TNPSC Thervupettagam

ராஜாவின் சிம்பொனியும், கிடைக்காத அங்கீகாரமும்!

March 7 , 2025 7 days 67 0

ராஜாவின் சிம்பொனியும், கிடைக்காத அங்கீகாரமும்!

  • லண்டனில் தனது சிம்பொனியை மார்ச் 8ஆம் தேதி அரங்கேற்ற, வியாழன் (மார்ச் 6) அன்று விமானம் ஏறிவிட்டார் இளையராஜா. “சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்துவது எனக்கான பெருமை அல்ல; நாட்டின் பெருமை” என்று செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டது நூறு சதவீதம் உண்மை. இளையராஜாவின் சிம்பொனி சாதனைக்குப் பின்னே, பேசப்பட வேண்டிய வரலாறு உண்டு.

வெளிவராத சிம்​பொனி:

  • 1993இல் இளைய​ராஜா தனது முதல் சிம்​பொனியை அமைக்​கப்​போகிறார் என்கிற செய்தி, இந்தியா முழு​வதும் அனைத்து இதழ்​களி​லும் பரபரப்புச் செய்தியாக மாறியது. தமிழ்​நாட்​டின் அனைத்து ஊடகங்​களும் அது குறித்து விரிவாக எழுதின. நாடாளு​மன்​றத்​தில் இளைய​ராஜா​வின் சிம்​பொனி குறித்து கவன ஈர்ப்புத் தீர்​மானம் ஒன்றைக் கொண்டு​வந்து, பாராட்டுத் தீர்​மானத்தை நிறைவேற்ற வேண்​டும் என்ற கோரிக்கையை வைகோ முன்​வைத்​தார்.
  • சென்னை மாநகர் முழு​வதும் பல அமைப்புகள் சுவரொட்​டிகளை ஒட்டித் தமது மகிழ்ச்சியை வெளிப்​படுத்​தின. திரைத் துறை​யினர் கொண்​டாடி மகிழ்ந்​தார்​கள். ‘அடை​யாறு மாணவர் நகலகம்’ உரிமை​யாளர் அருணாசலம் பெரி​யார் திடலில் இசைஞானிக்​குப் பாராட்டுக் கூட்டம் ஏற்பாடு செய்​தார்.
  • சாரட் வண்டி​யில் அமர வைக்​கப்​பட்டு, ஊர்வலமாக அழைத்​துச் செல்​லப்​பட்ட இசைஞானி, பத்திரி​கை​யாளர்​களிடம் பேசி​ய​போது ‘இந்தச் சாதனையைத் தமிழர்​களோடு பகிர்ந்து​கொள்​ளாமல் வேறு யாரிடம் பகிர்ந்து​கொள்​வது’ என்று கூறியது அனைவரை​யும் கவர்ந்​தது.
  • ஆனால், பதிவுசெய்​யப்​பட்ட இசைக் கோவை வெளி​யீடு கெடு​வாய்ப்​பாகத் தள்ளிப்​போனது ஏன் என்கிற கேள்வி விவா​திக்​கப்​பட்டு, மெல்ல மெல்ல மங்கிப்​போனது. அது குறித்​துக் கேள்வி கேட்​கப்​படும்​போது, விரை​வில் வெளிவரும் என்கிற பதிலோடு கடந்து​விடு​வார் இளைய​ராஜா. பெரும் இடைவெளிக்​குப் பிறகு இரண்டு ஆண்டு​களுக்கு முன்பு கங்கை அமரன், தனது அண்ணன் இப்போது சிம்​பொனி எழுதிக்​கொண்​டிருக்​கிறார் என்று சொல்லிச் சற்று ஆர்வத்தைக் கிளறி​னார்.

மறுக்​கப்​பட்ட அங்கீ​காரம்:

