TNPSC Thervupettagam

மார்பகப் புற்றுநோய்க்குப் பிறகும் வாழ்க்கை உண்டு!

October 19 , 2024 13 days 61 0

மார்பகப் புற்றுநோய்க்குப் பிறகும் வாழ்க்கை உண்டு!

  • புற்றுநோய். இந்த ஒற்றைச் சொல் நம் அனைவரது மன உறுதியையும் அமைதியையும் ஒரு நொடியில் உலுக்கிவிடுகிறது. புற்றுநோய், உடலில் ஏதேனும் ஓர் உறுப்பில் உயிரணுக்கள் கட்டுப்பாடற்று வளர்வதால் ஏற்படுகிறது. இந்தக் கட்டுப்பாடற்ற உயி ரணுக்கள் அருகிலுள்ள திசுக்களை ஆக்கிரமித்து அவற்றை அழிப்பதோடு (local spread) ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக (Distal Metastasis) உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவச் செய் வதால் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் மரணத்தைக்கூட ஏற்படுத்துகிறது.

அதிகரிக்கும் மார்பகப் புற்றுநோய்:

  • புற்றுநோயைப் பற்றி இன்று நாம் பேச வேண்டியதன் அவசியம், சர்வதேச, தேசியப் புற்றுநோய் அமைப்புகள் தந்துள்ள சில அச்சுறுத்தலான தகவல்கள்தான். உலக அளவில் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் ஆண்கள் என்றாலும், இந்தியாவில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே.
  • இந்தியப் பெண்கள் மார்பகப் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படு கிறார்கள். அண்மைக் காலமாக இளம் வயதில் அதாவது 25-40 வயதிலான பெண்கள் மார்பகப் புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள். புற்றுநோய்க் குப் பிறகான வாழ்நாள் மற்ற நாடுகளைக் காட்டிலும் நமது நாட்டுப் பெண்களிடையே மிகக் குறைவாகவே உள்ளது என்பது கவலையளிக்கும் செய்தி.

எப்படி ஏற்படுகிறது?

  • பாலூட்டுவதற்காகப் படைக்கப்பட்ட பெண்ணின் மார்பகங்கள் உண்மையில் பால் சுரப்பிகள் (Lobules), அவற்றிலிருந்து பாலை வெளி யேற்றும் பால் குழாய்கள் (Ducts) மற்றும் கொழுப்புத் திசுக்களால் ஆனவை. இவற்றில் பால் குழாய்களிலும் பால் சுரப்பி களிலும் அதிகம் காணப்படும் மார்பகப் புற்றுநோய், ஆரம்பத்தில் வலியற்ற சிறு கட்டிகளாகவும் திட்டுகளாகவும் மட்டுமே இருக்கும்.
  • அடினோ கார்சினோமா வகையைச் சார்ந்த இவை, வளரும்போது நிணநீர் வழியாகவும் ரத்த நாளங்களிலும் பரவி அதன் பின்னரே வலி அல்லது பிற அறிகுறிகளை ஏற்படுத்தும். பொதுவாக மார்பகப் புற்றுநோய் பெண்களைத்தான் அதிகம் பாதிக்கிறது என்றாலும் 1% ஆண்களிடமும் இது ஏற்படக்கூடும்.

ஏன் ஏற்படுகிறது?

  • மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் இன்னமும் முழுமையாகக் கண்டறியப்பட வில்லை என்றாலும், அதற்கான சூழல்களை மருத்துவ உலகம் நமக்கு அடையாளப்படுத்தியுள்ளது. சிறுவயதில் பருவமடைதல், பிசிஓடி எனும் சினைப்பைக் கட்டிகள், செயற்கைக் கருத்தரிப்பு முறைகள், தொடர்ந்து உட்கொள்ளப்படும் கருத்தடை மருந்துகள், தாமதமாகும் மாதவிடாய் நிறுத்தம் போன்ற ஹார் மோன் பிரச்சினைகள் உள்ளிட்டவை மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்களாகக் கண் டறியப்பட்டுள்ளன. கருப்பை, சினைப்பைப் புற்றுகளும் மார்பகப் புற்றுநோய்க்கு வித்தாகின்றன.
  • மரபணுக்கள் காரணமாகவும் புற்றுநோய் ஏற்படுகிறது. உறவினர் களில் குறிப்பாகத் தாய் அல்லது தமக்கைக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தால் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியம் 10% அதிகம். குறிப்பாக, குரோமோசோம்களில் BRCA- 1 & BRCA- 2 மரபணுக்கள் கண்டறியப்பட்டால், மார்பகப் புற்று நோய் ஏற்படும் சாத்தியம் இன்னும் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
  • உடல்பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இவற்றுக்குக் காரணமான அதிக மாவுச்சத்து மற்றும் கொழுப்பு உணவு, உட்கார்ந்தே இருக்கும் பணிச்சூழல், உடற் பயிற்சியின்மை, புகை மற்றும் மதுப்பழக்கம், ஒவ்வாத மேற்கத்திய உணவுப் பழக்கவழக்கங்கள், மன அழுத்தம் போன்றவையும் மார்பகப் புற்றுநோய்க்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கின்றன. கதிரியக்கம் மற்றும் சுற்றுச்சூழல் மாசினாலும் மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது.

