TNPSC Thervupettagam

மன்மோகன் சிங்

December 29 , 2024 9 days 354 0

மன்மோகன் சிங்

(For English version to this please click here)

அறிமுகம்

  • மன்மோகன் சிங் ஒரு இந்தியப் பொருளாதார நிபுணர், அரசியல்வாதி மற்றும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஆவார்.
  • அவர் 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை 13வது பிரதமராக பணியாற்றினார், இந்திய வரலாற்றில் நீண்ட காலம் பணியாற்றிய தலைவர்களில் இவரும் ஒருவராக உள்ளார்.
  • மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதாரச் சீர்திருத்தங்களில், குறிப்பாக 1990களில் இந்தியப் பொருளாதாரத்தைத் தாராளமயமாக்குவதில் அவர் ஆற்றியப் பங்கிற்கு, செல்வாக்கு மிக்க நபராக பரவலாகக் கருதப்படுகிறார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

  • 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி பஞ்சாபில் உள்ள காவில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பிறந்தார்.
  • 1947 ஆம் ஆண்டு பிரிவினையின் போது அவரது குடும்பம் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தது.
  • அவர் ஆரம்பப் பள்ளிப்படிப்பை உருது மொழியில் பயின்றார், பின்னர் பெஷாவரில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பயின்றார்.
  • பிரிவினை காலத்திற்குப் பின் அவர் ஹால்த்வானிக்கும், பின்னர் அமிர்தசரஸுக்கும் சென்றார்.
  • அவர் இந்துக் கல்லூரி, அமிர்தசரஸ் மற்றும் பஞ்சாப் பல்கலைக் கழகங்களில் கல்வி பயின்று, பொருளாதாரத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார் (1952, 1954).
  • அவர் 1957 ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது பொருளாதாரப் படிப்பினை செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் முடித்தார்.
  • அவர் 1962 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் முனைவர் (DPhil) பட்டம் பெற்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை

  • அவர் பஞ்சாபி சீக்கிய வணிகர்களின் குடும்பத்தில் இருந்து வந்தவர்.
  • அவரது தாயாரின் ஆரம்பகால மரணத்திற்குப் பிறகு, அவரது பாட்டி ஜம்னா தேவியால் வளர்க்கப் பட்டார்.
  • அவரது ஆழ்ந்த கல்விப் பின்னணி மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தங்களில் தனது வலுவான அர்ப்பணிப்புக்காக இவர் அறியப் படுகிறார்.

ஆரம்பகாலப் பணி

  • பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மூத்த விரிவுரையாளர்: 1957–1959.
  • பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் வாசிப்பாளர்: 1959–1963.
  • பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியர்: 1963–1965.
  • ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாடு அமைப்பு (UNCTAD): 1966 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.
  • வெளிநாட்டு வர்த்தக அமைச்சகத்தின் ஆலோசகர்: பொருளாதார நிபுணராக சிங்கின் நிபுணத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் லலித் நாராயண் மிஸ்ராவால் நியமிக்கப்பட்டார்.
  • டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸில் சர்வதேச வர்த்தகப் பேராசிரியர், டெல்லி பல்கலைக் கழகம்: 1969-1971.
  • நிதி அமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர்: 1972–1976.
  • நிதி அமைச்சகத்தின் செயலாளர்: 1976.
  • திட்டக்குழு: 1980-1982 ஆம் ஆண்டில் பணியாற்றினார்.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்: நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் கீழ் 1982 - 1985.
  • திட்டக் குழுவின் துணைத் தலைவர்: 1985 – 1987.
  • தெற்கு ஆணையத்தின் பொதுச் செயலாளர்: 1987 – 1990.
  • பொருளாதார விவகாரங்களில் பிரதமர் சந்திர சேகரின் ஆலோசகர்: 1990 ஆம் ஆண்டிற்குப் பின்.
  • பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர்: 1991.

