TNPSC Thervupettagam

மத்தியப் பட்ஜெட் 2025 - 2026

February 12 , 2025 11 hrs 0 min 150 0

மத்தியப் பட்ஜெட் 2025 - 2026

(For English version to this please click here)

  • அறிமுகம்

  • தொடர்ச்சியான 8வது பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து எட்டாவது மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2025 அன்று தாக்கல் செய்தார்.

  • நான்கு துறைகளில் முக்கிய கவனம்:
  • பட்ஜெட் நான்கு முக்கிய துறைகளின் மூலம் பொருளாதார வளர்ச்சியை உந்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அவையாவன:
  • விவசாயம்
  • MSME நிறுவனங்கள் (குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்)
  • முதலீடு
  • ஏற்றுமதி.

  • விக்சித் பாரதத்தின் குறிக்கோள்: இந்த முக்கியத் துறைகளை வலுப்படுத்துவதன் மூலம் இந்தியாவை விக்சித் பாரதமாக 2047 (வளர்ச்சியடைந்த இந்தியா 2047) மாற்றுவதே பட்ஜெட்டின் மையக் குறிக்கோள் ஆகும்.
  • நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு முக்கியத்துவம்: சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் நன்மைகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், நிலையான, சமமான வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக பட்ஜெட் வடிவமைக்கப் பட்டுள்ளது.

  • விக்சித் பாரதத்திற்கான இலக்குகள்
  • வளர்ச்சியைத் துரிதப்படுத்துதல்.
  • பாதுகாப்பான உள்ளடக்கிய மேம்பாடு.
  • இந்தியாவில் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினரின் செலவினச் சக்தியை மேம்படுத்துதல்.
  • தனியார் துறை முதலீடுகளை ஊக்குவித்தல்.

  • விவசாய வளர்ச்சி மற்றும் கிராமப்புறச் செழிப்பை உருவாக்குதல்
  • பிரதம மந்திரி தன்-தன்ய கிரிஷி யோஜனா
  • வேளாண் மாவட்டங்களுக்கான திட்டத்தை உருவாக்குதல்.
  • 1.7 கோடி விவசாயிகளை இலக்காகக் கொண்டு 100 மாவட்டங்களில் கவனம் செலுத்துகிறது.

  • KCC (கிசான் கடன் அட்டை) மூலம் மேம்படுத்தப்பட்ட கடன்
  • மேம்படுத்தப்பட்ட கடன் தொகை ₹5 லட்சம் என்பதின் மூலம் 7.7 கோடி விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் பண்ணையாளர்களுக்கு குறுகிய காலக் கடன்களை வழங்குதல்,.

  • அதிக மகசூல் தரும் விதைகளுக்கான தேசிய திட்டம்
  • அதிக மகசூல் தரக்கூடிய, பூச்சிகளை எதிர்க்கும் தன்மை கொண்ட மற்றும் பருவநிலையை ஏற்றுக் கொள்ளும் விதைகளை உருவாக்கிப் பரப்புதல்.
  • பருத்தி உற்பத்திக்கான நோக்கம்
  • பருத்தி விவசாய உற்பத்தித் திறன் மற்றும் நிலைத் தன்மைக்கான 5 ஆண்டு குறுகிய காலத் திட்டம்.
  • பீகாரில் மக்கானா வாரியம்
  • உற்பத்தி, செயலாக்கம், மதிப்புக் கூட்டல் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றை மேம்படுத்த, FPO நிறுவனங்களின் (விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகள்) அமைப்புடன் இணைந்து நிறுவுகிறது.

