TNPSC Thervupettagam

மத்திய நிதிநிலை அறிக்கை 2020-21

March 20 , 2020 1758 days 3923 0
  • 2020 பிப்ரவரி 1 ஆம் தேதி அன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  2020-21 ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்தார்.
  • இது நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது நிதிநிலை அறிக்கையாகும். இந்த ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையானது மூன்று கருப்பொருள்களை மையமாகக் கொண்டுள்ளது. அவை, இந்தியாவின் இலக்கு, அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூகக் கவனிப்பு - மனிதாபிமானம் மற்றும் இரக்கம் என்பவையாகும்.

 

நிதிநிலை அறிக்கையின் மூன்று முக்கியக் கருப்பொருள்கள்

  • இந்தியாவின் இலக்கு - சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும்  சுகாதாரம், கல்வி மற்றும் சிறந்த வேலை வாய்ப்புகளில் அணுகலை ஏற்படுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்.
  • அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சி - “சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்”
  • சமூகக் கவனிப்பு - மனிதாபிமான மற்றும் கருணையுள்ள சமூகம்.
  • மூன்று பரந்த கருப்பொருள்களும் பின்வருபவற்றால் பிணைக்கப் பட்டுள்ளன:
    • ஊழல் இல்லாத, கொள்கை சார்ந்த நல்லாட்சி.
    • ஊழலற்ற மற்றும் சிறந்த நிதித் துறை.
  • மத்திய நிதிநிலை அறிக்கை  2020-21இன் மூன்று கருப்பொருள்களும்   வாழ்க்கை வாழ்வதை எளிமையாக்கலை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.

இந்தியாவின் இலக்குகளின் மூன்று பகுப்புகள்

  • விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் ஊரக வளர்ச்சி.
  • ஆரோக்கியம், நீர் மற்றும் சுகாதாரம்.
  • கல்வி மற்றும் திறன்கள்.

1.வேளாண்மை, நீர்ப்பாசனம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான பதினாறு செயல் திட்டங்கள்:

  • 16  செயல் திட்டங்களுக்கு 2.83 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது:
    • வேளாண்மை, நீர்ப்பாசனம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு 1.60 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது.
    • ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜிற்கு ரூ.1.23 லட்சம் கோடி ஒதுக்கப்பட உள்ளது.

விவசாயக் கடன்:

  • 2020-21ஆம் ஆண்டிற்கான விவசாயக் கடனானது ரூபாய் 15 லட்சம் கோடியாக இருக்குமென்று  இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

நீலப்  பொருளாதாரம்:

  • 2024-25 ஆண்டிற்குள் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மீன்வள ஏற்றுமதியை  அடைய  உள்ளது.
  • 2022-23 ஆண்டிற்குள் 200 லட்சம் டன் மீன் உற்பத்தியை இலக்காகக் கொண்டுள்ளது.

இந்திய இரயில்வேயால் பொது - தனியார் பங்கெடுப்பு மூலம் கிசான் ரெயில் திட்டம்:

  • அழுகக் கூடிய பொருட்களுக்கு (பால், இறைச்சி, மீன் போன்றவை) தடையற்ற  தேசியக் குளிர் விநியோகச் சங்கிலியை உருவாக்குதல்.
  • விரைவு மற்றும் சரக்கு ரயில்களில் குளிரூட்டப்பட்ட பெட்டிகள் அமைத்தல்.

உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தால் கிருஷி உதான் திட்டம் தொடக்கம்:

  • சர்வதேச மற்றும் தேசிய வழித்தடங்கள் இரண்டையும் இது உள்ளடக்கும்.
  • வடகிழக்கு மற்றும் பழங்குடியினர் வசிக்கும் மாவட்டங்கள் வேளாண் பொருட்களின் மேம்பட்ட மதிப்பை உணர்தல்.
  • தோட்டக்கலைத் துறையில் சிறந்த சந்தைப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதிக்காக  ஒரு பொருள் - ஒரு மாவட்டம் என்ற  திட்டமானது  செயல்பட உள்ளது.

கரிம, இயற்கை மற்றும் ஒருங்கிணைந்த விவசாயத்திற்கான நடவடிக்கைகள்:

  • ஜெய்விக் கெதி இணைய வாயில் – இணைய வழி தேசியக் கரிம பொருட்களின் சந்தையைப்  பலப்படுத்துதல்.
  • சுழியச் செலவு இயற்கை வேளாண்மையானது (ஜூலை 2019 நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது) சேர்க்கப்பட உள்ளது.

