
    • பேரிடருக்குப் பிறகு: பாதிக்கப்பட்ட மக்கள் & சூழல் அமைப்புகள் விரைவான மற்றும் நீடித்த மீட்டெடுப்பை அடைய எடுக்கப்படும் நடவடிக்கைகள்.
  • பேரிடர் சுழற்சி வரைபடமானது பேரிடர் நிர்வாகத்தின் வெவ்வேறு கட்டங்களைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.

பேரிடர் அபாயக் குறைப்பு

  • பேரிடர் அபாயக் குறைப்பு என்பது முறையான முயற்சிகள் மூலம் பேரழிவு அபாயங்களைக் குறைப்பதற்கான பேரிடர்களின் காரணிகளைப் பகுப்பாய்வு செய்வதற்கும் குறைப்பதற்கும் உதவக் கூடிய கருத்து மற்றும் நடைமுறை ஆகும்.
  • பேரிடருக்கு முந்தைய ஆபத்துக் குறைப்பில் பின்வருவன அடங்கும்
    • அபாய நிலையைக் குறைத்தல்: அவசர நிலை அல்லது பேரிடர் ஏற்படுவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட செயலூக்கமான நடவடிக்கைகள் மூலம் ஆபத்துகளின் தாக்கங்களையும் அபாயங்களையும் அகற்றுதல் அல்லது குறைத்தல்.
    • தயார்நிலை: பேரிடர்களின் விளைவுகளைத் தயாரிக்கவும் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • பேரிடருக்குப் பிந்தைய ஆபத்து குறைப்பில் பின்வருவன அடங்கும்
    • மீட்பு: எச்சரிக்கை, வெளியேற்றம், தேடல், மீட்பு, உடனடி உதவிகளை வழங்குதல் போன்றவை இந்நிலையில் உள்ளன.
    • நிவாரணம்: பேரிடரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்குப் பதிலளித்தல், உணவு பொட்டலங்கள், நீர், மருந்துகள், தற்காலிக தங்குமிடம், நிவாரண முகாம்கள் போன்ற நிவாரண நடவடிக்கைகளை வழங்குதல் போன்றவை இந்நிலையில் உள்ளன.
    • மீட்பு: பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, சேதமடைந்த உள்கட்டமைப்பை மீட்பது மற்றும் ஏற்பட்ட சேதங்களை சரி செய்வது ஆகியவற்றை இந்த நிலை வலியுறுத்துகின்றது.

பேரிடர் அபாயத்தைக் குறைப்பதில் உள்ள சவால்கள்

  • கண்காணிக்கப்படும் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் போதுமான அளவு செயல்படுத்துதல் இல்லை.
    • எடுத்துக்காட்டாக, பேரிடர் அபாய மேலாண்மைத் திட்டங்கள் அல்லது இடர் உணர்திறன் கொண்ட கட்டிடக் குறியீடுகள் உள்ளன. ஆனால் அவை அரசாங்கத் திறன் அல்லது பொது மக்களிடையே  போதிய விழிப்புணர்வு இல்லாததால் முறையாக செயல்படுத்தப் படுவதில்லை.
  • பேரிடர் அபாய மேலாண்மையை செயல்படுத்த உள்ளூர் மக்களிடையே திறன் பற்றாக்குறை உள்ளது.
  • பேரிடர் அபாய மேலாண்மைத் திட்டங்களில் காலநிலை மாற்றத்தை ஒருங்கிணைப்பதற்கான இல்லாமை.
  • வறுமைக் குறைப்பு, சமூக நலன், கல்வி போன்ற பிற போட்டித் தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் காரணமாக அரசியல் மற்றும் பொருளாதாரக் கடமைகளைப் பெறுவதில் வேறுபாடு உள்ளது.
  • பங்குதாரர்களிடையே போதுமான ஒருங்கிணைப்பு இல்லாத காரணமாக, இடர் மதிப்பீடு, கண்காணிப்பு, ஆரம்ப எச்சரிக்கை, பேரிடர் விளைவு மற்றும் பிற பேரிடர் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து போதுமான அணுகல் இல்லை.
  • பேரிடர் தடுக்கும் உத்திகளைக் கட்டியெழுப்பப் போதுமான முதலீடு இல்லை. தனியார் துறையும் இந்த முதலீட்டின் பங்கில் குறைந்த பங்களிப்பாளர்களாகவே உள்ளனர்.

 

ó ó ó ó ó ó ó ó ó ó

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்