  • பருப்பு வகைகளில் ஆத்ம நிர்பரதா
  • துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் மைசூர் பருப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட 6 ஆண்டு குறுகிய காலத் திட்டத்தைத் தொடங்க உள்ளது.
  • தட்பவெப்ப நிலையைத் தாங்கும் விதைகள், புரத உள்ளடக்கத்தை மேம்படுத்துதல், உற்பத்தித் திறனை அதிகரிப்பது மற்றும் அறுவடைக்குப் பிந்தையச் சேமிப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • கிராமப்புறப் பொருளாதாரத்திற்கான செயலூக்கியாக இந்திய அஞ்சல்துறை
  • கிராமப்புறச் சமூக மைய இணை இடம்
  • DBT (நேரடிப் பலன் பரிமாற்றம்), பணம் எடுத்தல் சேவை மற்றும் EMI பெறுதல் போன்ற சேவைகளை வழங்குகிறது.
  • நிறுவனக் கணக்குச் சேவைகள்
  • குறு நிறுவனங்களுக்குக் கடன் சேவைகள்.
  • காப்பீடு & உதவி எண்மச் சேவைகள்.
  • குறு நிறுவன மேலாண்மை.
  • விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்தல்.
  • முக்கியக் குழுக்களுக்கான வளர்ச்சி நடவடிக்கைகள்
  • கரீப் (ஏழைகள்).
  • இளைஞர்கள்.
  • அன்னதாதா (விவசாயிகள்).
  • நாரி (பெண்கள்).

  • MSME நிறுவனங்கள் மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டங்களின் மூலம் இந்தியாவை மேம்படுத்துதல்
  • குறு நிறுவனங்களுக்கான கடன் அட்டைகள்
  • உத்யம் தளத்தில் பதிவு செய்யப்பட்ட குறு நிறுவனங்களுக்கு ₹5 லட்சம் வரம்புடன் தனிப் பயனாக்கப்பட்ட கடன் அட்டைகளை வழங்குகிறது.
  • முதல் ஆண்டில் 10 லட்சம் அட்டைகள் வழங்கப்படவுள்ளது.
  • முதல் முறை தொழில்முனைவோருக்கான திட்டம்
  • முதல் முறை தொழில்முனைவோருக்கு (பெண்கள், பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பட்டியலிடப் பட்ட பழங்குடியினர் உட்பட) 5 லட்சம் வழங்கக் கூடிய புதிய திட்டம்.
  • அடுத்த 5 ஆண்டுகளில் ₹2 கோடி வரையிலான பருவ காலக் கடன்கள்.
  • தொழிலாளர் - தீவிரத் துறைகளுக்கான உற்பத்தித் திட்டம்
  • தொழிலாளர் - தீவிரத் துறைகளுக்கான முக்கிய நடவடிக்கைகள்
  • வணிகம் செய்வதை எளிதாக்குதல், எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் பணியாளர்கள், தொழில்நுட்ப இருப்பு மற்றும் சரியான தொழில்நுட்ப உற்பத்தி ஆகியன பருவநிலைக்கு ஏற்ற மேம்பாட்டிற்காக கவனம் செலுத்துகிறது.
  • கடன் கிடைப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
  • MSME நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கான அதிகரிக்கப்பட்ட கடன் உத்தரவாதப் பாதுகாப்பு.

  • காலணி மற்றும் தோல் துறைகளுக்கான ஃபோகஸ் (கவனம்) தயாரிப்புத் திட்டம்
  • 22 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், ₹4 லட்சம் கோடி வருவாய் ஈட்டவும், ஏற்றுமதியில் ₹1.1 லட்சம் கோடியும் எதிர்பார்க்கப் படுகிறது.
  • உணவுப் பதப்படுத்துதலுக்கான ஆதரவு
  • பீகாரில் தேசிய உணவுத் தொழில்நுட்ப நிறுவனம் நிறுவப் படுதல்.
  • மேம்படுத்தப்பட்ட விவசாயிகளின் வருமானம், திறன்கள் மற்றும் தொழில்முனைவு வாய்ப்புகள்.
  • கடன் வகைப்பாடு & MSME நிறுவனங்களுக்கான ஆதரவு
  • MSME நிறுவனங்களுக்கான திருத்தப்பட்ட வகைப்படுத்தல் அளவுகோல்கள்