PM-KUSUM விரிவாக்கம்

  • 20 லட்சம் விவசாயிகளுக்குத் தனித்தியங்கும் சூரிய ஒளி இரைப்பான் அமைக்க மானியம் வழங்கப்பட உள்ளது.

கிராம சேமிப்புத் திட்டம்

  • பெண்கள், சுய உதவிக் குழுக்கள் ஆகியவை தான்யா லட்சுமி என்ற நிலையை மீண்டும் அடைதல்.

கால்நடைகள்:

  • 2025 ஆம் ஆண்டிற்குள்  53.5 மில்லியன் மெட்ரிக் டன்னிலிருந்து 108 மில்லியன் மெட்ரிக் டன்னாகப் பால் பதப்படுத்தும் திறனை இரட்டிப்பாக்குதல்.
  • செயற்கைக் கருவூட்டல் முறையை தற்போதைய 30% இல் இருந்து 70% ஆக அதிகரிக்கப் படுதல்.
  • தீவனப் பண்ணைகள் உருவாக்க, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தோடு இணைதல்.
  • கால்நடைகளில் புருசெல்லோசிஸ் மற்றும் கோமாரி  நோய்,  செம்மறி ஆடுகள் மற்றும் ஆடுகளுக்கு ஏற்படும் பெஸ்டே டெஸ் பெட்டிட்ஸ் ரூமினண்ட்ஸ் என்ற நோய் (Peste Des Petits ruminants) நோய் ஆகியவற்றை  2025 ஆம் ஆண்டிற்குள் ஒழித்தல்

2.ஆரோக்கியம், நீர் மற்றும் சுகாதாரம்:

  • ஒட்டுமொத்தச்  சுகாதாரத் துறைக்கு 69,000 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது.
  • இயந்திரவழிக் கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி சரியான முறையில் வடிவமைக்கப்பட்ட தடுப்பு விதிமுறைகளைக் கொண்டு நோய்களை எதிர்கொள்ளுதல்.
  • ஜன் ஆஷாதி கேந்திரா திட்டமானது 2024ஆம் ஆண்டிற்குள் அனைத்து மாவட்டங்களிலும் 2000 மருந்துகள் மற்றும் 300 அறுவைச் சிகிச்சை மருந்துகளை வழங்க உள்ளது.
  • 2025 ஆம் ஆண்டிற்குள் காசநோயை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உறுதியோடு  “காசநோய் ஹரேகா தேஷ் ஜீடெகா” என்ற பிரச்சாரம் தொடங்கப் பட்டுள்ளது.

3.கல்வி மற்றும் திறன்கள்

  • 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் ரூ. 99,300 கோடி கல்வித் துறைக்கும், ரூ.3000 கோடி திறன் மேம்பாட்டுக்கும் ஒதுக்கப் பட்டுள்ளது.
  • புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
  • அறிவியல், தடயவியல் மற்றும் இணையவழி-தடயவியல் ஆகியவற்றிற்காக தேசிய காவல் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய தடய அறிவியல் பல்கலைக் கழகமானது  முன்மொழியப் பட்டுள்ளது.
  • தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பில் இடம் பெற்ற முதல் 100 நிறுவனங்களால் பட்டப்படிப்புத் தர முழு அளவிலான இணைய வழிக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
  • புதிய பொறியாளர்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் ஒர் ஆண்டு வரை  உள்ளகப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
  • தற்போதுள்ள மாவட்ட மருத்துவமனைகளோடு  மருத்துவக் கல்லூரிகளைப் பொது-தனியார்ப் பங்களிப்பு முறையில் இணைக்க நிதி நிலை அறிக்கையானது முன்மொழிகிறது.
  • 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிப் பயிற்சி பெற்ற படிப்புகளை/பட்டயப் படிப்புகளை 150 உயர் கல்வி நிறுவனங்கள் தொடங்க உள்ளன.
  • கல்வித் துறைக்கு வெளிநாட்டு வணிகக் கடன் மற்றும் அன்னிய நேரடி முதலீடு செயல்படுத்தப்படும்.
  • ஸ்டடி இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்த்-சாட் தேர்வானது  முன்மொழியப் பட்டுள்ளது.