  • இடைப்​பட்ட இந்தக் காலத்​தில் இளைய​ராஜாவுக்கு உரிய அங்கீ​காரத்தை மத்திய அரசும் தமிழ்​நாடு அரசும் சரிவர அளிக்க​வில்லை என்கிற குற்​றச்​சாட்டு நிலவிவரு​கிறது. இளைய​ராஜா​வின் ரசிகர்​களும் அரசியல் தலைவர்​களும்கூட இதைச் சுட்​டிக்​காட்டி வந்தனர்.
  • அவருக்​குப் பின் வந்தவர்​களும், பிற துறை​களில் இளைய​வராக இருந்​தவர்​களும்கூட இந்தியா​வின் மிக உயர்ந்த விருதுகளால் அலங்​கரிக்​கப்​பட்​டனர். இளைய​ராஜா மீதான இந்த அலட்​சி​யத்தைச் சுட்​டிக்​காட்டி, ஒரு நீண்ட அறிக்கையை விடு​தலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு​மாவளவன் 28.1.2008 அன்று வெளி​யிட்​டார்.
  • அதில் ‘இசைத் துறை​யில் கடந்த 30 ஆண்டு​களுக்​கும் மேலாகச் சீரிய பங்காற்றிப் பெரும் பெருமை சேர்த்​துள்ளார் இளைய​ராஜா. அவரைப் போன்ற மாமேதைகளுக்கு பாரத ரத்னா போன்ற உயரிய விருதுகளை வழங்கு​வ​தில் தாமதம் இருக்கக் கூடாது.
  • விருது வழங்​காமல் இருப்​பதும்கூட ஒருவகை​யில் அவமானப்​படுத்​தும் செயல்​தான்’ என்று காட்​ட​மாகவே குறிப்​பிட்​டிருந்​தார். வைகோ​வும் தனது கருத்தை அப்போது பதிவுசெய்திருந்​தார். ஆனால், தமிழகத்தை ஆண்ட அரசுகள் ஏன் இதை முன்னெடுப்பதில் அக்கறை காட்​டாமல் போயின என்பது புதிர்.
  • இது ஒருபக்கம் என்றால், அண்மைக் காலமாகச் சமூக வலைத்​தளங்​களில் இளைய​ராஜா​வின் மீது தொடுக்​கப்​படும் தாக்​குதல்கள் திடீரென அதிகரித்தன. ஆனால், அவர் அதைப் பற்றிக் கவலைப்​படவே இல்லை. தனது உரிமை​யிலும் படைப்​பிலும் அவர் உறுதியாக நின்று முன்னேறி​னார். சொல்​லப்​போ​னால், தன்னைப் பற்றி வெளி​யிடப்​பட்ட அவதூறுகளுக்கு நடுவே, புதிய சிம்​பொனியை எழுதி முடித்து​விட்​டார்.
  • “யார் என்னைத் திட்​டி​னாலும் கவலை​யில்லை. நான் எனது வேலை​யில் கவனமாக இருக்​கிறேன்” என்று வெளிப்​படை​யாகச் சொன்​னார். இதேபோன்ற வாக்​கி​யத்தை இசை மேதை மொசார்ட்டும் பயன்​படுத்​தி​யிருக்​கிறார். “யார் என்னைப் புகழ்ந்​தா​லும் பழித்​தா​லும் அதில் நான் கவனம் செலுத்த மாட்​டேன். எனது சொந்த உணர்​வு​களையே நான் பின்​பற்றுகிறேன்” என்று மொசார்ட் கூறி​யிருப்பது இளைய​ராஜாவுக்​கும் பொருந்தும்.

பெரும் கலைஞர்​களுக்கு அங்கீ​காரம்:

  • மொசார்ட் பிறந்த நகரமான ஆஸ்திரி​யா​வின் சால்​ஸ்​பர்க் நகரம் அவருக்கே அர்ப்​பணிக்​கப்​பட்​டிருக்​கிறது. அவரைப் போன்ற மற்ற பெரும் இசைக் கலைஞர்​களான பாஹ் (எய்​ச​னாஹ்), ஜோசப் ஹைடன் (வியன்​னா), பீதோவன் (பான்) உள்ளிட்​ட​வர்​களின் பிறந்த இடமோ அல்லது அவர்​களின் படைப்புகள் உருவான இடமோ கொண்​டாட்​டத்​துக்கு உரிய பகுதி​களாக இன்றும் போற்றிப் பாது​காக்​கப்​படு​கின்றன. இவர்​களின் இல்லங்​களுக்கு லட்சக்​கணக்கான மக்கள் வருகை தருவதை இப்போதும் காண முடி​யும்.
  • ஒருவேளை, மேற்​கத்திய நாடொன்​றில் இளைய​ராஜா பிறந்​திருந்​தால் அவரும் கொண்​டாடப்​பட்​டிருப்​பார். ஏனென்​றால், அவர் சாதித்த சாதனை அவ்வளவு பிரம்​மாண்​ட​மானது. இந்த 82 வயதுக்​குள் 1,500 திரைப்​படங்​கள், 8,000க்​கும் மேற்​பட்ட பாடல்​கள், தனி ஆல்பங்​கள், ஆயிரக்​கணக்கான மேடைக் கச்சேரி​கள், கவிதைகள், ஒளிப்​படங்​கள், திரைப்​படத் தயாரிப்பு​கள், திரு​வாசகம் சிம்​பொனி எனக் கடந்​திருக்​கிறார்.
  • கர்னாடக இசையில் பஞ்ச​முகி, ராஜலஹரி என்கிற புதிய ராகங்களை உருவாக்​கிப் பிரவாகமெடுத்த இளைய​ராஜா, இப்போது தனது முதல் அசல் சிம்​பொனிக்கு வந்து சேர்ந்​திருக்​கிறார். இதன் மூலம், மேற்​கத்​தியச் செவ்​விசை​யின் மரபில் ஒருவராக இணைந்​திருக்​கிறார்.