  • ஏற்றுமதியாளர் MSME நிறுவனங்கள்
  • ₹20 கோடி வரையிலான பருவ காலக் கடன்களுக்கான ஆதரவு.
  • மக்கள், பொருளாதாரம் மற்றும் புதுமை ஆகியவற்றில் முதலீடு செய்தல்
  • சக்சாம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0
  • அங்கன்வாடிகளுக்கான திறன் மற்றும் வளங்களை விரிவுபடுத்துதல் மற்றும் போஷன் 2.0 திட்டத்தை மேம்படுத்துதல்.
  • இந்தியத் தொழில் நுட்பக் கழகங்களில் திறன் விரிவாக்கம்
  • இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களில் (IITs) உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியை அதிகரிக்க திறன் மற்றும் வளங்களை அதிகரித்தல்.
  • மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள தினசரி புற்றுநோய் மையங்கள்
  • சுகாதார வசதிகளை மேம்படுத்த அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சை மையங்களை நிறுவுதல்.

  • பாரதிய பாஷா புஸ்தக் திட்டம்
  • மொழியியல் பன்முகத் தன்மையை மேம்படுத்துவதற்காக பள்ளி மற்றும் உயர் கல்விக்கான எண்ம வடிவில் இந்திய மொழிப் புத்தகங்களை வழங்குகிறது.
  • தேசியத் திறன் மையங்கள்
  • உலகளாவிய நிபுணத்துவம் மற்றும் கூட்டாண்மைகளுடன் திறமைக்காக, 5 தேசியச் சிறப்பு மையங்களை அமைக்கவுள்ளது.
  • அடல் மேம்படுத்தும் ஆய்வகங்கள்
  • புதுமை மற்றும் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் 50,000 ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
  • கல்விக்கான செயற்கை நுண்ணறிவுக்கான (AI) சிறந்த மையம்
  • AI சார்ந்த கல்வி முயற்சிகளுக்கு மொத்தம் ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • கிராமப்புறங்களுக்கான அகலப் பட்டை வரிசை இணைப்பு
  • கிராமப்புறங்களில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அகலப் பட்டை வரிசை இணைப்பு வழங்கப்படவுள்ளது.
  • மருத்துவக் கல்வியின் விரிவாக்கம்
  • அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 மருத்துவ இடங்களை அதிகரிக்கும் இலக்குடன், 10,000 இடங்களைச் சேர்த்தல்.
  • பிரதம மந்திரி SVANIdhi திட்ட மறுசீரமைப்பு
  • வங்கிகளில் இருந்து மேம்படுத்தப்பட்ட கடன்கள், UPI - இணைக்கப்பட்ட கடன் அட்டைகள் மற்றும் திறனை வளர்ப்பதற்கான ஆதரவுடன் திட்டத்தை மறுசீரமைத்தல்.
  • தொழிலாளர்களின் நலன் சார்ந்த இணையதள இயங்குதளம்
  • இ-ஷ்ரம் தளத்தில் பதிவு செய்தல் மற்றும் பிரதம மந்திரி  ஜன ஆரோக்யா யோஜனாவின் கீழ் சுகாதார ஆதரவு.
  • உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு மாநிலங்களுக்கு ஆதரவு
  • மாநிலங்களுக்கு 50 ஆண்டு வட்டியில்லாத கடன்கள்
  • மூலதனச் செலவுகள் மற்றும் சீர்திருத்தங்களை ஊக்குவிக்கும் வகையில் 50 வருட வட்டியில்லாத கடனுக்காக ₹1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
  • ஜல் ஜீவன் திட்டம்
  • குடிநீர் விநியோகத்தில் 100% பரவலை அடைய மேம்படுத்தப்பட்ட மொத்தச் செலவினத்துடன் 2028 வரை இந்தத் திட்டம் நீட்டிக்கப் பட்டுள்ளது.
  • மின்துறை சீர்திருத்தங்கள்
  • விநியோகச் சீர்திருத்தங்கள் மற்றும் மாநிலங்களுக்குள் பரிமாற்றம் அதிகரிப்பதற்காக என ஊக்கத் தொகை.
  • சீர்திருத்தத்தைச் செயல்படுத்துவதன் மூலம் மாநிலங்களுக்கு அதன் GSDPயில் 0.5% கூடுதல் கடன் வாங்கும் திறன்.
  • சொத்துகளைப் பணமாக்குதல் திட்டம் (2025-30)
  • புதிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக, சொத்துகளைப் பணமாக்குதல் மூலம் ₹10 லட்சம் கோடி நிதி திரட்ட இந்தத் திட்டம் தொடங்கப்  பட்டது.