 

பொருளாதார வளர்ச்சி

  • 2020-21 ஆம் ஆண்டிற்கான தொழில் மற்றும் வர்த்தகத்தின் மேம்பாடு மற்றும் முன்னேற்றத்திற்காக  ரூபாய் 27,300 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.
  • முதலீட்டு அனுமதிப் பிரிவானது பின்வரும் நோக்கங்களோடு முன்மொழியப் பட்டுள்ளது:
    • "தொடக்கம் முதல் முடிவு வரை " என்ற வசதி மற்றும் ஆதரவை வழங்க.
    • ஒரு இணைய வாயில் மூலம் வேலை செய்ய.
  • தேசிய தொழில்நுட்ப ஜவுளித் திட்டம் அமைக்கப்பட உள்ளது.
  • அதிக ஏற்றுமதி கடன் விநியோகத்தை அடைய புதிய திட்டமான நிர்விக் என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது.
  • அரசு மின்னணுச் சந்தையின் மூலம் ரூ.3 லட்சம் கோடி வருமானம் ஈட்ட முன்மொழியப் பட்டுள்ளது.
  • “ஜீரோ டிஃபெக்ட் - ஜீரோ எஃபெக்ட்” என்ற உற்பத்தியைப் பற்றிய பிரதமரின் கொள்கைக்கு ஏற்ப அனைத்து அமைச்சகங்களும் தரமான நிலையான உத்தரவுகளை வழங்க உள்ளது.

உள்கட்டமைப்பு

  • அடுத்த 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்பில் ரூ.100 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது.
  • தேசிய உள்கட்டமைப்பு சங்கிலித் தொடர்:
    • ரூ.103 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்கள்; 31 டிசம்பர் 2019 அன்று தொடங்கப் பட்டது.
  • ஒரு தேசியத் தளவாடக் கொள்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது.

நெடுஞ்சாலைகள்:

  • டெல்லி-மும்பை அதிவேக நெடுஞ்சாலை மற்றும் வேறு இரண்டு தொகுப்புகளும் 2023 ஆம் ஆண்டிற்குள் முடிக்கப்பட உள்ளன.
  • சென்னை-பெங்களூரு அதிவேக நெடுஞ்சாலை தொடங்கப்பட உள்ளது.
  • 2024 ஆண்டிற்கு முன்னர், 6,000 கி.மீ.க்கு மேல் உள்ள குறைந்தது 12 நெடுஞ்சாலை நீட்டிப்புகளின் மூலம் வருவாய் பெற முன்மொழியப் பட்டுள்ளது.

இந்திய இரயில்வே:

  • முக்கியமான சுற்றுலாத்  தலங்களை இணைக்கக் கூடுதலான தேஜாஸ் வகை இரயில்கள் இயக்கப்பட உள்ளன.
  • மும்பை மற்றும் அகமதாபாத் இடையே அதிவேக இரயில் தொடங்கப் பட தீவிரமாக பரிசீலிக்கப்பட உள்ளது.
  • 18600 கோடி ரூபாய் செலவில் 148 கி.மீ நீளமுள்ள பெங்களூரு புறநகர் ரயில் போக்குவரத்துத் திட்டமானது நிறைவேற்றப்பட உள்ளது.
  • இந்திய இரயில்வேயின் சாதனைகள்
    • 550 வைஃபை (WiFi) வசதிகள் பல நிலையங்களில் நிறுவப் பட்டுள்ளன.
    • சுழிய அளவிலான ஆளில்லா இருப்புப் பாதை கடப்பு நிலை (Zero unmanned crossings).
    • 27000 கி.மீ. அளவிற்கு தடங்கள் மின்மயமாக்கப்பட உள்ளன.

துறைமுகங்கள் மற்றும் நீர் வழிகள்:

  • பிரதமரின் ஆர்த் கங்கா கருத்துப் படி ஆற்றங்கரைப் பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கப் பட வேண்டும்.

விமான நிலையங்கள்:

  • உதான் திட்டத்தை ஆதரிப்பதற்காக 2024 ஆம் ஆண்டிற்குள், மேலும் 100 விமான நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளன.
  • இந்த காலக்கட்டத்தில் இயங்கும் விமானங்களின் எண்ணிக்கை 600 முதல் 1200 வரை உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

மின்சாரம்:

  • திறமையாக மின் அளவிடல் ஊக்குவிக்கப்பட உள்ளது.

சக்தி:

  • 2020-21 ஆம் ஆண்டில் மின் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைக்கு ரூ.22,000 கோடி முன்மொழியப் பட்டுள்ளது.
  • தேசிய எரிவாயு அமைப்பைத் தற்போதைய 16200 கிமீ என்ற அளவில்  இருந்து 27000 கிமீ என்ற அளவு வரை விரிவுபடுத்த முன்மொழியப்பட்டு உள்ளது.

