TNPSC Thervupettagam

பொருளாதார ஆய்வறிக்கை 2021

February 11 , 2021 1430 days 4265 0
  • இந்தியாவின் பொருளாதார ஆய்வறிக்கை என்பது மத்திய நிதித்துறை அமைச்சகத்தால் வெளியிடப்படும் ஒரு வருடாந்திர ஆய்வறிக்கையாகும்.
  • இது இந்தியாவின் பொருளாதாரம் குறித்து மிகவும் அதிகாரப்பூர்வ மற்றும் மேம்படுத்தப் பட்ட ஒரு மூலாதாரத் தரவைக் கொண்டுள்ளது.
  • இது தலைமைப் பொருளாதார ஆலோசகரின் ஒட்டு மொத்த வழிகாட்டுதலின் கீழ் மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் பொருளாதாரப் பிரிவினால் தயாரிக்கப்படுகின்றது.
  • இந்தியாவில் முதலாவது பொருளாதார ஆய்வறிக்கையானது 1950-51 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப் பட்டது.
  • 1964 ஆம் ஆண்டு வரை, இது மத்திய நிதிநிலை அறிக்கையுடன் சேர்த்து சமர்ப்பிக்கப் பட்டு வந்தது.
  • 1964 ஆம் ஆண்டிலிருந்து, மத்திய நிதிநிலை அறிக்கையிலிருந்துப்  பிரிக்கப் பட்டு இது  தனியாக சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றது.
  • இந்த ஆய்வறிக்கையின் அடிப்படைக் கருத்துரு, “மனிதர்களின் வாழ்வு மற்றும் அவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்தல்” என்பதாகும்.

பொருளாதார வளர்ச்சி

  • இந்தியாவின் பொருளாதாரமானது 2021-22 ஆம் நிதியாண்டில் 11% என்ற அளவில் வளர்ச்சிடையவுள்ளது.
  • எனினும், நடப்பு நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியானது  7.7% என்ற அளவில் குறைவாக (மைனஸ்) ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • 2022 ஆம் நிதியாண்டிற்கான உண்மையான GDP வளர்ச்சியானது இந்தியா விடுதலைடைந்ததிலிருந்து மிக உயரிய அளவாக 11% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஆய்வறிக்கையானது V-வடிவில் பொருளாதாரம் மீண்டு வருதலைக் காட்டுகின்றது.
  • பொது முடக்கமானது முதலாம் காலாண்டில் GDPயின் மீது 23.9% குறைதலுக்கு வழி வகுத்துள்ளது.
  • இரண்டாம் காலாண்டில் GDP  7.5% என்ற அளவில் மட்டும் குறைந்து, பொருளாதாரமானது V-வடிவில் மீண்டு வருகின்றது.
  • மேலும், பொருளாதாரம் மீண்டு வருதலானது அனைத்துக் குறிகாட்டிகளிலும் நிகழ்ந்து வருகின்றது.

  • சேவைகள் வாங்கல் மேலாளர்கள் குறியீடு, இரயில் சரக்குப்  போக்குவரத்து மற்றும் துறைமுகப் போக்குவரத்து போன்ற முக்கியக் குறிகாட்டிகள் பொது முடக்கத்தின் போது ஏற்பட்ட வீழ்ச்சியைத் தொடர்ந்து V-வடிவத்தில் மீண்டு வருதலை வெளிக் காட்டுகின்றன.