  • நகர்ப்புற சவால் நிதி
  • 'வளர்ச்சி மையங்களாக நகரங்கள்' மற்றும் 'நகரங்களின் ஆக்கப்பூர்வமான மறுவடிவமைப்பு' போன்ற திட்டங்களை செயல்படுத்த ₹1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
  • கடல்சார் மேம்பாட்டு நிதி
  • சுமார் 49 % வரையிலான அரசாங்கப் பங்களிப்புடன் நீண்ட கால கடல்சார் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியளிக்க ₹25,000 கோடி நிதி உதவி.
  • விக்சித் பாரத்க்கான அணுசக்தி திட்டம்
  • அணுசக்தி மற்றும் உரிமையியல் பொறுப்புச் சட்டங்களுக்கான திருத்தங்கள்
  • அணுசக்தி வளர்ச்சியில் தனியார் துறைப் பங்களிப்பை எளிதாக்குவதற்கான திருத்தங்கள் மேற்கொள்ளப் பட உள்ளன.
  • பிராந்திய இணைப்புக்கான உதான் திட்டம்
  • அடுத்த 10 ஆண்டுகளில் 4 கோடி பயணிகளை ஏற்றிச் செல்லும் இலக்குடன், 120 புதிய இடங்களுக்கு பிராந்திய இணைப்பு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

  • பீகாரின் பசுந்தட விமான நிலையங்கள் மற்றும் கோஷி கால்வாய் திட்டங்கள்
  • பசுந்தட விமான நிலையங்கள் மற்றும் பீகாரில் மேற்கு கோஷி கால்வாய் ERM (கிழக்கு மண்டல மேலாண்மை) திட்டம் போன்ற திட்டங்களுக்கு நிதி உதவி.

  • வேலைவாய்ப்பு சார்ந்த வளர்ச்சிக்கான சுற்றுலா
  • சுவாமித் நிதி-2
  • நகர்ப்புற வளர்ச்சிக்காக கலப்பு நிதி மூலம் 1 லட்சம் குடியிருப்புகளை முடிக்க ₹15,000 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

  • சிறந்த 50 சுற்றுலாத் தலங்களின் வளர்ச்சி
  • மாநிலங்களுடனான சுற்றுலாத் தலங்களின் கூட்டு வளர்ச்சி, சுற்றுலா மற்றும் உள்ளூர்ப் பொருளாதாரங்களை மேம்படுத்துதல்.
  • நெறிப்படுத்தப்பட்ட மின்னணு-விசா வசதிகள்
  • எளிதான பயணத்திற்காக எளிமைப்படுத்தப்பட்ட மின்னணு-விசா வசதிகள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.
  • தீவிர திறன் மேம்பாட்டுத் திட்டங்கள்
  • சுற்றுலா தொடர்பான துறைகளில் வேலைவாய்ப்பை மேம்படுத்த இளைஞர்களை இலக்காகக் கொண்ட திறன் மேம்பாட்டு முயற்சிகள்.
  • மாநிலங்களுக்கான செயல்திறனுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை
  • சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், முதலீடுகளை ஈர்ப்பதற்கும் மாநிலங்களுக்கான நிதிச் சலுகைகளை வழங்குதல்.
  • தங்கும் விடுதிகளுக்கான முத்ரா கடன்கள்
  • முத்ரா கடன்கள் தங்கும் விடுதி வணிகங்களை எளிதாக்குகிறது, கிராமப்புறச் சுற்றுலா மற்றும் தொழில்முனைவுக்கு ஆதரவளிக்கிறது.

