TNPSC Thervupettagam

மதிய உணவு திட்டம் - பகுதி 3

September 18 , 2023 481 days 777 0

(For English version to this please click here)

தொடக்கக் கல்விக்கான தேசிய ஊட்டச்சத்து ஆதரவுத் திட்டம் (NP-NSPE) (மதிய உணவுத் திட்டம்)

இரத்த சோகை குறைப்பு

  • MDMS திட்டத்தின் கீழ் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை வழங்குவது பள்ளி மாணவர்களிடையே இரத்த சோகையைக் குறைக்கப் பெரும் பங்களித்தது.
  • தேசியக் குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு (NFHS) தரவுகளின்படி, 6-59 மாத வயதுடைய குழந்தைகளிடையே இரத்த சோகைப் பாதிப்பானது 2005-06 ஆம் ஆண்டு 70.1% ஆக இருந்த நிலையில் அது 2015-16 ஆம் ஆண்டு 59.7% ஆகக் குறைந்துள்ளது.
  • இந்தச் சரிவிற்கு MDMS திட்டம் மட்டுமே காரணமாக இருக்க முடியாது என்றாலும், அது சமச்சீர் உணவினை வழங்குவதற்கான திட்டத்தின் முயற்சிகளுடன் ஒத்துப் போகிறது.

குறைவான எடை கொண்ட குழந்தைகள்

  • MDMS திட்டத்தின் கீழான ஊட்டச்சத்து ஆதரவானது, எடை குறைந்த குழந்தைகளின் சதவீதம் குறைவதற்கு வழி வகுத்தது.
  • குறைவான எடை கொண்ட ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சதவீதமானது NFHS-3 ஆய்வில் (2005-06) 42.5% சதவீதத்திலிருந்து NFHS-4 (2015-16) ஆய்வில் 35.7%  ஆக குறைந்துள்ளது என NFHS-4 (2015-16) தரவானது காட்டுகிறது.
  • இந்தப் படிப்படியான குறைபாட்டிற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் ​​MDMS திட்டத்தின் ஊட்டச்சத்துத் திட்டமும் துணை புரிந்து ஒரு முக்கியப் பங்கினை வகிக்கிறது.

வழக்காய்வு: தமிழ்நாடு

  • MDMS திட்டத்திற்கு தமிழ் நாட்டின் அர்ப்பணிப்பானது மிகவும் குறிப்பிடத்தக்கது.
  • மாநிலத்தின் ஆரம்பக் கட்ட மற்றும் வலுவான அமலாக்கமானது நேர்மறையான முடிவுகளை அளித்துள்ளது.
  • உலக வங்கியின் ஆய்வின்படி, இத்திட்டம் மாநிலத்தில் சிறந்த ஊட்டச்சத்து மற்றும் மேம்பட்ட கற்றல் விளைவுகளுக்குப் பங்களித்துள்ளது.
  • தமிழ்நாட்டின் திட்டமானது சமூக மாதிரி ஈடுபாட்டை வலியுறுத்துவதோடுஅதில் உணவு தயாரித்தல் மற்றும் விநியோகத்தில் உள்ளூர் மகளிர் சுய உதவிக் குழுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

சவால்கள்

ஊட்டச்சத்துக் குறைபாடு அச்சுறுத்தல்

  • தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-5 என்பதின் படி, நாடு முழுவதும் பல மாநிலங்களில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டின் அளவு மோசமாகி விட்டது.
  • சமீபத்தில் வெளியிடப்பட்ட உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையின் (GNR, 2021) படி, இரத்த சோகை மற்றும் குழந்தைப் பருவத்தை வீணாக்குவதைக் குறைப்பதில் இந்தியா எந்த முன்னேற்றமும் அடையவில்லை.
  • 15-49 வயதுக்குட்பட்ட இந்தியப் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்தியாவில் உள்ள பெண்கள் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, திருமணம் செய்து கொண்டு, ஒரு சில வருடங்களில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் போது பள்ளி அடிப்படையிலான தலையீடுகள் உண்மையில் உதவலாம்.
  • ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 50% பேர் கடுமையான எடைக் குறைவு மற்றும் 30%  பேர் வளர்ச்சி குன்றிய நிலையில் இந்தியாவில் வசிக்கின்றனர்.