அந்நிய நேரடி முதலீடு

  • 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் நிகர அந்நிய நேரடி முதலீடானது (FDI) 27.5 பில்லியன் என்ற அளவில் இந்தியாவிற்குள் வந்துள்ளதைப் பதிவு செய்துள்ளது.
  • 2019-20 ஆம் நிதியாண்டின் முதல் 7 மாதங்களுடன் ஒப்பிடும் பொழுது இது 14.8% அதிகம் ஆகும்.
  • 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நிகர வெளிநாட்டுத் தொகுப்பு முதலீட்டு (FDI) வரத்தானது முன்பு எப்போதும் இல்லாத  வகையில் மாதத்தில் மிக உயரிய அளவாக 9.8 பில்லியன் டாலர்களாகப் பதிவாகியுள்ளது.
  • சேவைத் துறையானது இந்தியாவின் மொத்த மதிப்புக் கூட்டலில் (GVA) 54% என்ற அளவிற்கு அதிகமாகவும் இந்தியாவிற்குள் வந்த மொத்த FDI வரத்தில் ஏறத்தாழ 4/5 என்ற அளவிலும் பதிவாகியுள்ளது.                                                                                                                                         
  • கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு மத்தியில் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு வேண்டியச் சூழலமைப்பானது நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
  • இந்தியாவானது 38 தலை சிறந்த நிறுவனங்களுக்கு (Unicorn) இருப்பிடமாக விளங்குகின்றது.
  • இந்தியாவின் விண்வெளித் துறையானது கடந்த 60 ஆண்டுகளில் மிக அதிக அளவில் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
  • பாதுகாப்புத் துறைக்காக ஒதுக்கப்பட்ட மூலதன நிதியானது 2016-17 ஆம் ஆண்டு முதல் முழுவதும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறை

  • வேளாண்மை மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகள் 3.4% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
  • தற்போதைய விலை மதிப்பில் நாட்டின் GVAல் வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறையின் 2019-20 ஆம் ஆண்டிற்கான பங்கு 17.8% ஆக உள்ளது.
  • 2019-20 ஆம் ஆண்டில் முக்கியமான வேளாண் பொருட்கள் மற்றும் அது சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி இடங்களாக அமெரிக்கா, சவுதி அரேபியா, ஈரான், நேபாளம் மற்றும் வங்க தேசம் ஆகிய நாடுகள் விளங்குகின்றன.
  • மொத்த வேளாண் மற்றும் அது சார்ந்த துறையின் மீதான GVAல் கால்நடை வளர்ப்பின் பங்கு 24.32% (2014-15) என்ற அளவிலிருந்து 28.63% (2018-19) என்ற அளவிற்கு  அதிகரித்துள்ளது.
  • 2019-20 ஆம் ஆண்டில் மீன் உற்பத்தியானது முன் எப்போதும் இல்லாத வகையில் மிகவும் அதிகமாக 14.16 மில்லியன் மெட்ரிக் டன்களாக உள்ளது.

புத்தாக்கம்

  • இந்தியாவானது 2020 ஆம் ஆண்டில் முதன்முறையாக முதல் 50 புத்தாக்க நாடுகளைக் கொண்ட குழுவில் நுழைந்துள்ளது.
  • 2007 ஆம் ஆண்டில் உலகப் புத்தாக்க குறியீடு தொடங்கப் பட்டதிலிருந்து, இந்தியாவானது மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் முதல் இடத்திலும் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட பொருளாதார நாடுகளிடையே மூன்றாவது இடத்திலும் தரவரிசைப்படுத்தப் பட்டு இருந்தது.

கடன் மதிப்பீடு

  • உலகில் 5வது மிகப்பெரியப் பொருளாதார நாடான இந்தியாவானது இறையாண்மை கொண்ட கடன் வழங்கும் மதிப்பீட்டில் முதலீட்டுப் பிரிவின் (BBB-/Baa3) மிகக் குறைந்த அளவாக இதுவரை மதிப்பிடப் படவில்லை.