  • பயணத்தை எளிமையாக்கல் மற்றும் இணைப்பு
  • பயண வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் முக்கியச் சுற்றுலாத் தலங்களுக்கான இணைப்பு, அணுகலை மேம்படுத்துதல்.
  • மக்கள், பொருளாதாரம் மற்றும் புதுமை ஆகியவற்றில் முதலீடு செய்தல்
  • PM ஆராய்ச்சி உதவித்தொகை
  • புதுமை மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்க இந்தியத் தொழில்நுட்பக் கழகம் மற்றும் இந்திய அறிவியல் கழகத்தில் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக 10,000 என்ற அளவிற்கு உதவித் தொகைகளை வழங்குதல்.
  • பயிர்களுக்கான மரபணு வங்கி
  • எதிர்கால உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பிற்காக 10 லட்சம் பயிர்களுக்கான குறியீடுகளுடன் 2வது மரபணு வங்கியை நிறுவுதல்.
  • கியான் பாரதம் மிஷன்
  • இந்தியப் பாரம்பரியத்தின் 1 கோடிக்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகளை ஆவணப் படுத்துதல் மற்றும் பாதுகாத்தல்.
  • அறிவைப் பகிர்வதற்கு வசதியாக இந்தியக் கல்வியறிவு அமைப்புகளுக்கான தேசிய எண்மக் களஞ்சியத்தை நிறுவுதல்.

  • ஆராய்ச்சி, மேம்பாடு & புதுமை
  • தனியார் துறை சார்ந்த ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமையான முயற்சிகளை செயல்படுத்த ₹20,000 கோடி ஒதுக்கீடு.
  • தேசியப் புவியியல் திட்டம்
  • அடித்தளப் புவிசார் உள்கட்டமைப்பு மற்றும் தரவுகளின் வளர்ச்சி.
  • நில பதிவுகள், நகர்ப்புற திட்டமிடல் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் ஆகியவற்றை நவீனப்படுத்த பிரதம மந்திரி கதி சக்தி திட்டத்தைப் பயன்படுத்துதல்.
  • ஏற்றுமதியை ஊக்குவித்தல்
  • ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டம்
  • ஏற்றுமதி கடனை எளிதாக அணுகுவதற்கு என்று துறை சார்ந்த இலக்குகளை அமைத்தல்.
  • வெளிநாட்டு சந்தைகளில் வரி அல்லாத தடைகளை கடக்க MSME நிறுவனங்களுக்கு உதவி வழங்குதல்.
  • பாரத் டிரேடு நெட் (BharatTradeNet BTN)
  • சர்வதேச வர்த்தகத்திற்கான எண்மத் தளமான BharatTradeNet உருவாக்கம், வர்த்தக ஆவணங்கள் மற்றும் நிதித் தீர்வுகளைச் சீராக்க உதவுகிறது.

  • விமானச் சரக்குகளுக்கான கிடங்கு வசதி
  • விமானச் சரக்குகளுக்கான உள்கட்டமைப்பு மற்றும் கிடங்கு வசதிகளை மேம்படுத்துதல்.
  • அதிக மதிப்புள்ள, எளிதில் அழுகக் கூடிய தோட்டக்கலை உற்பத்தியில் சிறப்புக் கவனம் செலுத்தப் படுகிறது.
  • மேம்படுத்தப்பட்டத் தளவாடங்கள் மூலம் ஏற்றுமதித் திறன்களை மேம்படுத்துதல்.
  • நிதித் துறைச் சீர்திருத்தங்கள் மற்றும் மேம்பாடு
  • கிராமின் கடன் பெறுவதற்கான மதிப்பு கட்டமைப்பு
  • சுய உதவிக் குழு (SHG) உறுப்பினர்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்களின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு கட்டமைப்பை அறிமுகப்படுத்தவுள்ளது.
  • NaBFID பகுதி கடன் மேம்பாட்டு வசதி
  • NaBFID (National Bank for Finance Infrastructure and Development) ஒரு அமைப்பினை உருவாக்கும்.
  • இந்த அமைப்பு பெருநிறுவனப் பத்திரங்களுக்கான கடனை மேம்படுத்தும்.
  • இதன் நோக்கம் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ஆதரவளிப்பது ஆகும்.