உலகளாவியப் பட்டினிக் குறியீடு (GHI)

  • இந்தியா 2020 ஆம் ஆண்டு GHI அறிக்கையில் 107 நாடுகளில் 94வது இடத்தில் உள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு உலகளாவியப் பட்டினிக் குறியீட்டில் (GHI) இந்தியா 116 நாடுகளில் 101வது இடத்திற்குச் சரிந்துள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு GHI குறியீட்டில் இந்தியா 121 நாடுகளில் 107வது இடத்தில் உள்ளது.
  • இந்தியாவில் "கடுமையான" பட்டினிப் பிரச்சனை உள்ளது.

மோசமான உணவுத் தரம்

  • ஏனெனில் அதிக அளவில் உணவு உற்பத்தி செய்யப் பட்டு மாணவர்களுக்கு விநியோகிக்கப் பட வேண்டும்.
  • உணவில் புழுக்கள் இருப்பதற்கும் அல்லது தரம் குறைந்திருப்பதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
  • சாதாரண சப்பாத்தியில் உப்பு சேர்த்து விநியோகம் செய்யப்பட்டது, பாலில் தண்ணீர் கலந்தது, உணவு விஷமாக மாறுதல் மற்றும் இன்ன பிற போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

கோவிட் -19

  • குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்கான உரிமைகளுக்கு கோவிட்-19 குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்தியுள்ளது.
  • மாநிலம் தழுவிய ஊரடங்கு காரணமாக மதிய உணவுகள் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, இது மற்றத் தேவைகளை அணுகுவதிலும் தடையாக உள்ளது.
  • குறிப்பாக வீட்டில் அதிகப் பாகுபாடுகளை அனுபவிக்கும் பெண் மாணவிகள் ஊரடங்கின் விளைவாக அவர்கள் பள்ளியை விட்டு வெளியேறும் வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன.

உணவு வீணாகுதல்

  • மோசமான உணவின் காரணமாக, பல மாணவர்கள் தங்கள் உணவை உட்கொள்ளாமல், அதற்குப் பதிலாக அவற்றைத் தூக்கி எறிந்து விடுவதால், உணவு வீணாகிறது.

பணமோசடி

  • மதிய உணவுத் திட்டத்தின் மூலம் உணவு வழங்கப் படுவதால், போலியான சேர்க்கைகள் இதில் அதிகரித்து, அது நிதி நெருக்கடியினை ஏற்படுகிறது.

தரக் கட்டுப்பாடு

  • போதுமான சமையலறை வசதிகள் மற்றும் சேமிப்பகம் இல்லாத காரணத்தால் சீரான உணவுத் தரம் மற்றும் சுகாதாரத்தினை உறுதி செய்வது சவாலாக உள்ளது.
  • சில சந்தர்ப்பங்களில், சரியான சுகாதார நடைமுறைகளுக்கு இது வழி வகுப்பதால் அது உணவின் தரத்தினை மோசமாக்கியுள்ளது.
  • இது விரும்பத்தகாத மற்றும் நுகர்வுக்குப் பாதுகாப்பற்ற உணவுகளுக்கு வழி வகுக்கும்.

உள்கட்டமைப்பு

  • பல பள்ளிகளில் சரியான சமையலறை மற்றும் உணவு அருந்துவதற்கான இடங்கள் இல்லாததால் உணவுத் தயாரித்தல் மற்றும் அதன் விநியோகம் பாதிக்கப் படுகிறது.
  • தொலைதூரப் பகுதிகளில் உள்ள பல பள்ளிகளில் பிரத்தியேக சமையலறைகள் இல்லாததால், தற்காலிக இடங்களில் உணவு தயாரிக்கப் படுகிறது.
  • இது உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் தரங்களை சமரசம் செய்து, ஒட்டு மொத்த உணவின் தரத்தைப் பாதிக்கிறது.