சுகாதாரத் துறை

  • பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவானது பல்வேறு மாநிலங்களில் சுகாதாரத் துறை மீதான பல்வேறு திட்டங்களின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் பங்காற்றியுள்ளது.
  • தேசிய சுகாதாரத் திட்டமானது ஏழை மக்களது குழந்தைப் பிறப்பிற்கு முந்தைய/பிந்தைய நல ஆரோக்கியத்தை அணுகுதலில் ஏற்படும் சமத்துவமின்மையைத் தடுப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றது.
  • மருத்துவமனைகளில் குழந்தை பிரசவித்தல் நிகழ்வானது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
  • சுகாதாரத் துறையில் அரசின் செலவினமானது GDPயில் தற்போதைய அளவில் 1% என்ற அளவிலிருந்து 2.5-3%  என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது.
  • உளவியல் ரீதியான ஆதரவிற்கான மனோதர்பன் என்ற ஒரு முன்னெடுப்பானது ஆத்ம நிர்பர் பாரத் அபியானில் சேர்க்கப் பட்டுள்ளது.

கல்வியறிவின் நிலை

  • இந்தியாவானது ஆரம்பக் கல்வி அளவில் ஏறத்தாழ 96% கல்வியறிவு வீதத்தை எட்டியுள்ளது.
  • அகில இந்திய அளவில் 7 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கான கல்வியறிவு வீதமானது 77.7% ஆக உள்ளது.
  • ஆனால் சமூக-சமயக் குழுக்கள் மற்றும் பாலினக் குழுக்களிடையே கல்வியறிவு விகித வேறுபாடானது முழுமையடையாமல் உள்ளது.
  • திறன்பேசியை வைத்துள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளின் விகிதமானது ஊரகப் பகுதியில் 2018 ஆம் ஆண்டில் 36.5% என்ற அளவிலிருந்து 2020 ஆம் ஆண்டில் 61.8%  என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது.
  • பிரதான் மந்திரி eVIDHYA என்பது டிஜிட்டல்/ஆன்லைன்/அலைவரிசை வழிக் கல்வி தொடர்பான அனைத்து முயற்சிகளையும் ஒன்றிணைப்பதற்கான ஒரு முன்னெடுப்பாகும்.
  • இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு கல்விக்கான பல்துறை மற்றும் சமமான ஒரு அணுகுதலை வழங்க வழிவகை செய்கின்றது.
  • ஸ்வயம் என்ற பரந்த திறந்த இணையதளப் படிப்பின் கீழ் 92 பாடப் பிரிவுகள் தொடங்கப் பட்டுள்ளன. இதில் 1.5 கோடி மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
  • இது தேசியத் திறந்தவெளிப் பள்ளி நிறுவனத்துடன் தொடர்புடைய இணையதள  படிப்புகள் ஆகும்.

கல்விக்கான முன்னெடுப்புகள்

  • டிஜிட்டல் கல்வி குறித்த பிரக்யாதா (PRAGYATA) என்ற வழிகாட்டுதல்களானது பள்ளிகள் மூடப்பட்டதன் காரணமாக வீடுகளில் இருக்கும் குழந்தைகளுக்காக ஆன்லைன்/ இரண்டும் சேர்ந்த/டிஜிட்டல் கல்வியின் மீது கவனம் செலுத்தும் நோக்கத்துடன் மேம்படுத்தப் பட்டுள்ளது.
  • மாணவர்களிடையே திறன் மேம்பாட்டுக் கற்றலை மேம்படுத்த 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குப் பல்வேறு கட்ட அளவில் தொழில் துறைப் படிப்புகள் அறிமுகப் படுத்தப்பட உள்ளன.
  • இது மத்திய அரசின் கீழ் திறன் அளிக்கும் ஒரு தலைமைத் திட்டமான பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா 3.0 என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