அரசியல் வாழ்க்கை

நிதி அமைச்சர் (1991–1996)

  • இந்தியாவின் பொருளாதார நெருக்கடி: 1991 ஆம் ஆண்டில் கடுமையான நிதி மற்றும் வரவு செலவு சமநிலைப் பற்றாக்குறையை எதிர்கொண்டது.
  • கட்டுப்பாடு நீக்கம்: மன்மோகன் சிங்கால் அனுமதி சீட்டு வரம்பு (பெர்மிட் ராஜ்) அகற்றப் பட்டது, மேலும் இவர் பொருளாதாரத்தின் மீதான அரசின் கட்டுப்பாட்டைக் குறைத்த வகையில் பொருளாதார தாராளமயமாக்கலைத் தொடங்கினார்.

எதிர்க்கட்சித் தலைவர் (1998–2004)

  • ராஜ்யசபா: 1991 ஆம் ஆண்டில் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார், 1995, 2001, 2007 மற்றும் 2013 ஆண்டுகளில் மீண்டும் அங்கிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர்: 1998 ஆம் ஆண்டு முதல் ஆம் ஆண்டு 2004 வரை, பாரதிய ஜனதா (பாஜக) ஆட்சியின் போது பணியாற்றினார்.

பிரதமர்

முதல் முறை (2004–2009)

  • 2004 பொதுத் தேர்தல்: இந்திய தேசிய காங்கிரஸ் (INC) மிகப்பெரிய கட்சி ஆனது; ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) ஆட்சி அமைத்தது.
  • எதிர்பாராத விதமாக பிரதம மந்திரியாக நியமனம்: மன்மோகன் சிங்கிற்கு நேரடி தேர்தல் வெற்றி கிடைக்காவிட்டாலும், சோனியா காந்தி பிரதமராக மன்மோகன் சிங்கை நியமித்தார்.
  • இவர் 2004 ஆம் ஆண்டின் மே மாதம் 22 ஆம் தேதி அன்று பதவியேற்றார்.
  • 2009 ஆம் ஆண்டில் BRICS அமைப்பை நிறுவ இணைந்து பணியாற்றினார்.

பொருளாதாரக் கொள்கை

  • தாராளமயமாக்கல் தொடர்ச்சி: 1991 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி மற்றும் சீர்திருத்தங்களை ஊக்குவிக்க தொடர்ந்து செயல்பட்டார்.
  • உயர் பொருளாதார வளர்ச்சி: மன்மோகன் சிங்கின் தலைமையின் கீழ், இந்தியா 8 - 9% என்ற அளவிற்கு ஆண்டிற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை சந்தித்தது; 2007 ஆம் ஆண்டு 9% வளர்ச்சியைக் கண்டது.
  • தேசிய வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் (MGNREGA): வேலைவாய்ப்பை வழங்குவதற்கும் வறுமையைக் குறைப்பதற்கும் 2005 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்டது.

  • மதிப்புக் கூட்டு வரி (VAT): விற்பனை வரிக்கு பதிலாக 2005 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப் பட்டது.
  • பணவீக்க மேலாண்மை: 2007-2008 ஆம் ஆண்டில் உலகளாவியப் பணவீக்க அழுத்தங்களை நிவர்த்தி செய்தது.

சுகாதாரம் மற்றும் கல்வி

  • இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் திறப்பு: ஆந்திரப் பிரதேசம், பீகார் மற்றும் குஜராத் உட்பட பல்வேறு மாநிலங்களில் எட்டு புதிய இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன.
  • சர்வ சிக்சா அபியான்: மன்மோகன் சிங்கின் அரசாங்கத்தின் கீழ் தொடர்ந்து, கிராமப் புறங்களில் கல்விக்கான அணுகுதலை மேம்படுத்துதல், எழுத்தறிவின்மையை எதிர்த்துப் போராட பள்ளிகளில் மதிய உணவு அறிமுகப் படுத்துதல் ஆகியன மேற்கொள்ளப் பட்டன.

பாதுகாப்பு மற்றும் உள்துறை

  • பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள்: சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தில் (UAPA) திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டன மற்றும் 2008 ஆம் ஆண்டு மும்பைப் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து தேசியப் புலனாய்வு முகமை (NIA) உருவாக்கப் பட்டது.
  • இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI): பிப்ரவரி 2009 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
  • தேசியப் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் மின்-ஆளுமையை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல்நோக்குத் தேசிய அடையாள அட்டை செயல்படுத்தப் பட்டது.

