TNPSC Thervupettagam

ரத்தன் டாடா (28 டிசம்பர் 1937 - 09 அக்டோபர் 2024)

October 12 , 2024 95 days 446 0

ரத்தன் டாடா (28 டிசம்பர் 1937 - 09 அக்டோபர் 2024)

(For English version to this please click here)

அறிமுகம்

  • டாடா குழுமத்தின் முன்னாள் எமரிட்டஸ் தலைவரான ரத்தன் டாடா, தொழில் மற்றும் தொண்டு ஆகிய இரண்டிலும் ஒரு தனித்தன்மைமிக்க நபராக இருந்தார் என்பதோடு இது உலகளாவிய நிலப்பரப்பில் ஒரு அழியாத முத்திரையை ஏற்படுத்தியது.
  • அவரது தொலைநோக்குத் தலைமையானது டாடா குழுமத்தை ஒரு வல்லமைமிக்க உலகளாவிய நிறுவனமாக மாற்றியது மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பு மற்றும் சமூக நலனின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது.
  • டாடா குழுமத்தின் மதிப்பிற்குரிய முன்னாள் தலைவரான ரத்தன் நேவல் டாடாவின் மறைவு, இந்தியாவின் மிகவும் மதிப்பிற்குரிய வணிகப் பிரமுகர்களில் ஒருவரின் சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது.
  • 86 வயதில், டாடா ஒரு தொழிலதிபராக மட்டுமல்ல; அவர் 21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் பொருளாதார மறுமலர்ச்சியின் அடையாளமாக இருந்தார்.

ரத்தன் டாடா

  • ரத்தன் டாடா ஒரு புகழ்பெற்ற இந்திய தொழிலதிபர் மற்றும் டாடா குழுமத்தின் உந்து சக்தியாக இருந்தார், இது அவரது தாத்தா ஜம்செட்ஜி டாடாவால் நிறுவப்பட்டது.
  • கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டிடக் கலையில் பட்டம் பெற்ற பிறகு, அவர் 1962 ஆம் ஆண்டில் இந்தியா திரும்பியதும் டாடா குழுமத்தில் இணைந்து தனது பணியைத் தொடங்கினார்.
  • அவரது பதவிக்காலம் எஃகு மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் முதல் மென்பொருள் மற்றும் தொலைத்தொடர்பு வரையிலான பல்வேறு துறைகளைக் கொண்ட அந்நிறுவனத்தை உலகளாவிய அதிகார மையமாக மாற்றியது.

ஆரம்ப காலப் பயணம் மற்றும் தலைமை

  • ரத்தன் டாடா 1961 ஆம் ஆண்டு ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா எஃகு நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கினார்.
  • இந்த அடிமட்ட அனுபவம் வணிகத்தைப் பற்றிய அவரது புரிதலை அடித்தளமாகக் கொண்டது மற்றும் அவரது எதிர்காலத் தலைமைத்துவப் பாணியை வடிவமைத்தது.
  • அவரது வழிகாட்டுதலின் கீழ், எஃகு, தானியங்கி மோட்டார் வாகனங்கள், தகவல் தொழில் நுட்பம் மற்றும் விருந்தோம்பல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் டாடா குழுமம் விரிவடைந்தது.

சாதனைகள்

  • ரத்தன் டாடாவின் தலைமையானது டாடா குழுமத்திற்கு மாற்றத்திற்கு உரிய கால கட்டத்தைக் குறித்தது.
  • இவர் ஜே.ஆர்.டி.க்கு அடுத்து 1991 ஆம் ஆண்டில் தலைவராகப் பொறுப்பேற்றார்.
  • டாடா முக்கியமான நிறுவனச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியது என்ற நிலையில் அதில் ஓய்வு பெறும் வயதை அமல்படுத்துதல் மற்றும் இளம் திறமையான இளைஞர்களைத் தலைமைப் பதவிகளுக்கு உயர்த்துதல் ஆகியவை அடங்கும்.
  • அவரது வழிகாட்டுதலின் கீழிருந்த குழுவானது உலகளவில் அதன் பாதையை விரிவுபடுத்தியது என்பதோடு குறிப்பிடத்தக்க சர்வதேச கையகப் படுத்துதல்களையும் மேற்கொண்டது:
  • டெட்லி டீ (2000): இந்த கையகப்படுத்தல் உலகளாவிய குடிக்கும் பானச் சந்தையில் டாடாவின் நுழைவைக் குறித்தது.
  • VSNL (2002): விதேஷ் சஞ்சார் நிகாம் லிமிடெட் (VSNL) நிறுவனத்தைக் கையகப்படுத்தியது என்பது தொலைத்தொடர்பு துறையில் டாடாவை ஒரு முக்கிய நபராக நிலைநிறுத்தியது.
  • கோரஸ் ஸ்டீல் (2007): இது ஒரு இந்திய நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட மிகப் பெரிய கையகப்படுத்தல்களில் ஒன்றாகும் என்ற நிலையில் இந்தக் கையகப்படுத்தல் உலகளாவிய எஃகுத் தொழிலில் டாடாவின் இருப்பை வலுப்படுத்தியது.
  • 2012 ஆம் ஆண்டில் ஸ்டார்பக்ஸ் உடன் கூட்டை நிறுவியது.
  • ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் (2008): இந்த உத்திசார் நடவடிக்கையானது சொகுசு தானியங்கி மோட்டார் வாகனத் துறையில் டாடாவின் நற்பெயரை மேலும் உயர்த்தியது.
  • ஏர் இந்தியா (2022): தேசிய விமான நிறுவனத்தைக் கையகப்படுத்துவதில் டாடாவின் பங்கு, முக்கியச் சின்னமான விளங்கும் இந்திய அடையாள நிறுவனங்களைப் புத்துயிர் ஊட்டுவதற்கான அவரது உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