  • காப்பீட்டுத் துறையில் FDI வரம்பு அதிகரிப்பு
  • காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு (FDI) வரம்பு 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்படும்.
  • வரிச் சீர்திருத்தங்கள்
  • நேரடி வரிகளில் மாற்றங்கள்
  • புதிய வருமான வரி மசோதாவுக்கான முன்மொழிவு உட்பட நேரடி வரிகளில் மாற்றங்களை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • ஒழுங்குமுறைச் சீர்திருத்தங்கள்
  • FSDC பொறிமுறை
  • நிதி நிலைத் தன்மை மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (FSDC) நிறுவுதலானது, நிதி ஒழுங்குமுறைகளை மதிப்பிடுவதற்கும், துறைசார் வளர்ச்சிக்குப் பதிலளிக்கக் கூடிய கட்டமைப்பை உருவாக்குவதற்கும் செயல்படுகிறது.
  • ஜன் விஸ்வாஸ் மசோதா 2.0
  • ஒழுங்குமுறைச் சுமைகளை எளிதாக்க என்று பல்வேறு சட்டங்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட விதிகளை குற்றமற்றதாக மாற்றுதல்.

  • மறைமுக வரி முன்மொழிவுகள்
  • துறை சார்ந்த முன்மொழிவுகள்
  • இந்தியாவிலேயே தயாரிப்போம்: LED / LCD தொலைக்காட்சி மின்கலன்கள், ஜவுளித் துறைப் பட்டறைகள் மற்றும் அலைபேசிகள் மற்றும் மின்சார வண்டிகளுக்கான லித்தியம் இரும்பு மின்கலன்கள் போன்ற சில துறைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப் பட்டுள்ளது.
  • ஏற்றுமதி ஊக்குவிப்பு: கைவினைப் பொருட்கள் மற்றும் தோல் துறைகளுக்கான வரியில்லா உள்ளீடுகள்.

  • உயிர்காக்கும் மருந்துகளுக்கான மேம்பட்ட அணுகல்
  • விலக்கு அளிக்கப்பட்டப் பட்டியலில் 36 உயிர்காக்கும் மருந்துகளும், அரிதான நோய்கள், புற்றுநோய் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகள் உட்பட 6 மருந்துகளை 5% வரி பட்டியலில் சேர்த்தல்.
  • நேரடி வரி முன்மொழிவுகள்
  • தனி நபர் வருமான வரிச் சீர்திருத்தங்கள்

  • வரி விலக்கு நன்மைகள்:
  • மூத்தக் குடிமக்களின் வரி விலக்கு வரம்பு ₹50,000ல் இருந்து ₹1 லட்சமாக அதிகரித்துள்ளது.
  • வாடகை வரம்பு மீதான TDS ஆண்டுக்கு ₹2.40 லட்சத்தில் இருந்து ₹6 லட்சமாக அதிகரித்துள்ளது.
  • சிறு தொண்டு அறக்கட்டளைகளுக்கான ஊக்கத் தொகை
  • சிறு தொண்டு அறக்கட்டளைகள் / நிறுவனங்களுக்கான பதிவு காலம் 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப் பட்டுள்ளது.
  • சொத்து வரி நிவாரணம்
  • வரி செலுத்துவோர் எந்த நிபந்தனையும் இன்றி தனக்காக என்று சுயமாக ஆக்கிரமித்துள்ள இரண்டு சொத்துக்களுக்கான வருடாந்திர மதிப்பைக் கோர அனுமதிக்கப் படுகிறது.

  • வேலைவாய்ப்பு மற்றும் முதலீடு
  • மின்சாதனங்கள் உற்பத்தித் துறைக்கு வரி உறுதியை வழங்குதல்.
  • உள்நாட்டுக் கப்பல்களுக்கு கப்பலின் கொள்ளளவிற்கான வரித் திட்டம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.
  • புத்தொழில் நிறுவனங்களை இணைப்பதற்கான காலக்கெடு 5 ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப் பட்டுள்ளது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்