ஏன் சிம்​பொனி வியக்​கப்​படு​கிறது?

  • மேற்​கத்​தியச் செவ்​வியல் இசை மரபில் சிம்​பொனி மணி மகுடமாக விளங்கு​கிறது. மத்தியக் காலத்​தில் தோன்றிய சிம்​பொனி எனும் செவ்​வியல் மரபு இசைக் கோவையை இதுவரை 2,822 பேர் எழுதி​யிருக்​கிறார்கள் என்று ஒரு புள்​ளி​விவரம் சொல்​கிறது. இந்தப் பட்டியலில் இந்தியா​வில் இரண்டு பேரின் பெயர்கள் மட்டும் சேர்க்​கப்பட்டிருக்கின்றன.
  • ஒருவர் இளைய​ராஜா (1993), மற்றொருவர் சிதார் மேதை ரவிசங்கர் (2010). இந்த இரண்டு பேரின் சிம்​பொனிக்​கும் ஒரு தனித்​தன்மை உண்டு. இருவருமே இந்திய இசை மரபை அதில் கலந்து, தமது சிம்​பொனிகளைப் படைத்​திருந்​தனர். அதாவது, தூய சிம்​பொனி (pure symphony) இல்லை.
  • ஆசியா​வைச் சேர்ந்​தவர்கள் உருவாக்கிய சிம்​பொனி​யில் அவர்​களது நாட்​டின் செவ்​விசைத் தாக்கம் இருக்​கிறது என்பதை மறுக்க முடி​யாது. ரவிசங்கர் தமது சிம்​பொனி​யில் சிதா​ரை​யும் தபேலா​வை​யும் சேர்த்​தார். தூய சிம்பொனியாகக் கருதப்படாததால் தமது முதல் சிம்​பொனியை இளைய​ராஜா வெளி​யிட​வில்லை என்றும் சொல்​லப்​படு​கிறது.
  • இந்த விமர்​சனம் வரக் கூடாது என்கிற கவனத்​துடன் தனது ‘வேலியன்ட்’ (Valiant) சிம்​பொனியைத் தூய சிம்​பொனி என்று அழைக்கிறார் இளைய​ராஜா. அந்த வகையில், தூய சிம்​பொனியை அமைத்த முதல் இந்தியர் என்கிற வரலாற்றினை அவர் படைக்​கிறார். இதை உரிய முறை​யில் கொண்டாட வேண்​டியது அறிவும் அறமும் நிறைந்த சமூகத்​தின் கடமை. ஆனால், இளைய​ராஜா இப்போது சிம்​பொனியைப் படைத்​திருக்​கையில் சக இசைப் படைப்​பாளி​களின் கனத்த அமைதி​யைப் பார்க்​கும்​போது வியப்பாக இருக்​கிறது.
  • மொசார்ட்​டின் சம காலத்​தவரும் அவரை விட மூத்​தவரும் சிம்​பொனி​யின் தந்தை என அழைக்​கப்​படு​பவருமான ஜோசப் ஹைடன் (1732-1809) மொசார்ட்​டைப் பற்றிப் பின்​வரு​மாறு கூறுகிறார். “ஒரு நேர்​மையான மனித​னாகக் கடவுளின் முன் சொல்​கிறேன். உனது மகன் மொசார்ட்டை நேரடி​யாக​வும் அவரது புகழின் மூலமாக​வும் அறிவேன். இசைக் கோப்​பின் உயர்ந்த திறமை​யை​யும், அதன் சுவையை​யும் அறிந்​தவர் அவர்.
  • மொசார்ட் இசையின் அவதா​ரம்.” இப்படிக் கூறும் மனப்​பக்கு​வ​மும் திறமை​யும் யாருக்கு இருக்​கிறது என்கிற கேள்வி ஒருபுறமிருக்கட்டும்... இவ்வளவு சாதித்​தும் இந்தியா​வின் உயர் விருதான பாரத ரத்னாவைப் பெறு​வதற்கு வேறு என்ன கூடுதல் தகுதி வேண்​டும்? மேதைகளை அவர்கள் வாழும் காலத்​திலேயே கொண்​டாடும் தகு​தியை வளர்த்​துக்​கொள்ளாத சமூகமாக இருப்​ப​திலிருந்து ​விடு​படு​வதற்கு இது ஒரு ​வாய்ப்பு. வீரம் மிக்​கவர் என்ற பொருள் தரும் Valiant சிம்​பொனியை வழங்கும் இளை​ய​ராஜா, ​விரை​வில் ​பாரத ரத்​னா​வாகச் சிறப்​பிக்​கப்​படு​வார் என்று நம்​புவோம்​.

நன்றி: இந்து தமிழ் திசை (07 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்