TNPSC Thervupettagam

முதலீட்டு வாய்ப்பை வழங்கும் கிராம பொருளாதாரம்

January 20 , 2025 3 days 36 0

முதலீட்டு வாய்ப்பை வழங்கும் கிராம பொருளாதாரம்

  • வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் என்ற நிலையிலிருந்து துடிப்பான, பல் துறை வளர்ச்சி இன்ஜின் என்ற நிலைக்கு கிராமப்புற இந்தியா மாறி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் கிராமங்களில் உற்பத்தி, கட்டுமானம் மற்றும் வர்ததகம் உள்ளிட்ட துறைகளும் முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கி உள்ளன. இதனால் வேளாண்மை துறையை பெருமளவில் சார்ந்திருக்க வேண்டிய நிலை குறைந்துள்ளது. இத்துடன் உள்கட்டமைப்பு வசதிகள் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளதால் ஊரக இந்தியா வளர்ந்து வரும் முதலீட்டுக்கான மையமாக உருவெடுத்துள்ளது.
  • அதிகரித்து வரும் கட்டமைப்பு வசதிகள் கிராமப்புற இந்தியாவை நகர்ப்புற சந்தைகளுக்கு நெருக்கமாக கொண்டு வந்துள்ளன. அத்துடன் முன்பு பயன்படுத்தப்படாத சந்தை வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கான கதவுகளைத் திறந்துள்ளது. எப்.எம்.சி.ஜி. முதல் இ-காமர்ஸ் வரை பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் இந்த போக்கைப் பயன்படுத்துகின்றன. குறிப்பாக, கிராமப்புறங்களில் வளர்ந்து வரும் வாங்கும் திறன் மற்றும் நுகர்வு முறைகளிலிருந்து பயனடைகின்றன.
  • கிராமப்புற மக்களுக்கும் கல்வி மற்றும் சுகாதார வசதிகள் தாராளமாக கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற மக்களின் வருவாய் அதிகரித்து வருகிறது. இது மக்களின் செலவிடும் சக்தியையும் கிராமப்புற நுகர்வையும் அதிகரிக்கிறது. இதன் விளைவாக, விருப்புரிமை செலவினங்கள் அதிகரித்து வருகின்றன.
  • பத்தாண்டுகளுக்கு முன்பு நகர்ப்புறங்களில் நுகர்வு அதிகரித்தது. இதைப் பிரதிபலிக்கும் வகையில் கிராமப்புறங்களில் இப்போது நுகர்வு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இது கிராம மக்களின் வருமானம் அதிகரித்து வருவதை குறிக்கிறது. இப்போது, இந்திய மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பேர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இவர்களின் பங்கு 46% ஆக உள்ளது.
  • இந்நிலையில், நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் சவாரி செய்ய கிராமப்புற கருப்பொருள் (தீம்) முதலீட்டாளர்களுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய வழியை வழங்குகிறது. கிராமப்புற வளர்ச்சி மற்றும் நுகர்வு வளர்ச்சியில் கவனம் செலுத்தும் பரஸ்பர நிதி திட்டங்கள் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகின்றன. உள்கட்டமைப்பு மேம்படுவதாலும், வருமானம் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், கிராமப்புறங்கள் இந்தியாவின் பொருளாதார எதிர்காலத்தின் முக்கிய உந்துதலாக இருக்கும். இது முதலீட்டாளர்களுக்கு கூடுதல் அம்சமாக விளங்குகிறது.
  • அந்த வகையில், ‘ஐசிஐசிஐ புருடென்சியல் ரூரல் ஆப்பர்சுனிட்டிஸ் பண்ட்’ திட்டத்தில் முதலீடு செய்வது குறித்து முதலீட்டாளர்கள் பரிசீலிக்கலாம். இது ஐசிஐசிஐ புருடென்சியல் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் புதிய திட்டம் (என்எப்ஓ) ஆகும். கடந்த ஜனவரி 9-ம் தேதி தொடங்கிய இந்த திட்டத்தில் வரும் 23-ம் தேதி வரை முதலீடு செய்யலாம்.
  • என்எப்ஓ முடிந்த பிறகும் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யும் வாய்ப்பை வழங்கும் (ஓபன் எண்டடு) இந்த திட்டம், கிராமப்புற இந்தியாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திலிருந்து பயனடையும் துறைகள் / நிறுவன பங்குகளில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்துகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (20 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்