  • காஷ்மீர் புனரமைப்பு: 2009 ஆண்டிற்குப் பிறகு கிளர்ச்சியாளர் ஊடுருவல் மற்றும் பயங்கரவாதம் அதிகரித்த போதிலும், காஷ்மீரில் மன்மோகன் சிங்கின் அரசாங்கம் புனரமைப்பு முயற்சிகளைத் தொடங்கியது.
  • இருப்பினும், வடகிழக்கு இந்தியாவில் பயங்கரவாதம் அவரது ஆட்சிக் காலத்தில் கணிசமாகக் குறைக்கப்பட்டது.

குறிப்பிடத்தக்கச் சட்டங்களை இயற்றுதல்

  • பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கான பணப் பலன்கள்: விதவைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நிலமற்ற நபர்களுக்கு புதிதாக பணப் பலன்கள் அறிமுகப்படுத்தப் பட்டன.
  • நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற சட்டம் (2013) ஆகியவற்றில் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத் தன்மைக்கான உரிமை, நிலம் கையகப்படுத்தும் செயல்முறையை மேம்படுத்தவும், நியாயமான இழப்பீட்டை உறுதி செய்யவும் இயற்றப் பட்டது.

வெளியுறவுக் கொள்கை

  • சீன-இந்திய உறவுகள்: மன் மோகன் சிங் சீனாவுடனான எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்தார், 2006 ஆம் ஆண்டில் சீன ஜனாதிபதி ஹூ ஜிண்டாவோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா வருகை நிகழ்ந்தது மற்றும் அதே ஆண்டில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நாதுலா கணவாய் மீண்டும் திறக்கப்பட்டது.
  • இந்திய-அமெரிக்க உறவுகள்: மன் மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் இந்திய-அமெரிக்க உறவுகள் மேம்படுத்தப்பட்டது, 2008 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட இந்திய-அமெரிக்க குடிசார் அணுசக்தி ஒப்பந்தத்தால் அது சிறப்பிக்கப்பட்டது.
  • மன் மோகன் சிங் 2005 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு பயணம் செய்தார், மேலும் 2009 ஆம் ஆண்டில் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் வெள்ளை மாளிகைக்கு அரசுமுறைப் பயணம் செய்த முதல் இந்தியப் பிரதமர் ஆனார்.

இரண்டாவது முறை: 2009–2014

  • இந்தியா 2009 ஆம் ஆண்டில் பொதுத் தேர்தலை ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தியது, இதன் விளைவாக UPA அரசாங்கம் வெற்றி பெற்றது.
  • 1962 ஆம் ஆண்டில் முழு பதவிக் காலத்தை முடித்த பின்னர், மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்ற நேருவுக்குப் பிறகு, மன்மோகன் சிங் அதே போல் வெற்றி பெற்ற முதல் பிரதமரானார்.
  • பல்வேறு பிராந்தியக் கட்சிகளின் ஆதரவுடன் 543 உறுப்பினர்களில் 322 உறுப்பினர்களுடன் UPA பெரும்பான்மையைப் பெற்றது.
  • மன்மோகன் சிங் பிரதமராக 2009 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி அன்று பதவியேற்றார்.

பிந்தைய பதவிகள் (2014–2024)

  • பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மன்மோகன் சிங்கின் பிரதமர் பதவி 2014 ஆம் ஆண்டு மே மாதம்  17 ஆம் தேதி அன்று முடிவடைந்தது.
  • அவர் 2014 ஆம் ஆண்டின் தேர்தலில் பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை என்பதோடு 2014 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி வரை தற்காலிகப் பிரதமராகப் பணியாற்றினார்.
  • அவர் 2024 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் ராஜ்யசபாவில் இருந்து ஓய்வு பெற்றார், அதைத் தொடர்ந்து அதில் சோனியா காந்தி பதவியேற்றார்.