புதிய பொருளாதாரம்

  • பாரத்நெட் திட்டத்தின் வழியாக இந்த ஆண்டு 100,000 கிராமப் பஞ்சாயத்துகளை இணைக்க ஃபைபர் டு ஹோம் (Fibre to home) இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.

 

சமூகக் கவனிப்பு

  • சமூகக் கவனிப்பானது பின்வருபவற்றை முன்வைக்கிறது.
    • பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்,
    • சமூக நலம்,
    • கலாச்சாரம் மற்றும் சுற்றுலா.
  • 2020-21 நிதி ஆண்டில் ரூ.35,600 கோடியானது ஊட்டச்சத்து தொடர்பான திட்டங்களுக்கு முன்மொழியப் பட்டுள்ளது.
  • பெண்களுக்குரிய திட்டங்களுக்கு ரூ28,600 கோடி முன்மொழியப் பட்டுள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டில், பட்டியல் சாதியினர் மற்றும் பிற பிற்படுத்தப் பட்டோரின் நலனுக்காக ரூ.85,000 கோடி ரூபாய் முன்மொழியப் பட்டுள்ளது.
  • ரூ.53,700 கோடியானது பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் மேம்பாடு மற்றும் நலனுக்காக வழங்கப்பட உள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டில், மேம்படுத்தப்பட்ட ஒதுக்கீடாக ரூ. 9,500 கோடியானது மூத்தக் குடிமக்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் வழங்கப்பட உள்ளது.

கலாச்சாரம் மற்றும் சுற்றுலா

  • கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இந்தியப் பாரம்பரிய மற்றும் பாதுகாப்பு நிறுவனம், நிகர்நிலைப் பல்கலைக் கழக அந்தஸ்துடன் அமைக்கப் படும்  என்று முன்மொழியப் பட்டுள்ளது.
  • 5 தொல்பொருள் தளங்களில் அருங்காட்சியகங்கள்  அமைக்கப்பட உள்ளன.
    • ராகிகர்ஹி (ஹரியானா)
    • அஸ்தினாப்பூர் (உத்தரப் பிரதேசம்)
    • சிவ்சாகர் (அசாம்)
    • தோலவீரா (குஜராத்)
    • ஆதிச்சநல்லூர் (தமிழ்நாடு)
  • கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகமானது புதுப்பிக்கப் படும் என்று 2020 ஆண்டு ஜனவரி மாதத்தில் பிரதமர்  அறிவித்தார்.
  • கொல்கத்தாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய மின்ட் கட்டிடத்தில் நாணயவியல் மற்றும் வர்த்தகம் பற்றிய அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.
  • ராஞ்சியில் (ஜார்க்கண்ட்) ஒரு பழங்குடியினர் அருங்காட்சியகம் அமைப்பதற்கான முயற்சி எடுக்கப்படும்  என அறிவிக்கப் பட்டுள்ளது.
  • அகமதாபாத்திற்கு அருகிலுள்ள ஹரப்பா நாகரிக காலத்து கடல் தளமான  லோத்தலில், கடல்சார் அருங்காட்சியகமானது மத்தியக் கப்பல் துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட உள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்

  • டெல்லியைத் தலைமையகமாகக்  கொண்ட பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்பு மீதான கூட்டிணைவைப் பிரதமர் தொடங்கி உள்ளார்.
  • சர்வதேச சூரிய ஒளிக் கூட்டிணைவிற்கு அடுத்து இது அப்படியான ஒரு சர்வதேச முயற்சி

ஆட்சி முறை

  • வரி செலுத்துபவரின் சாசனமானது (Taxpayer charter) சட்டத்தின் மூலம்  குறிப்பிடப் படுவதின் வாயிலாக வரி நிர்வாகத்தில் நேர்மை மற்றும் செயல்திறனைக் கொண்டு வருதல்.
  • அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளில்  கெசட் தகுதி (உயர்பதவி தகுதி) பெறாத  பதவிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதில் முக்கியச் சீர்திருத்தங்கள்:
    • ஆட்சேர்ப்புக்காக, கணினி அடிப்படையிலான இணைய வழிப் பொதுத் தகுதி தேர்வினைத் தொழில்சார்ந்த மற்றும் நிபுணத்துவம் கொண்ட தனித்து இயங்கும் அமைப்பான ஒரு தேசிய ஆட்சேர்ப்பு நிறுவனம் மூலம் நடத்துதல்.
    • ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தேர்வு மையம் அமைத்தல்.
  • செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட சமீபத்திய தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் குறித்த புதிய தேசியக் கொள்கையை மேற்கொள்ளுதல்.
  • 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடத்தப்படவுள்ள ஜி20 மாநாட்டின் ஏற்பாடுகளைத் தொடங்க ரூபாய் 100 கோடியானது ஒதுக்கப் பட்டுள்ளது.

