- விஞ்ஞானிகள் வாத்து போன்ற டைனோசர் ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளனர். அந்த டைனோசரின் பெயர் நேட்டோவெனேட்டர் பாலிடோன்டஸ் (Natovenator polydontus).
- இதன் பொருள் 'அதிக பல்லுடைய நீச்சல் வேட்டைக்காரன்'. இந்த டைனோசர் சுமார் 71 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகும். இது இரு கால்களை உடைய ஒரு பெரிய வாத்தைவிட கொஞ்சம் பெரியது. இது நீரில் பல காலம் வாழ்திருக்கலாம் என்று அனுமானிக்கின்றனர்.
நீளமான இலகுவான உடலமைப்புடன் ஒரு டைனோசர்
- விஞ்ஞானிகள் இப்போது கண்டறிந்துள்ள வாத்து போன்ற புதிய வகை டைனோசர் இனம், அதனுடைய நீண்ட இலகுவான உடலமைப்பு, நவீன பென்குயின்போல் நீருக்கடியில் மூழ்கி டைவ் அடித்து, இரைபிடிக்கவும் உதவுகிறது. இது 71 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்ததாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.
தீரோபோட் வாத்து போன்ற புதிய வகை டைனோசர்
- இந்த கண்டுபிடிப்பு வியாழக்கிழமை, "கம்யூனிகேஷன்ஸ் உயிரியல்" (Communications Biology) பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. இது பறவையல்லாத தீரோபோட் (Theropod) வகையைச் சேர்ந்தது என்றும் மேலும் இரண்டு காலுள்ள மாமிச உண்ணி டைனோசர்போல நீளவாக்கில் உடலமைப்பு உள்ளது.
எளிதில் உணவுபிடிக்க ஏற்ற உடல்வாகு
- வாத்து போல நீளவாக்கினாலான உடலமைப்பு கொண்டதால் எளிதில் நீரைக் கிழித்துக்கொண்டு , நீருக்கடியில் சென்று எளிதாக உணவைப் பிடித்து இழுத்து வரும் வகையில் உள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
மங்கோலியாவின் டைனோ
- இதுவரை கிடைத்துள்ள வாத்து போன்ற புதிய வகை டைனோசர் புதைபடிமங்களில் இப்படிப்பட்ட நீளவாக்கினாலான உடல் கிடையாது. இப்போதைய புதிய கண்டுபிடிப்பில், விஞ்ஞானிகள், மங்கோலியாவில்(கிழக்கு ஆசியா) கண்டெடுத்த புதைபடிம விலங்குகளின் எலும்புகளை ஆய்வு செய்தனர்
- இப்போதைய புதிய கண்டுபிடிப்பில், விஞ்ஞானிகள் மங்கோலியாவில்(கிழக்கு ஆசியா) கண்டெடுத்த புதைபடிம விலங்குகளின் எலும்புகளை ஆய்வு செய்தனர். புதைபடிமங்களை ஆய்வு செய்ததில், விஞ்ஞானிகள் டைனோசரின் உடலில் பல வடிவமைப்பு அம்சங்களைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். இது டைவிங்கிற்கு ஏற்றதாக இருந்தது. அதன் வால் நோக்கி இருக்கும் விலா எலும்புகள் உட்பட அதன் நெறிப்படுத்தப்பட்ட உடல் வடிவத்தைத் தெரிவிக்கிறது.
நீண்ட கழுத்து கொண்ட நேட்டோவெனேட்டர்
- குளங்கள் மற்றும் ஆறுகளுக்கு அடுத்ததாக இன்று காணக்கூடிய வாத்துக்கள் போன்ற நவீன டைவிங்-பறவைகளைப் போன்ற நீண்ட கழுத்தையும் கொண்டிருந்தது. நீண்ட கழுத்து கொண்ட "நேட்டோவெனேட்டர் ஒரு திறமையான நீச்சல் வேட்டையாடும் என்று அதன் உடல் வடிவம் தெரிவிக்கிறது" என்று ஆய்வு கூறுகிறது.
தாடை ஏராளமான பற்களுடன்
- இப்போது கிடைத்துள்ள டைனோசரின் புதைபடிவ எலும்புகள் விலங்குகளின் தாடையின் அளவுடன் அசாதாரண அளவிலான பற்கள் உள்ளதையும் வெளிப்படுத்தின.
பல்லும் உணவும்
- இந்த டைனோசரின் தாடையிலுள்ள ஏராளாமான பற்கள், மீன் மற்றும் பூச்சிகளை உணவாகக் உட்கொண்டிருந்ததைக் காட்டுகின்றன. ஆனால் நேட்டோவெனேட்டரின் வயிற்றின் புதைபடிவ எச்சங்களை கண்டுபிடிக்க வேண்டும். அவற்றைக் கண்டறிந்தால், அவை மாமிச உணவை சாப்பிடுமா என்பதும் தெரிந்துவிடும் என்றும் விஞ்ஞானிகள் கூறினர்.
நன்றி: தினமணி (11 – 12 – 2022)