குறிப்பிடத்தக்கச் சாதனைகள்

  • டாடாவின் பதவிக்காலம் பல அற்புதமான முன்னெடுப்புகள் மற்றும் நிறுவனத்தை மறு வரையறை செய்த உத்திசார் கையகப்படுத்துதல்களால் குறிக்கப்பட்டது:
  • டாடா இண்டிகா (1998): இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டப் பயணிகள் காரின் வெளியீடு இந்திய வாகனத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.
  • டாடா நானோ (2008): ரூ. 1 லட்சம் விலையில், இந்திய நடுத்தர வர்க்கத்தினருக்கு கார் பெற வழி செய்யும் வகையில் டாடா நானோ உருவாக்கப்பட்டது என்பதோடு, இது மலிவு விலை மற்றும் புதுமைக்கான டாடாவின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

கொடையாளியாக இவரின் முன்னெடுப்புகள்

  • ரத்தன் டாடாவின் இரக்கமுள்ள நன்கொடையாளராக மற்றும் சமூக நலனில் அவரின் ஆழ்ந்த அர்ப்பணிப்பின் தாக்கம் வணிகத்திற்கு அப்பாற்பட்டது:

டாடா அறக்கட்டளைகள்

  • இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் லாபத்தில் கணிசமான பகுதியை அவர் கல்வி, சுகாதாரம் மற்றும் கிராமப்புற வளர்ச்சியில் கவனம் செலுத்தும் முன்னெடுப்புகளில் 65% லாபம் ஈட்டினார்.

கோவிட்-19 நிவாரணம்

  • தொற்றுநோய்க்குப் பதிலளிக்கும் விதமாக, கோவிட்-19 க்கு எதிரான இந்தியாவின் பெரும் போராட்டத்தை ஆதரிப்பதற்காக டாடா 2021 ஆம் ஆண்டில் ரூ 500 கோடி நன்கொடை அளித்தது, நெருக்கடிகளின் போது தேசிய நலனுக்கான அவரின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

உலகளாவியத் தொண்டு

  • அவரது தாராள மனப்பான்மையினால் ஹார்வர்ட் வணிகப் பள்ளிக்கு ஒரு நிர்வாக மையத்தை நிறுவ, 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நன்கொடை அளிக்கப்பட்டது, இது எதிர்காலத் தலைவர்களை வடிவமைக்கும் கல்வியின் சக்தியில் அவரது நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.

சுகாதார முன்னெடுப்புகள்

  • கொல்கத்தாவில் டாடா மருத்துவ மையத்தை நிறுவி, பின்தங்கியச் சமூகங்களுக்கு மலிவு விலையில் புற்றுநோய் சிகிச்சையை வழங்குவதில் டாடா முக்கியப் பங்கு வகித்தார்.
  • 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் உதவுவதற்காக தாஜ் பொதுச் சேவை நல அறக்கட்டளையை நிறுவினார்.

விலங்குகளின் நலம்

  • விலங்குகள் நலனுக்காக வாழ்நாள் முழுவதும் வாதிடச் செய்யும் டாடா, டாடா குழுமத்தின் தலைமையகத்தில் ஆதரவற்ற விலங்குகளைப் பராமரிக்கும் அணுகலை உறுதி செய்தார்.
  • 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மும்பையில் 24/7 அவசரகாலச் சிகிச்சையை வழங்கும் அதிநவீன விலங்கு மருத்துவமனையைத் திறப்பது அவரது கடைசி முக்கிய முன்னெடுப்பாகும்.

தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பு

நவி மும்பை சர்வதேச விமான நிலையம்

  • ரத்தன் டாடாவின் பார்வை பெருநிறுவன வெற்றியுடன் மட்டும் நின்று விடவில்லை; அது தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக விரிவடைந்தது.
  • ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம், நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் வளர்ச்சியின் போது அவர் அதனை ஊக்குவித்தது, இது பல சவால்களை எதிர்கொண்ட ஒரு திட்டமாகும்.
  • இந்த முயற்சியின் சாத்தியக்கூறுகள் மீதான அவரது நம்பிக்கையானது, ஆதரவையும், வளங்களையும் அதிகரிக்க உதவியது என்பதோடு எண்ணற்ற குடிமக்களுக்குப் பயனளிக்கும் விமான நிலையத்தை அது யதார்த்தமாக்கியது.

லாபத்திற்கு மேலான நோக்கம்

  • டாடாவைப் பொறுத்தவரையில், வெற்றி ஒருபோதும் அடிமட்டத்தில் மட்டும் இல்லை.
  • தாராவியின் நவீனமயமாக்கல், அவர்களது வாழ்க்கையை மேம்படுத்துதல் மற்றும் நிலையான சூழலை உருவாக்குதல் போன்ற சிறந்த ஊக்கமளிக்கும் முன்னெடுப்புகளுக்கு சேவை செய்வதில் அவரது அர்ப்பணிப்பு மதிப்புமிக்கதாகும்.

வணிகத்திற்கு அப்பாற்பட்டப் பங்களிப்புகள்

  • தீவிரத் தலைமையிலிருந்து விலகிய பிறகு, ரத்தன் டாடா இந்தியாவின் பொருளாதார நிலப்பரப்பை புத்தொழில் நிறுவனங்களில் ஒரு முக்கிய முதலீட்டாளராகத் தொடர்ந்து வடிவமைத்தார்.
  • பேடிஎம் (Paytm), ஓலா எலக்ட்ரிக், மற்றும் அர்பன் கம்பெனி உள்ளிட்ட பல புதுமையான நிறுவனங்களை அவர் ஆதரித்து, இந்தியாவில் தொழில்முனைவு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஊக்குவிக்கிறார்.
  • அவரது செயல்திறன்கள் வணிகத் துறைக்கு அப்பாற்பட்டது.
  • 2021 ஆம் ஆண்டில் அசாம் அரசாங்கத்தால் அவருக்கு அஸ்ஸாம் பைபவ் விருது வழங்கப்பட்டது மற்றும் 2023 ஆம் ஆண்டில் ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியாவின் கெளரவ அதிகாரி விருதால் அங்கீகரிக்கப் பட்டார்.
  • 2008 ஆம் ஆண்டில் ஐஐடி பாம்பேயில் இருந்து கௌரவ டாக்டர் ஆஃப் சயின்ஸ் மற்றும் 2014 ஆம் ஆண்டில் இரண்டாம் எலிசபெத் மகாராணியால் வழங்கப்பட்ட Honorary Knight Grand Cross of the Order of the British Empire (GBE) ஆகிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டது.
  • 2008 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் அரசாங்கத்தின் கௌரவ குடிமகன் விருதையும் பெற்றார்.
  • 2000 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் மற்றும் 2008 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருதுகளால் கௌரவிக்கப்பட்டார்.
  • ஒரு உரிமம் பெற்ற விமானியான இவர் ஒப்பீட்டளவில் எளிமையான வாழ்க்கை முறையை வழி நடத்தினார் என்பதோடு வணிக வட்டாரங்களில் மட்டுமல்ல, பொது மக்களிடையேயும் அவர் பாராட்டைப் பெற்றார்.

மரபு

  • தொழில் மற்றும் சமூகத்திற்கு ரத்தன் டாடாவின் பங்களிப்புகள் ஆழமானவை.
  • அவர் புதுமை, கருணை மற்றும் சமூகப் பொறுப்பிற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார்.
  • அவரது தொலைநோக்குப் பார்வை, டாடா குழுமத்தைச் சிறப்பான மற்றும் மீள்தன்மையின் அடையாளமாக மாற்ற உதவியது, மேலும் அவரது நன்கொடை முயற்சிகள் எண்ணற்ற நபர்களை லாபத்தை மட்டுமல்ல, நோக்கத்தையும் தொடர தூண்டியது.
  • இந்தியா அதன் எதிர்காலத்தை வழிநடத்தும் போது, ​​ரத்தன் டாடாவின் செல்வாக்கு சந்தேகத்திற்கு இடமின்றி தொடர்ந்து எதிரொலிக்கும் என்பதோடு அவரது தொலைநோக்குத் தலைமையின் ஆற்றல் மற்றும் சமூகத்திற்கு திரும்பக் கொடுப்பதன் முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டுகிறது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்