நிதித்துறை

  • பொதுத் துறை வங்கிகளில் நிறைவேற்றப்பட்டச் சீர்திருத்தங்கள்:
    • 10 வங்கிகள் 4 ஆக ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன.
    • ரூ. 3,50,000 கோடி மூலதனம் உட்புகுத்தப் பட்டுள்ளது.
  • வைப்புத் தொகை காப்பீட்டு மற்றும் கடன் உத்தரவாதக் கழகமானது  (DICGC), ஒரு வைப்பீட்டாளருக்கு அனுமதித்திருந்த வைப்புத் தொகை காப்பீட்டுத் தொகையை ரூ.1 லட்சத்திலிருந்து 5 லட்சமாக அதிகரித்து உள்ளது.
  • ஐடிபிஐ வங்கியில் தான் வைத்திருக்கும் இருப்புத் தொகையினை தனியார், சில்லறை மற்றும் நிறுவன முதலீட்டாளர்களுக்குப்  பங்குச் சந்தை மூலம் விற்க அரசு முடிவெடுத்திருக்கிறது.

நிதிச் சந்தை

  • நிலுவையில் உள்ள பங்குகளுக்காகப் பெருநிறுவன பத்திரங்களுக்கான  வெளிநாட்டுத் தொகுப்பு முதலீட்டு வரம்பு9% என்ற அளவிலிருந்து 15% ஆக உயர்த்தப் பட்டு உள்ளது.

முதலீடு விலக்கல்

  • ஆரம்பப் பொது வழங்கல் மூலம் எல்.ஐ.சியில் வைத்திருக்கும் ஒரு பகுதியை அரசாங்கம் விற்றல்.
  • பதினைந்தாவது நிதி ஆணையம்:
    • 2020-21 நிதியாண்டிற்கான முதல் அறிக்கையைப் பதினைந்தாவது நிதி ஆணையமானது வழங்கியுள்ளது.
    • ஐந்து ஆண்டுகளுக்கான (2021-22 இருந்து) அதன் இறுதி அறிக்கையானது  இந்த ஆண்டின் பிற்பகுதியில் சமர்ப்பிக்கப் படும்.

சரக்கு மற்றும் சேவை வரியின் இழப்பீட்டு நிதி:

  • 2016-17 மற்றும் 2017-18 ஆண்டுகளின் வசூலில் இருந்து பெறப்பட இருக்கும் நிலுவைத் தொகையானது இரண்டு தவணைகளில் GST இழப்பீட்டு நிதிக்கு மாற்றப் பட உள்ளது.

பொருளாதாரப் புள்ளி விவரங்கள்

 

  • 2019-20 நிதியாண்டுக்கு
    • திருத்தப்பட்டச் செலவின மதிப்பீடுகள்: ரூ .26.99 லட்சம் கோடி
    • திருத்தப்பட்ட வரவுகளின் மதிப்பீடுகள்: ரூ.19.32 லட்சம் கோடி என மதிப்பிடப் பட்டுள்ளது.
  • 2020-21 நிதியாண்டிற்கு:
    • மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பெயரளவு வளர்ச்சியானது 10% என மதிப்பிடப் பட்டுள்ளது.
    • வரவுகள் : ரூ .22.46 லட்சம் கோடி என மதிப்பிடப் பட்டுள்ளது
    • செலவு    : ரூ .30.42 லட்சம் கோடி என மதிப்பிடப் பட்டுள்ளது
  • திருத்தப்பட்ட மதிப்பீட்டில் 2019-20 ஆம் நிதியாண்டில் 3.8% நிதிப் பற்றாக்குறையும்  2020-21 ஆண்டின் நிதிநிலை அறிக்கையின் மதிப்பீட்டில் 3.5% நிதிப் பற்றாக்குறையும் மதிப்பிடப் பட்டுள்ளது. 

 

  • நிகரச் சந்தைக் கடனானது
    • 2019-20க்கு ரூ.4.99 லட்சம் கோடியாகும்
    • 2020-21க்கு ரூ.5.36 லட்சம் கோடியாகும்.

நேரடி வரி

வரி விதிக்கக் கூடிய வருமான வரம்பு (ரூ.)

