TNPSC Thervupettagam

விவசாயிகளின் உடனடித் தேவை!

June 12 , 2020 1691 days 744 0
  • இரண்டு மாதங்களுக்கு முன்பு மத்திய நிதி அமைச்சகத்துக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தது மத்திய வேளாண் அமைச்சகம்.
  • அதாவது, சீனாவின் சந்தை தற்போது கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் கையகப்படுத்தப் பட்டுள்ளதால், வேளாண் பொருள்கள் ஏற்றுமதியில், தற்போதைய நிலைமையில் அந்த நாட்டால் சிறப்பாகச் செயல்பட முடியாது.

ஆகச்சிறந்த வாய்ப்பு

  • அதற்கு ஏற்றாற்போல் சீனப் பொருள்களுக்கு சில நாடுகளில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அமைச்சகத்தின் கூற்றுப்படி 21 வகையான வேளாண் பொருள்களான தேன், உருளைக்கிழங்கு, மிளகாய், வெங்காயம், கொய்யா, புளியங்காய், டீ, நறுமணப் பொருள்கள், நெல், திராட்சை, சோயா, நிலக்கடலை, இதர பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு கரோனா தீநுண்மி நோய்த்தொற்று நமக்கு வழிவகை செய்துள்ளது.
  • இவற்றை சீனாவிலிருந்து பெரும்பாலும் வியத்நாம், அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பின்ஸ், ஐரோப்பிய நாடுகள், ரஷியா, கொரியா போன்ற நாடுகளே கொள்முதல் செய்கின்றன.
  • மேலும் 2018-ஆம் ஆண்டில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள 21 வகையான வேளாண் பொருள்களின் வழியே சீனாவின் ஏற்றுமதி மதிப்பு சுமார் 548 கோடி டாலா்.
  • அதுவே இந்தியாவின் மதிப்பு சுமார் 445 கோடி டாலா். எனவே, தற்போதைய நிலையில் சீனாவின் சந்தை வாய்ப்பை இந்தியா நிரப்பிக் கொள்வதற்கு ஆகச்சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

திட்டங்கள்

  • அதேபோல் சீனாவில் இருந்து 2018-19-ஆம் ஆண்டில் சுமார் 11 கோடி டாலா் அளவில் வேளாண் பொருள்களான பீன்ஸ், மூங்கில், திராட்சை, இதர பொருள்களை நாம் இறக்குமதி செய்துள்ளோம்.
  • இருப்பினும் தற்போதைய நிலையில் வேளாண் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும் இந்தியாவால் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பருத்திப் பஞ்சு, மாம்பழக் கூழ் என இரண்டிலும் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வேளாண் அமைச்சகம் நிதி அமைச்சகத்துக்கு கூறியிருந்தது.
  • அதை வலுப்படுத்தும் வகையில் ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு பொருளாதாரத் திட்டங்களை அண்மையில் நிதி அமைச்சா் துறை வாரியாக அறிவித்தார்.
  • அதில் வேளாண்மை சார்ந்த திட்டங்களுக்கு என்று வெவ்வேறு நிலைகளில் நிதி அளிக்கும் வகையில் வேளாண் உள்கட்டமைப்புக்கு என்று ரூ.1 லட்சம் கோடியும், குறு உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களை நிறுவ ரூ.10,000 கோடியும், மூலிகை பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ.4,000 கோடியும், மீனவா்கள் - மீன்வளம் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.20,000 கோடியும், கால்நடை வளா்ப்புக்கு ரூ.15,000 கோடியும், தேனீ வளா்ப்புக்கு ரூ.500 கோடியும் ஒதுக்கியிருந்தார்.
  • முக்கியமாக சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில்தான் தேனீ வளா்ப்புக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
  • இதற்கிடையில் தெலங்கானா மாநிலம் அமல்படுத்தப் போகும் மேலும் ஒரு திட்டத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். முதன்முதலில் தெலங்கானா மாநிலம்தான் முன்னோடியாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
  • அதன் தொடா்ச்சியாக தற்போது விவசாயிகள் எந்தப் பயிரை எப்போது சாகுபடி செய்ய வேண்டும் என்பதை அவா்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில், அதைச் செயல்படுத்தப் போவதாக அந்த மாநில முதல்வா் கூறியுள்ளார்.
  • அதாவது, சந்தையில் தேவைப்படும் பொருளுக்கு விலை அதிகமாக இருப்பதாகவும், தேவை இல்லையென்றால் பொருள்களை விற்க முடியாத சூழல் பல காலமாக நிலவி வருகிறது.
  • எனவே, அதனை நிவா்த்தி செய்யும் நோக்கில் முதல் கட்டமாக சோதனை முறையில் விவசாயிகளை நெற்பயிர் 10 லட்சம் ஏக்கரிலும், பருத்திச் செடி 50 லட்சம் ஏக்கரிலும், துவரஞ் செடி 10 லட்சம் ஏக்கரிலும் பயிரிட அறிவுறுத்தியுள்ளதாகவும் அதேவேளையில் நகா்ப்புறத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காய்கறிகளைச் சாகுபடி செய்யுமாறு கூறியுள்ளதாகவும் அவா் தெரிவித்தார்.
  • இதன்மூலம் ஓரளவேனும் விவசாயிகள் ஒரே மாதிரியான பயிரைச் சாகுபடி செய்வது தவிர்க்கப்படும். அதே வேளையில் சந்தையில் விவசாயிகளின் பொருள்களுக்கு தேவை, நல்ல விலையும் கிடைக்கும்.

