- 2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தாக்கல் செய்தார்.
- இது டிஜிட்டல் வழியில் தாக்கல் செய்யப்பட்ட முதல் மத்திய நிதிநிலை அறிக்கையாகும்.
- இந்த நிதியாண்டுக்கான திட்டங்கள் ஆறு கருத்துருக்களின் அடிப்படையில் முன் வைக்கப் பட்டுள்ளன. அவை
- சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு,
- நிதி மூலதனம் மற்றும் உள்கட்டமைப்பு,
- இலட்சிய இந்தியாவை உள்ளடக்கிய வளர்ச்சி,
- மனித மூலதனத்தைப் புத்துயிரூட்டல்,
- புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மற்றும்
- குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை என்பவையாகும்.
- சுதந்திர இந்தியாவின் முதல் நிதிநிலை அறிக்கையானது 1947 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப் பட்டது
- நிதிநிலை அறிக்கையில் 2020-21 ஆம் ஆண்டை விட 2021-22 ஆம் ஆண்டில் சுகாதாரம் மற்றும் நல்வாழ்விற்கான செலவினம் 137% அதிகரிப்பைக் கொண்டுள்ளது.
சுகாதாரம் மற்றும் தூய்மை:
- முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதாரச் சேவை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக பிரதான் மந்திரி ஆத்மநிர்பர் ஸ்வஸ்திய பாரத் யோஜனா என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது.
- 112 இலட்சிய மாவட்டங்களில் ஊட்டச்சத்து விளைவுகளை மேம்படுத்த மிஷன் போஷான் 2.0 என்ற திட்டம் தொடங்கப்படும்.
- 32 விமான நிலையங்கள், 15 கடல்பகுதித் துறைமுகங்கள் மற்றும் நிலப்பகுதித் துறைமுகங்கள் ஆகியவற்றின் நுழைவுப் பகுதிகளில் 17 புதிய பொது சுகாதார அலகுகள் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்.
- நாடு முழுவதும் சிறந்த நீர் விநியோகத்தை அளிப்பதை நோக்கமாகக் கொண்ட நகர்ப்புற ஜல் ஜீவன் என்ற திட்டம் தொடங்கப்படும்.
- நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டம் வலுப்படுத்தப் படும்.
கல்வி:
- 100 புதிய சைனிக் பள்ளிகள் அமைக்கப்பட உள்ளன.
- பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் 750 ஏகலவ்யா பள்ளிகள் அமைக்கப்பட உள்ளன.
- லடாக்கில் ஒரு மத்திய பல்கலைக்கழகம் வர உள்ளது.
உள்கட்டமைப்பு:
- பழைய மற்றும் தகுதியற்ற வாகனங்களை வெளியேற்ற வாகன உடைப்புக் கொள்கை கொண்டு வரப்படும்.
- இதன் கீழ் அனைத்து வாகனங்களும் ஒவ்வொரு 20 வருடங்களுக்கும் (தனிநபர் வாகனங்கள்) மற்றும் ஒவ்வொரு 15 வருடங்களுக்கும் (வணிக வாகனங்கள்) தானியங்கி தகுதி மையங்களில் தகுதிச் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
- கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் நெடுஞ்சாலை மற்றும் சாலை மேம்பாட்டுப் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- சொத்துப் பணமாக்குதல் செயல்முறையைக் கண்காணிக்க தேசிய சொத்துப் பணமாக்குதல் என்ற திட்டம் தொடங்கப் படும்.
- 2030 ஆம் ஆண்டிற்குள் எதிர்காலத்தின் தேவைக்கேற்ற வகையில் இரயில்வே அமைப்பைக் கொண்டு வர தேசிய இரயில் திட்டம் ஒன்று உருவாக்கப்படும்.
- இரயில்வேயில் 100% மின்மயமாக்கல் 2023 ஆம் ஆண்டிற்குள் முடிக்கப்பட உள்ளது.
- 27 நகரங்களில் புது மெட்ரோ ரயில் சேவைகள் அறிவிக்கப் பட்டுள்ளன, மேலும் அதோடு சேர்த்து கொச்சி மெட்ரோ, சென்னை மெட்ரோவின் 2ஆம் கட்டம், பெங்களூரு மெட்ரோவின் 2A மற்றும் B கட்டம், நாசிக் மெட்ரோ மற்றும் நாக்பூர் மெட்ரோ ஆகிய திட்டங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு உள்ளது.
- பசுமை ஆற்றல் மூலங்களிலிருந்து ஹைட்ரஜனை உருவாக்க தேசிய ஹைட்ரஜன் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
- துறைமுகங்களின் மறுசுழற்சி திறன் 2024 ஆம் ஆண்டிற்குள் இரட்டிப்பாக்கப்பட உள்ளது.
- ஜம்மு-காஷ்மீரில் எரிவாயு குழாய்த் திட்டம் அமைக்கப்பட உள்ளது.
- மேலும் 1 கோடிப் பயனாளிகளுக்கு பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (எல்பிஜி திட்டம்) நீட்டிக்கப்பட உள்ளது.
