TNPSC Thervupettagam

மருத்துவ உலகில் ‘டிஜிட்டல் ட்வின்’ நன்மையா, தீமையா?

October 24 , 2024 8 days 49 0

மருத்துவ உலகில் ‘டிஜிட்டல் ட்வின்’ நன்மையா, தீமையா?

  • ‘டிஜிட்டல் ட்வின்’ தொழில்​நுட்பம் இப்போது அதிக அளவில் பேசப்​படு​கிறது. குறிப்பாக, மருத்​துவத் துறையில் இது குறித்து உற்சாகக் குரல்​களும் எச்சரிக்கை மணிகளும் கலந்து ஒலிக்​கின்றன. ஒருவரிட​மிருந்து அவரது இரட்டையரை (அதாவது பிரதியை) உருவாக்க முடியுமா என்பதற்குக் கிடைக்​கக்​கூடிய பதில் ‘குளோனிங்’ (Cloning). ஆனால், இதில் இருவரும் உயிருள்ள மனிதர்கள். அப்படி இன்றிக் கணினியின் மூலம் ஒருவர் குறித்த தகவல்​களை​யெல்லாம் அதேபோன்ற வடிவத்தில் சேமிக்க முடிகிறது என்பதுதான் ‘டிஜிட்டல் ட்வின்’ தொழில்​நுட்பம்.

எப்படிச் சாத்தி​ய​மாகிறது?

  • ஒரு விமான இன்ஜினில் பழுது ஏற்படு​கிறது என்றால் என்ன செய்ய​லாம்? பழுது நீக்கு​வதில் தவறாகச் செயல்​பட்டால் எக்கச்​சக்கமான இழப்பு நேரிடலாம். மாறாக, அந்த விமானத்தின் அத்தனைப் பண்பு​களையும் தகவல்​களையும் டிஜிட்டல் மூலமாகச் சேமித்​தால், அதுவே இந்த விமானத்தின் பிரதிபோல இருக்​கும்.
  • விமானத்தின் பாகங்​களின் இயக்கங்கள் எல்லாம் அந்தப் பிரதி​யிலும் இயங்கும். சென்சார், இணையம் மூலமாக இந்தத் தொடர்பை ஏற்படுத்​திக்​கொள்​ளலாம். அப்போது விமான இன்ஜினின் ஒவ்வொரு இயக்கமும் அந்தப் பிரதியில் பிரதிபலித்​துக்​கொண்டே இருக்​கும்.
  • நிஜமான விமானத்தைத் தொடாமலேயே அந்தப் பிம்பத்தை மட்டுமே விதவிதமாக ஆராய்ந்து, பழுதைக் கண்டு​பிடித்துச் சரிசெய்ய முடிந்​தால், நிஜமான விமானத்தில் உள்ள அதே பகுதியை அதே விதத்தில் சரிசெய்​து​விடலாம். தவறு நிகழ்ந்​தாலும் கவலை இல்லை. மீண்டும் சரிசெய்து, வேறு என்ன பிரச்சினை என்பதைக் கண்டு​பிடித்து​விடலாம். டிஜிட்டல் ட்வின் மூலம் பழுதை முன்ன​தாகவேகூட உணர்ந்து அந்தக் கருவியைச் சரிவரப் பராமரித்து, அந்தப் பழுதைத் தவிர்க்​கலாம். பழுதுநீக்கும் செலவு மிச்சப்​படும். இந்தத் தொழில்​நுட்பம் பலவிதங்​களில் ஏற்கெனவே பயன்பாட்டுக்கு வந்து​விட்டது.
  • கார் பந்தயங்​களில்கூட, பந்தயத்​தின்போது காரில் ஒரு சிறிய கோளாறு உண்டானால், அதன் டிஜிட்டல் வடிவத்தில் அந்தக் கோளாறைச் சரிசெய்து, சென்சார் மூலம் நிஜ காருக்கு அதை அனுப்பிக் கோளாறைச் சரிசெய்​கிறார்கள். நிலநடுக்கமோ வெள்ளமோ வந்தால் கட்டிடங்கள் தாக்குப்​பிடிக்குமா என்பதை, அந்தக் கட்டிடங்​களின் டிஜிட்டல் பிரதியைச் சோதனை​களுக்கு உட்படுத்தி அறிந்து​கொள்​ளலாம். இந்தத் தொழில்​நுட்​பத்தை மனிதர்​களுக்கும் செய்து பார்த்தால் என்ன என்கிற முயற்சிகள் தொடங்கி​விட்டன. இதை ‘மெடிக்கல் டிஜிட்டல் ட்வின்’ என்கிறார்கள்.

எப்படிச் செயல்​படு​கிறது?