அத்தியாவசியத் தேவைகள் குறியீடு

  • அத்தியாவசியத் தேவைகள் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது 2018 ஆம் ஆண்டில் மேம்பட்டுள்ளது.
  • மிகப்பெரிய அளவிலான வருடாந்திரக் குடும்ப ஆய்வுத் தரவை அடிப்படையாகக் கொண்ட அத்தியாவசியத் தேவைகள் குறியீட்டை (BNI) அத்தியாவசியத் தேவைகளுக்கான அணுகுதல் குறித்தச் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக வேண்டி அனைத்து/ மையப்படுத்தப்பட்ட நிலைமையில் உள்ள மாவட்டங்களுக்காக வேண்டி மாவட்ட அளவில் உகந்த குறிகாட்டிகள் மற்றும் முறையைப் பயன்படுத்திக் கட்டமைக்க முடியும்.
  • BNI ஆனது நீர், சுகாதாரம், வீட்டு வசதி, நுண்-சுற்றுச்சூழல் மற்றும் இதர வசதிகள் போன்ற 5 பரிணாமங்களில் 5 குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.

சமூக மேம்பாடு மற்றும் பிற விவகாரங்கள்

  • மத்திய மற்றும் மாநிலங்களின் சமூகத் துறைச் செலவினமானது GDPயின்சதவீத அளவில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 2020-21 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளது.
  • மொத்தமுள்ள 189 நாடுகளில் 2019 ஆம் ஆண்டில் மனித வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை 131 ஆகப் பதிவாகியுள்ளது.
  • மத்திய அரசானது ஆத்ம நிர்பர் பாரத் ரோஜ்கர் யோஜனா மற்றும் தற்பொழுதுள்ள பணியாளர்கள் விதிமுறைகளை 4 விதிறைகளாக எளிமைப்படுத்துதல் & பரவலாக்குதல் ஆகியவற்றின் மூலம் வேலைவாய்ப்பை ஊக்கப்படுத்த உதவியை வழங்கி வருகின்றது.
  • 2019 ஆம் ஆண்டின் நேரப் பயன்பாட்டு ஆய்வு என்ற ஒரு ஆய்வின் படி ஆண்களுடன் ஒப்பிடப்படும் பொழுது பெண்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு என்று ஊதியமற்ற வகையில் குடும்ப மற்றும் நல உதவிச் சேவைகளுக்கு வேண்டி விகிதாசார அளவில் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர்.
  • சமத்துவமின்மை மற்றும் தலா வருமானம் ஆகிய இரண்டும் முன்னேறியப் பொருளாதார நாடுகளில் உள்ளதைப் போல் அல்லாமல் அவை இந்தியாவில் சமூகப் பொருளாதாரக் குறிகாட்டிகளுடன் அதே அளவிலான தொடர்பைக் கொண்டுள்ளன.

SDGக்கான செயல்பாடுகள்

  • தன்னார்வத் தேசிய ஆய்வானது (Voluntary National Review-VNR) நீடித்த வளர்ச்சி குறித்து ஐக்கிய நாடுகள் உயர் மட்ட அரசியல் மன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
  • எந்தவொரு உத்திக்கும் முக்கியமாக விளங்கும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளின் (SDG) உள்ளூர் மயமாக்கல் ஆனது 2030 ஆம் ஆண்டிற்கான செயல் திட்டங்களின் கீழ் அதன் இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தேசியக் காலநிலை மாற்ற செயல் திட்டத்தின் கீழ் (National Missions under National Action Plan on Climate Change - NAPCC) 8 தேசியத் திட்டங்கள் காலநிலை அபாயங்களை ஏற்றுக் கொள்ளுதல், தடுத்தல் மற்றும் தயார் நிலை ஆகிய நோக்கங்களின் மீது கவனம் செலுத்துகின்றது.
  • நிதியாதாரமானது காலநிலை மாற்ற நடவடிக்கையின் முக்கியமான குறிகாட்டி என்று இந்தியாவின் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்டப் பங்களிப்புகள் எடுத்துரைக்கின்றது.
  • உலகின் மிகப்பெரிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டமானது உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட 2 தடுப்பூசிகளுடன் 2021 ஆம் ஆண்டில் ஜனவரி 16 அன்று தொடங்கப் பட்டது.

- - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்