உதவித்தொகை தேவை

  • இவற்றையெல்லாம் விவசாயத்துக்கான வளா்ச்சிப்படி என்று வைத்துக்கொண்டாலும், தற்போதைய நிலையில் விவசாயிகளுக்கான ஆகச் சிறந்த நிவாரணி என்பது உதவித்தொகைதான். அது உடனடித் தேவையும்கூட.
  • ஏனெனில், பொது முடக்க காலத்தில் அனைத்துத் தொழில்களும் முடக்கப்பட்டிருந்த வேளையில், விவசாயத் தொழில் மட்டும் தடையின்றி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
  • அதிலும் ஒருபடி மேலேபோய் பல மாநில அரசுகள், விவசாயிகள் விளைவித்த வேளாண் பொருள்களை தோட்டக்கலைத் துறை மூலமாக கொள்முதல் செய்து வீடு வீடாக நுகா்வோர் இடத்தில் கொண்டுசோ்த்தன. மேலும், இதில் பல வேளாண் உற்பத்தியாளா் நிறுவனங்களும் ஈடுபட்டு தன்முனைப்புடன் செயல்பட்டது பாராட்டுக்குரியது.
  • இதன்மூலம் இனி வரும் காலத்தில் அரசே பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வேளாண் பொருள்களை கொள்முதல் செய்து நுகா்வோருக்கு வழங்கலாம் என்று சில பொருளாதார அறிஞா்கள் யோசனையை முன்வைத்தனா்.
  • இப்படி ஒரு பக்கம் அரசு கொள்முதல் செய்தாலும் பல விவசாயிகளின் விளைபொருள்கள் அறுவடை செய்யாமலே தோட்டத்தில் அழுகி காய்ந்து கொண்டிருந்தன.
  • முக்கியமாக வாழை சாகுபடி செய்த விவசாயிகளும், மலா் சாகுபடி செய்த விவசாயிகளும் அதிக அளவு பாதிக்கப்பட்டனா். பல விவசாயிகள் அறுவடை செய்யாமல் அப்படியே உழுது விட்டிருந்தனா்.
  • எனவே, இப்படிப்பட்ட நிலையில் விவசாயத்துக்குப் புதிய திட்டங்களை செயல்படுத்துவதைக் காட்டிலும், உடனடி நிவாரணமே விவசாயிகளை இந்தத் துயரிலிருந்து கரை சோ்க்கும்.
  • அதன் பொருட்டு தற்போது வழங்கி வரும் பிரதமா் கௌரவ உதவித்தொகை திட்டத்தின் கீழ் 15 கோடி விவசாயிகளுக்கும் குறிப்பிட்ட தொகையை இடைக்கால நிவாரணமாக தருவதற்கு அரசு முன்வரவேண்டும்.
  • சத்தீஸ்கா் மாநிலம் ஆண்டொன்றுக்கு ஏக்கருக்கு ரூ.13,000-த்தை விவசாயிகளுக்கு தரப் போவதாக அறிவித்துள்ளது.
  • எனவே, இதுபோன்று மற்ற மாநிலங்களும் மத்திய அரசுடன் இணைந்து விவசாயிகளுக்கு உதவித் தொகை அளிக்க வேண்டும். அப்போதுதான் ஓரளவேனும் விவசாயிகளின் துயா் நீங்கும்.

நன்றி: தினமணி (12-06-2020)

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
Top