வரி:
- ஓய்வூதியம் மற்றும் வைப்புத் தொகையிலிருந்து வட்டி பெறும் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- வருமான வரி மதிப்பீடு தொடர்பான வழக்குகளை மீண்டும் விசாரிக்கும் வசதிக்கான காலக்கெடு 6 ஆண்டுகளிலிருந்து 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
- இருப்பினும், கடுமையான வரி ஏய்ப்பு வழக்குகளில் (ரூ .50 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டவை) இது 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்.
- மலிவு விலையில் அமைந்த வீட்டுவசதித் திட்டங்கள் ஒரு வருடத்திற்கு வரி விலக்கு பெறும்.
- ரூ. 5 கோடிக்கு மிகாத மொத்த ஆண்டு வருவாய் கொண்ட சிறிய அறக்கட்டளைகளின் இணக்கச் சுமை எளிதாக்கப்பட உள்ளது.
- தாமிரக் கழிவுகள் மீதான வரி 2.5% ஆக குறைக்கப் பட்டுள்ளது.
- தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி விகிதங்கள் மாற்றி யமைக்கப்படவுள்ளன.
- நாப்தா மீதான வரி 2.5% ஆகக் குறைக்கப் பட்டுள்ளது.
- சோலார் இன்வெர்ட்டர்களுக்கான வரி 5% முதல் 20% வரை உயர்த்தப் பட்டது.
- சூரியஒளி விளக்குகளின் வரி 5% முதல் 15% வரை உயர்த்தப் பட்டது.
- அனைத்து நைலான் தயாரிப்புகளுக்கும் 5% சுங்க வரி விதிக்கப் படும்.
- சுரங்க அகழெந்திரங்கள் 7% சுங்க வரியை ஈர்க்கும்.
- பருத்தி மீதான சுங்க வரி 0% என்ற அளவிலிருந்து 10% ஆக உயர்த்தப் பட்டது.
- யூரியா, ஆப்பிள், கச்சா சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய், கச்சா பாமாயில், காபூலி சன்னா மற்றும் பட்டாணி உள்ளிட்ட பொருட்கள் மீது விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி முன்மொழியப் பட்டுள்ளது.
பொருளாதாரம் மற்றும் நிதி:
- நிதிப் பற்றாக்குறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5% ஆக உள்ளது; இது 2021-22 ஆம் ஆண்டில் 6.8% ஆக இருக்குமென மதிப்பிடப் பட்டுள்ளது.
- இந்த ஆண்டு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 4% வரை கடன்களை உயர்த்த மாநிலங்களை அனுமதிக்கும் திட்டம் முன்மொழியப் பட்டு உள்ளது.
- செபி சட்டம், டெபோசிடரிஸ் சட்டம் மற்றும் வேறு இரண்டு சட்டங்களின் விதிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் ஒரு ஒருங்கிணைந்த ஆவணச் சந்தைக் குறியீடு உருவாக்கப் பட உள்ளது.
- அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை 49% என்ற அளவிலிருந்து 74% ஆக உயர்த்த முன்மொழியப் பட்டுள்ளது .
- பாதிப்புக்குள்ளான கடன்களைக் கையகப்படுத்த ஒரு சொத்துப் புனரமைப்பு நிறுவனம் அமைக்கப்படும்.
- வங்கி வைப்புத் தொகையாளர்களுக்கு வைப்புத் தொகைக்கானக் காப்பீடு ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- இரண்டு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஒரு பொதுக் காப்பீட்டு நிறுவனத்திலிருந்து இந்த ஆண்டு முதலீடு திரும்பப் பெறப்பட உள்ளது.
- ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் ஆரம்பப் பொது பங்கு விடுப்புகள் இந்த நிதியாண்டில் அறிமுகம் ஆகும்.
- BPCL, IDBI வங்கி, ஏர் இந்தியா ஆகியவற்றின் மூலோபாய விற்பனை முடிக்கப்பட உள்ளது.
வேளாண்மை:
- வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக விவசாய உள்கட்டமைப்பு நிதி எளிதில் கிடைக்கும் வண்ணம் இருக்குமாறு நிறைவேற்றப் பட்ட உள்ளது.
- மேலும் 1,000 மண்டிகள் தேசிய வேளாண் சந்தை இடத்தில் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.
- சென்னை, கொச்சி, பாரதீப் உள்ளிட்ட இடங்களில் ஐந்து முக்கிய மீன்பிடி மையங்கள் உருவாக்கப்பட உள்ளன.
- தமிழ்நாட்டில் ஒரு பல்நோக்கு கடற்பாசிப் பூங்கா நிறுவப்பட உள்ளது.
வேலைவாய்ப்பு:
- நிறுவனம் சாரா நிரந்தரமற்ற தொழிலாளர்கள் (gig workers) மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் பற்றிய தகவல்களைப் பராமரிக்க ஒரு தளம் தொடங்கப்பட உள்ளது.
- நிறுவனம் சாரா நிரந்தரமற்ற தொழிலாளர்கள் மற்றும் நடைபாதைத் தொழிலாளர்கள் ஆகியோருக்குச் சமூகப் பாதுகாப்பு விரிவாக்கப்பட உள்ளது.
- ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டத்தின் மூலம் கடன்களுக்குத் தேவையான குறைந்தபட்ச மூலதனமானது எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் போன்றச் சமூகத்தினருக்கு 25% என்ற அளவிலிருந்து 15% ஆக குறைக்கப்பட உள்ளது.
- - - - - - - - - - - - -