நடைமுறையில் உள்ள வரி விகிதங்கள்

புதிய வரி விகிதங்கள்

0-2.5 லட்சம்

வரி விலக்கு

வரி விலக்கு

2.5-5 லட்சம்

5%

5%

5-7.5 லட்சம்

20%

10%

7.5-10 லட்சம்

20%

15%

10-12.5 லட்சம்

30%

20%

12.5-15 லட்சம்

30%

25%

15 லட்சத்திற்கு மேல்

30%

30%

 

பெருநிறுவன வரி:

  • புதிய மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு 15% வரி விகிதம் நீட்டிக்கப் பட்டுள்ளது.
  • இந்தியப்  பெருநிறுவன வரி  விகிதங்கள் உலகளவில்  மிகக் குறைவான அளவைக் கொண்டதாகும்.

தொடக்க நிறுவனங்கள்:

  • 100 கோடி வருவாய் ஈட்டும் தொடக்க நிறுவனங்கள், 3 தொடர்ச்சியான மதிப்பீட்டு ஆண்டுகளில் (10 ஆண்டுகளில்) 100% வரி விலக்கை அனுபவிக்கலாம்.  

கூட்டுறவு சங்கங்கள்:

  • நிறுவனங்களுக்குக் குறைந்தபட்ச மாற்று வரியிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டதைப் போலவே கூட்டுறவுச்  சங்கங்களுக்கும் குறைந்தபட்ச மாற்று வரியிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.

வரி வசதி நடவடிக்கைகள்

  • உடனடியான  நிரந்தரப் பதிவு எண் ஆனது இணைய வழியில் ஆதார் மூலம் பெறுதல்.
  • நேரடி வரிகளில் வழக்குகளை குறைக்க விவாத் சே விஸ்வாஸ் என்ற திட்டமானது  ஜூன் 30 2020க்குள் நிறைவேற்றப்பட உள்ளது.
  • வருமான வரிச் சட்டத்தைத் திருத்துவதன் மூலம் மறைமுக முறையீடுகள் செயல்படுத்தப் படுதல்.

மறைமுக வரி

  • சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்களில் கலால் வரியை உயர்த்த உத்தேசிக்கப் பட்டுள்ளது
  • ஜவுளித் துறைக்கு நன்மை பயக்கும் வகையில் சுத்தீகரிக்கப்பட்ட டெரிபத்தாலிக் அமிலம் (Purified Terephthalic Acid) மீதான எதிர்க் குவிப்புத் தடுப்பு வரி இரத்து செய்யப் பட்டுள்ளது.

 

இதுவரை எட்டிடாத மைல்கற்கள் மற்றும் இந்தியப்  பொருளாதாரத்தின் சாதனைகள்:

  • இந்தியா இப்பொழுது உலகின் ஐந்தாவது மிகப்பெரியப் பொருளாதாரமாகும்.
  • 2014-19 ஆம் ஆண்டில் சராசரி வளர்ச்சியானது  7.4% ஆகவும், பணவீக்கம் சராசரியாக 4.5% ஆகவும்  இருந்தது.
  • 2006-16 ஆகிய காலக்கட்டங்களில் 271 மில்லியன் மக்கள் வறுமையிலிருந்து மீட்கப் பட்டுள்ளனர்.
  • இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு 2014-19 ஆம் ஆண்டில் 284 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தப் பட்டது (2009-14 ஆம் ஆண்டில் 190 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து).
  • மத்திய அரசின் கடனானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52.2% (மார்ச் 2014) இல் இருந்து  48.7% (மார்ச் 2019)  ஆகக் குறைக்கப் பட்டுள்ளது.

எண்மப் புரட்சியால் (டிஜிட்டல்) உந்தப்படும் இந்தியாவின் தனித்துவமான உலகளாவிய தலைமையைத் தக்க வைத்துக் கொள்வதற்கான எதிர்கால நோக்கம்:

  • டிஜிட்டல் ஆட்சிமுறை மூலம் சேவைகளைத் தடையின்றி வழங்குதல்.
  • தேசிய உள்கட்டமைப்பு சங்கிலித் தொடர் மூலம் அதன் தரத்தை மேம்படுத்துதல்.
  • பேரழிவு தாங்குந்தன்மை மூலம் ஆபத்தைக் குறைத்தல்.
  • ஓய்வூதியம் மற்றும் காப்பீடு மூலம் சமூகத்தைப்  பாதுகாத்தல்.

ó ó ó ó ó ó ó ó ó ó

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்