சுய பரிசோதனை அவசியம்:

  • மார்பகப் புற்றுநோய் ஏற்படு வதற்கான சாத்தியங்களை உணவு, உடற்பயிற்சி சார்ந்த வாழ்க்கை முறை மூலம் நம்மால் நிச்சயம் கட்டுப்படுத்த முடியும். 25 வயதிலிருந்தே மாதத்துக்கு ஒரு முறையாவது தங்களது மார்புகளைத் தாங்களே சோதனை செய்துகொள்ளும், ‘மார்பகச் சுயபரிசோதனை முறை’யை பெண்கள் மேற்கொள்ள வேண்டும். மாதவிடாய் ஏற்பட்ட 7-10 நாள்களுக் குள் கண்ணாடி முன்பாக நின்று, இரண்டு மார்பகங்களுக்கு இடையே வேறுபாடு எதுவும் தென்படுகிறதா என்று பார்க்க வேண்டும்.
  • பிறகு இரண்டு மார்பகங்களையும் அந்தந்த பக்கக் கைகளின் நான்கு விரல்களால் அழுத்தித் தேய்த்துச் சுயபரிசோதனை செய்து கொள்ளலாம். பரிசோதனை யின்போது மார்பில் கட்டி, மார்பகத் தோலில் வீக்கம் அல்லது அதீத சுருக்கம், காம்பில் ரத்தக்கசிவு போன்ற வித்தியாசமான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். குறிப்பாக இளம்வயதினர், பால் கட்டி என வலியற்ற கட்டிகளை அலட்சியமாக எண்ணக் கூடாது.

மாமொகிராம் பரிசோதனை:

  • மருத்துவர்களால் மேற்கொள்ளப் படும் மார்பகப் பரிசோதனை மற்றும் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப் படும் ‘மாமொகிராம்' (Mammogram) பரிசோதனை மூலமும் மார்பகப் புற்றுநோயைக் கண்டறியலாம். 25-39 வயதிலுள்ளவர்கள் 1-3 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 40 வயதுக்கு மேலானவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையும் கிளினிக்கல் மார்பகப் பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
  • அடுத்து, மார்பகப் புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் மாமொகிராம் பரிசோதனை, ஓர் எக்ஸ்-ரே டெஸ்ட்தான் என்றாலும் இதில் பயன்படுத்தப்படும் துல்லியமான குறைந்த அளவு கதிர்வீச்சு, மார்பில் புதிதாகத் தோன்றும் மாற்றங்களை எளிதாகக் கண்டறியும் இயல்புடையது. மேலும், மார்பகத்தில் கட்டிகள் இல்லா விட்டால்கூட, கட்டிகள் வரக்கூடிய அறிகுறிகளையும் மாற்றங்களையும் மாமொகிராம் கண்டறிந்துவிடும் என்பதால் நோயை வரும் முன்னரே கண்டறிந்து, அதற்கான சிகிச்சையளிக்க முடியும் என்பதே இதன் சிறப்பம்சம்.
  • 85% வரை துல்லியம் மிக்க இந்த மாமொகிராம் பரிசோதனை, கைகளுக்குத் தட்டுப்படாத ஒரு சென்டிமீட்டருக்கும் குறைவான கட்டிகளைக் கூடக் கண்டறியும் திறன்மிக்கது. என்றாலும், இதை எடுக்கும்முறை சற்று வலியுடையதாகும். இரண்டு மார்பகங்களையும் உலோகத் தட்டினால் அழுத்தித் தட்டையாக்கி எக்ஸ்-ரே எடுப்பதால், மார்பகத்தில் தற்காலிகமான, அழுத்தமான வலி ஏற்படக்கூடும்.
  • 20 நிமிடங்கள் மட்டுமே மேற்கொள்ளப்படும் இந்தப் பரிசோதனை, 25% பெண்களை இறப்பிலிருந்து காக்கிறது என்பதால், ‘புற்றுநோய்க்கு மட்டும் பயப்படுங்கள். அதன் பரிசோதனைகளுக்கு அல்ல’ என்று பெண்களை மாமொகிராம் செய்துகொள்ள வலியுறுத்துகிறது உலகப் புற்றுநோய் அமைப்பு. 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை யும் 50 வயதுக்கு மேலுள்ள பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறையும் மாமொகிராம் செய்துகொள்வது அவசியம்.

நம்பிக்கையூட்டும் புதிய சிகிச்சைகள்:

  • அறுவை சிகிச்சையில் மார்பகத்தை அகற்றாமல் புற்றுக் கட்டியை மட்டும் அகற்றும் (Lumpectomy) நவீன சிகிச்சைகளும், மரபணுக்கள் மற்றும் ஹார்மோன் ஏற்பிகளின் பரிசோதனைப்படி, தொடர் ஹார்மோன் சிகிச்சைகள், இம்யூனோ தெரபி, டார்கெட்டட் ட்ரீட்மென்ட் எனப் புற்றுநோய்க்கான பல புதிய சிகிச்சை முறைகள் அறிமுகமாகிப் பெண்களுக்கு நம்பிக்கையூட்டி வருகின்றன.
  • புற்று நோயை வெல்ல மன உறுதியும் முறையான சிகிச்சையும் எவ்வளவு முக்கியமோ அதேபோல விழிப்புணர் வும் புரிதலும் மிகவும் அவசியம். புற்றுநோய்க்குப் பிறகும் வாழ அழகான ஒரு வாழ்க்கை உள்ளது. புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறி வதும் அதற்கான முறையான சிகிச்சை களை மேற்கொள்வதும்தான் அந்த வாழ்க்கையை வாழ்வதற்கான வழிகள்!

நன்றி: இந்து தமிழ் திசை (19 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்