  • உங்களைப் போலவே ஒரு டிஜிட்டல் பிரதி உருவாக்​கப்​படு​கிறது. உங்களிடம் உள்ள அத்தனைத் தரவுகளும் அதில் காணப்​படு​கின்றன. (‘ஜீன்ஸ்’ திரைப்​படத்தில் இடம்பெற்ற, ‘கண்ணோடு காண்ப​தெல்​லாம்’ பாடலில் நடனம் ஆடும் அசல் ஐஸ்வர்யா ராயையும் டிஜிட்டல் ஐஸ்வர்யா ராயையும் நினைத்துப் பார்க்​கலாம்). இந்தத் தொழில்​நுட்​பத்தைக் கருவி​களுடன் நிறுத்​திக்​கொள்​ளாமல், மனிதர்​களுக்குச் செய்யும்போது வருங்​காலத்தில் இப்படி ஒரு காட்சியை எதிர்​பார்க்க முடியும். சிகிச்​சைக்காக மருத்துவரை நீங்கள் அணுகும்போது, கூடவே உங்களுடைய டிஜிட்டல் பிரதி​யையும் எடுத்​துச்​செல்​வீர்கள்.
  • மருத்​துவர் தன்னுடைய கணினிக்குள் அதைச் செலுத்தி உங்களைப் பற்றிய மருத்​துவத் தகவல்​களைத் துல்லிய​மாகக் கணிப்​பார். குறிப்​பிட்ட மருந்து வகைகள் ஒருவரது உடலில் என்ன வகை பக்க விளைவுகளை ஏற்படுத்து​கின்றன என்பதை டிஜிட்டல் பிரதியில் (மட்டும்) செலுத்திக் கண்டு​பிடிக்க முடியும். இதன் மூலம் நிஜமான மனிதர்​களுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறைகின்றன.
  • டிஜிட்டல் வடிவத்தின் பல்வேறு தரவுகளை அலசுவதன் மூலம், என்னென்ன நோய்கள் வருங்​காலத்தில் தாக்கக்​கூடும் என்பதைக் கணிக்க முடியும். அதாவது, ஒருவரின் உடலில் அந்த நோய்க்கான அறிகுறிகள் தோன்று​வதற்கு முன்பாகவே டிஜிட்டல் தகவல்​களைக் கொண்டு கண்டு​பிடிக்க முடியும். எடுத்​துக்​காட்டாக, ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு என்றால், முன்ன​தாகவே அறிந்​து​கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுத்து அதைத் தடுக்கலாம்.

சாதக பாதகங்கள்:

  • மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இது பெரும் கொண்டாட்டம். தாங்கள் தயாரிக்கும் மருந்து மக்களிடம் எப்படி வேலை செய்கிறது என்பதை அறிய டிஜிட்டல் பிரதிகள் பயன்படும். மூளை என்பது மிக நுட்பமான பாகம். ஒருவரின் மூளையில் ஏதோ சிக்கல் ஏற்படு​கிறது என்று வைத்துக்​கொள்​வோம்.
  • இதைப் பலவித சோதனைகள் செய்து மருத்​துவர் உறுதி​செய்​து​கொள்ள வேண்டி​யிருக்​கும். இதற்கு நேரமும் முயற்​சியும் அதிகமாகும். மாறாக, அவரது டிஜிட்டல் பிம்பம் உருவாக்​கப்​பட்டு, அதன் மூளைப் பகுதியைப் பலவித சோதனை​களுக்கு உட்படுத்துவதற்கு அதிக நேரம் தேவைப்​படாது. சிக்கல் ஏற்பட்டால் விபரீத​மாகி​விடுமே என்ற கவலையும் கிடையாது. பிரதிக்கு அளித்தது தவறான சிகிச்சை என்று தெரிய​வந்​தால், அதை நீக்கி​விட்டுத் தொடக்​கத்​திலிருந்து தொடங்கி வேறு சிகிச்சை அளிக்​கலாம்.
  • ஆனால், மருத்துவ உலகில் டிஜிட்டல் ட்வின் நுழைவதால் ஏற்படும் நன்மை​களுக்குச் சமமாகத் தீமைகளும் உண்டு என்கிறார்கள். டிஜிட்டல் பிரதி, 100% அதன் மூலத்தைப் போன்றே இருக்குமா என்பது முதல் சந்தேகம். (இது மிக உயர்ந்த மென்பொருள் தேவைப்​படும் விஷயம்) அப்படி இருக்க​வில்லை என்றால், அடுத்​தடுத்த முயற்சிகள் மற்றும் விளைவுகள் எல்லாமே தவறானதாக அமைந்​து​விடலாம்.
  • ஒருவேளை நோயாளி உரிய அனுமதி கொடுக்​காமலேயே அவரது டிஜிட்டல் பிரதியை ஆராய்ச்​சிக்கு உட்படுத்​தினால், அது பெரும் தவறல்லவா என்று ஒழுக்க நெறி சம்பந்தமான கேள்வி முக்கி​யத்துவம் பெறுகிறது.
  • ஒரு நோயாளி தனது டிஜிட்டல் பிரதி மருத்​துவரால் தவறாகக் கையாளப்​பட்டது என்று கருதினால், நீதிமன்​றத்தில் வழக்குகள் குவியும். மிகவும் பணச் செலவு பிடிக்கும் விவகாரம் என்பதால், டிஜிட்டல் ட்வின்களை உருவாக்​கிக்​கொள்வதன் மூலம் பணக்காரர்​களுக்கே அதிகப் பலன் கிடைக்​கும். இதனால் சமூக ஏற்றத்​தாழ்வு அதிகமாகும்.
  • டிஜிட்டல் பிரதியில் உள்ள தகவல்கள் (மரபணுக்கள் உள்பட) சைபர் தாக்குதலுக்கு உட்படலாம். வேண்டாதவர்​களின் கைகளில் முக்கிய அந்தரங்கத் தகவல்கள் சென்று​விடும் அபாயமும் உண்டு. ஆனால், இத்தனையையும் மீறி மெடிக்கல் டிஜிட்டல் ட்வின் தொழில்​நுட்பம் அமலுக்கு வந்து​விட்டது.
  • லண்டனில் உள்ள ராணி மேரி பல்கலைக்​கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்​சி​யாளர்கள் சிலர் ஏற்கெனவே சில நோயாளி​களின் இதயங்​களின் டிஜிட்டல் பிரதி​களைப் பயன்படுத்திச் சில சிகிச்​சைகளை முடிவு செய்கிறார்கள். இந்தத் தொழில்​நுட்பம் மனிதர்​களின் வாழ்க்கையில் மேம்பாட்டை ஏற்படுத்துமா எனப் பொறுத்​திருந்து பார்க்​கலாம்​!

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்