விநியோகிப்பதில் தாமதங்கள்

  • தளவாடப் பிரச்சனைகளானது தாமதமான உணவு விநியோகத்திற்கு வழி வகுப்பதோடு, இது குழந்தைகளின் வழக்கமான ஊட்டச்சத்து உட்கொள்ளலையும் பாதிக்கிறது.
  • தளவாடச் சவால்கள் காரணமாக உணவு விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
  • சில சமயங்களில், மதிய உணவுகள் மதிய வேளைக்குப் பிறகு வெகு தாமதமாக வழங்கப் படுவதால், இது குழந்தைகளின் வழக்கமான உணவு முறைகளைப் பாதிக்கிறது.

சாதி சார்பு மற்றும் பாகுபாடு

  • சாதி அமைப்பில் உணவு விநியோகம் முக்கியப் பங்கு வகிக்கிறது, எனவே பல பள்ளிகளில், குழந்தைகளை அவர்களின் சாதி அமைப்பு நிலைக்கு ஏற்ப தனித் தனியாக அமர வைக்கின்றனர்.

PM போஷன்

  • புதுப்பிக்கப்பட்ட இத்திட்டமானது 2021-22 ஆம் ஆண்டு முதல் 2025-26 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டு கால அளவிற்கு என்று தொடங்கப் பட்டது.
  • இந்தியா முழுவதும் உள்ள 11.20 லட்சம் பள்ளிகளில் படிக்கும் 11.80 கோடி குழந்தைகள் இதன் மூலம் பயனடைவார்கள் என அரசு நம்புகிறது.
  • மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுப் பிரிவு மாநிலங்களுக்கு 60:40 என்ற விகிதத்தில் வளங்களைத் திரட்டுகின்றன.
  • இது முன்பு இருந்ததைப் போலவே சிறப்பு வகை மாநிலங்களுக்கு 90:10 ஆக இருக்கும்.
  • நிதி ஆயோக்கின் ஒரு பகுதியாக போஷன் அபியான் திட்டமானது வடிவமைக்கப் பட்டுள்ளது.

திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கிய மாற்றங்கள்

  • புதுப்பிக்கப்பட்ட திட்டமானது பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குவதோடு பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து அளவைக் கண்காணிப்பதிலும் கவனம் செலுத்தும்.
  • மாணவர்களின் பிஎம்ஐ (உடல் நிறைக் குறியீட்டெண்), எடை அளவுகள் மற்றும் ஹீமோகுளோபின் அளவு ஆகியவை கண்காணிக்கப் படுவதை உறுதி செய்ய ஒவ்வொருப் பள்ளியிலும் ஊட்டச் சத்து நிபுணர் நியமிக்கப்படுவார்.
  • இரத்த சோகை அதிகம் உள்ள மாவட்டங்களில், ஊட்டச்சத்துப் பொருட்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
  • பாரம்பரிய உணவு வகைகளை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டத்தின் கீழ் சமையல் போட்டிகளும் நடத்தப்படும்.
  • இது உள்ளூர்ப் பொருட்களின் அடிப்படையில் ஒரு புதுமையான உணவுப் பட்டியலாக இருக்கும்.
  • அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் மற்றும் அரசு முன் தொடக்க வகுப்பு அல்லது அங்கன்வாடிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப் பட உள்ளது.
  • திதி போஜன்என்ற கருத்து பரவலாக ஊக்குவிக்கப்படும்.
  • ஒரு சமூகப் பங்கேற்புத் திட்டமான திதி போஜன் என்பதில் மக்கள் பிரத்தியேக சந்தர்ப்பங்களில் அல்லது விழாக்களில் குழந்தைகளுக்கு என்று சிறப்பு உணவினை வழங்குவார்கள்.
  • குழந்தைகளுக்கு இயற்கை மற்றும் தோட்டக்கலைப் பற்றிய முதல்நிலை அனுபவத்தை வழங்குவதற்காக பள்ளிகளில் பள்ளி சத்துணவுப் பூங்காக்களை மேம்படுத்துவதை அரசு ஊக்குவித்து வருகிறது.
  • இந்தத் தோட்டங்களிலிருந்து அறுவடை செய்யப்படும் உணவுப் பொருட்களானது கூடுதல் நுண்ணூட்டச் சத்துக்களை வழங்கும் திட்டத்தில் பயன்படுத்தப்படும்.
  • இத்திட்டத்தின் கீழ் சமூகத் தணிக்கை என்பது அனைத்து மாவட்டங்களிலும் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
  • இரத்த சோகை அதிகம் உள்ள மாவட்டங்கள் மற்றும் ஆர்வமுள்ள மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்துப் பொருட்களை வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் ஈடுபாடு ஊக்குவிக்கப்படும்.
  • உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படும் வகையில் உள்ளூரில் விளையும் பாரம்பரிய உணவுப் பொருட்களைப் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும்.
  • புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது நிறுவனங்களின் மாணவர்களுக்கு முன்னேற்றக் கண்காணிப்பு மற்றும் ஆய்வுகளுக்கான களப் பயணங்கள் எளிதாக்கப் படும்.