மன்மோகன் சிங்கின் தலைமையின் கீழ் முக்கிய முன்னெடுப்புகள்

முதல் முறை (2004-2009)

  • தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம் (NHRM): கிராமப்புற சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது, இது அரை மில்லியனுக்கும் அதிகமான சமூக சுகாதாரப் பணியாளர்களைத் திரட்டியது.
  • கல்வியில் இடஒதுக்கீடு: 2006 ஆம் ஆண்டில் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS), இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (IITs), இந்திய மேலாண்மை கழகங்கள் (IIM) மற்றும் பிற மத்தியப் பல்கலைக்கழகங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBCs) 27% இடங்களை ஒதுக்கும் திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தியது, இது 2006 ஆம் ஆண்டில் இந்திய அளவிலான இட ஒதுக்கீட்டு எதிர்ப்புப் போராட்டங்களுக்கு வழிவகுத்தது.
  • கல்வி உரிமை (RTE) சட்டம் (2009): 6 – 14 வயதுடைய குழந்தைகளுக்கு கல்வியை அடிப்படை உரிமையாக்க அறிமுகப் படுத்தப் பட்டது, பின் அது 2010 ஆம் ஆண்டில் செயல்படுத்தப் பட்டது.

  • இதன் மூலம் கல்வியை அடிப்படை உரிமையாக உறுதி செய்யும் 135 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக மாறியது.
  • நேரடிப் பலன் பரிமாற்றங்கள் (DBT)
  • மானியங்களை நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றவும், கசிவுகளைக் குறைக்கவும், இலக்கு வைக்கப்பட்ட நலன்புரி விநியோகத்தை உறுதி செய்யவும் தொடங்கப் பட்டது.

இரண்டாம் முறை (2009-2014)

  • பொருளாதார வளர்ச்சி
  • மன்மோகன் சிங்கின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் வலுவான வளர்ச்சியைப் பராமரித்தது, அதன் மூலம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஆண்டுதோறும் 9% ஆக இருந்தது.
  • தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்
  • 2013 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட இந்தச் சட்டம், இந்தியாவின் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு உணவு தானியங்களை வழங்கியதோடு, பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நிவர்த்தி செய்கிறது.

  • ஆதார் திட்டம்
  • இது இந்தியாவில் வசிப்பவர்கள் அனைவருக்கும் தனித்துவமான அடையாள எண்ணை வழங்குதல், சேவைகளுக்கான அணுகலை எளிதாக்குதல் மற்றும் அரசின் நலத் திட்டங்களின் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.

இலக்கியப் பங்களிப்பு

  • இவர் பொருளாதார இலக்கியத்தில் ஒரு குறிப்பிடத்தக்கப் படைப்பான இந்தியாவின் ஏற்றுமதிப் போக்குகள் மற்றும் சுய-நிலையான வளர்ச்சிக்கான வாய்ப்புகள் என்ற நூலை எழுதியுள்ளார்.

விருதுகள் மற்றும் அங்கீகாரம்

  • பத்ம விபூஷன் (1987): இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருது.

  • ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் நினைவு நூற்றாண்டு விருது (1995): அறிவியல் மற்றும் பொருளாதாரத்திற்கானப் பங்களிப்புகளுக்காக பெற்றார்.
  • ஆண்டின் சிறந்த ஆசிய பண நிதி அமைச்சர் (1993, 1994) மற்றும் யூரோ பண நிதி அமைச்சர் (1993).
  • ஆடம் ஸ்மித் பரிசு (1956): கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சிறந்த கல்விக்கான மதிப்பு மிக்க அங்கீகாரம்.
  • ரைட்ஸ் பரிசு (1955): கேம்பிரிட்ஜில் உள்ள செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டதற்காக வழங்கப் பட்டது.
  • கெளரவப் பட்டங்கள்: கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்கள் போன்ற மதிப்பு மிக்க நிறுவனங்களால் வழங்கப் பட்டது.

பிந்தைய ஆண்டுகள்

  • அவர் அஸ்ஸாம் (1991 - 2019) மற்றும் ராஜஸ்தான் (2019 - 2024) ஆகியவற்றிலிருந்து ராஜ்ய சபாவில் பணியாற்றினார்.
  • இந்தியாவின் 13வது பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங், 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி அன்று தனது 92வது அகவையில் டெல்லியில் காலமானார்.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்