முன்னோக்கிய பாதை

  • பீகாரின் பெட்டியா மாவட்டமும், மகாராஷ்டிராவின் தானே மாவட்டமும் மதிய உணவின் தரக் கண்காணிப்பாளர்களாக தாய்மார்களை நியமித்துள்ளன.
  • இது நல்ல பலனைத் தந்துள்ளது.
  • இது நாட்டின் மற்ற பகுதிகளிலும் பின்பற்றப்பட வேண்டும்.
  • பெரு நிறுவனங்களின் உதவியை நாடுவது ஒரு எளிதான வழியாகும்.
  • இது ஒப்பந்த தாரர்களின் அமைப்புக்கான கதவினைத் திறக்கும் வகையில் உள்ளது.
  • சிறந்த வசதிகளுக்கு என்று பொதுத் தனியார் கூட்டாண்மை ஊக்குவிக்கப்பட வேண்டும்
  • சமையல்காரர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்பட வேண்டும், அதனால் அவர்கள் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் வேலை செய்வார்கள்.
  • மதிய உணவு தயாரிப்பதற்குத் தேவையான எரிவாயு, சமையலறை மற்றும் உணவுப் பொருள்கள் சேமிப்பிடம் ஆகியவை முறையாக இருக்க வேண்டும்.
  • பள்ளிகளுக்கு நிதி மற்றும் நல்ல தரமான தானியங்களை சரியான நேரத்தில் அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும்.
  • உணவு தானியங்கள் மற்றும் சமைத்த உணவுகளின் தரம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து தரம் தொடர்பான அனைத்துப் புகார்களுக்கும் உடனடித் தீர்வு காண வேண்டும்.
  • தலைமுறைகளுக்கு இடையேயான பலன்களுக்காக, பள்ளி உணவுத் திட்டமானது விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும்.
  • பள்ளி அடிப்படையிலான சிகிச்சைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • மதிய உணவுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை அரசு அகற்ற வேண்டும்.
  • இந்தத் திட்டத்தின் நேர்மையான செயல்பாட்டைப் பேணுவதற்கு வலுவான கண்காணிப்பு வழிமுறைகளை நிறுவுதல் இன்றியமையாதது ஆகும்.
  • தொடர்ச்சியான ஆய்வுகள், பெற்றோர்கள் மற்றும் சமூகங்களை உள்ளடக்கிய பின்னூட்டங்கள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம்  வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்தலாம்.
  • இதன் பங்குதாரர்கள் தீவிரமாக இத்திட்டத்தின் கண்காணிப்பில் ஈடுபடும் போது ​அதன் சிக்கல்களை உடனடியாகக் கண்டறிந்து சரி செய்வது எளிதாகிறது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்