TNPSC Thervupettagam

வெற்றியை ஈர்க்க வேண்டும், துரத்தக் கூடாது!

October 10 , 2024 98 days 115 0

வெற்றியை ஈர்க்க வேண்டும், துரத்தக் கூடாது!

  • ஆறு மாதங்களாகத் தொடர்ந்து பல நேர்காணல்களைச் சச்சு கொடுத்துவிட்டாள். பயன் ஏதும் இல்லை. சோர்ந்து போவதும் பதற்றமாவதும் நம்பிக்கையற்றுப் போவதும்தான் மிச்சம்.
  • “நஸீ இன்னைக்கு யூ.எஸ் க்ளையண்டோட இண்டர்வியூ இருக்கு. நல்லபடியா முடிஞ்சா என் ஆன் சைட் கனவு நிறைவேறிடும்.”
  • ”ஆல் தி பெஸ்ட் சச்சு.”
  • அவள் முகத்தில் பதற்றமும் பயமும் அப்பட்டமாகத் தெரிந்தது.
  • “கூலா இரு சச்சு. எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்.”
  • நானும் அலுவலகம் சென்று, மாலை அறைக்குத் திரும்பினேன். சச்சு சோர்ந்து போய்தான் இருந்தார்.
  • அவரைத் தொந்தரவு செய்ய மனமில்லை. நான் உறங்கிவிட்டேன். ஞாயிற்றுக் கிழமை என்பதால் தாமதமாக எழுந்தார்.
  • நம் வாழ்க்கையில் நாம் ஏதோ ஒன்றைத் துரத்திக் கொண்டிருக்கிறோம். அது வெற்றியாக இருக்கலாம், அன்பாக இருக்கலாம், ஏதோ ஒன்றாக இருக்கலாம். அதுவல்ல பிரச்சினை. இந்தத் துரத்தல் பெரும்பாலும் நம்மைச் சோர்வடையச் செய்து, நாம் விரும்புவதை அடைவதிலிருந்து நம்மைத் தூரமாக்குகிறது. துரத்துவதை விடுத்து ஈர்க்கக் கற்றுக் கொண்டால் பயணம் வேறு விதமாக இருக்கும். பயணம் என்று சொல்வதற்குக் காரணம், எந்த ஒரு செயலைச் செய்தாலும் வெற்றி தோல்வியோடு முற்றுப் பெறுவதில்லை அல்லவா? சரி, முதலில் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்துவிடலாம்.
  • துரத்துதல் (Chasing) என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கை அல்லது விருப்பத்தை நோக்கித் தொடர்ந்து முயற்சி செய்வது. முயற்சி செய்வது நல்லதுதான், ஆனால் ஒரு விஷயத்தை நூறு முறை சரியாகச் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்? அது போன்றதுதான் துரத்துதல். இது பெரும்பாலும் பதற்றம், அழுத்தம், ஏமாற்றத்தைத் தரும்.
  • மறுபுறம், ஈர்த்தல் (attracting) என்பது நாம் விரும்புவதை வாழ்க்கைக்குக் கொண்டு வர நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வது. நாம் அதுவாக ஆவது. அதாவது அந்தச் செயலாக மாறுவது . இங்கு முயற்சி என்பது தன்னைத் தகுதியாக்கிக் கொள்ளுதல் என்று வைத்துக் கொள்ளலாம். இது அமைதி, நம்பிக்கை, பொறுமையின் நிலையிலிருந்து செயல்பட உதவும்.
  • துரத்தினால் என்ன நடக்கும் என்பதற்குச் சச்சுவின் கதை ஓர் உதாரணம்.
  • வெற்றியை ஈர்ப்பது என்பது ஒரு மனநிலை. அது உங்கள் எண்ணங்களில் தொடங்குகிறது. பின்னர் உங்கள் செயல்களில் பிரதிபலிக்கிறது.
  • முதலில் நாம் வெற்றி அடையத் தேவையான விஷயங்களைத் தேடிக் கற்க வேண்டும். கற்றதைச் சரியான நேரத்தில் நம்பிக்கையோடு சரியான சபையில் அதை எடுத்துக் காட்ட வேண்டும். உங்கள் செயல்களின் மீது உங்களுக்கு நம்பிக்கை வரும்போது அது வெற்றியை ஈர்க்கும் பயணமாக மாறும்.
  • ஒவ்வொரு நாளும் சிறு முன்னேற்றங்களைச் செய்யுங்கள். உங்கள் சூழலை நேர்மறையாக மாற்றுங்கள். உங்கள் பயங்களை எதிர்கொள்ளுங்கள். உங்கள் திறன்களை வெளிப்படுத்துங்கள், மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள்.
  • எதிர்மறை எண்ணங்கள், தாமதம், தோல்வி பயம் ஆகியவற்றை உங்கள் வழியிலிருந்து அகற்றுங்கள். இவை வெற்றியின் பெரிய தடைகள். அவற்றை உடைத்தெறிந்து, உங்கள் கனவுகளை நோக்கி முன்னேறுங்கள்.
  • துரத்துவதை நிறுத்தி, ஈர்ப்பதைத் தொடங்குவதற்கான 10 வழிகள்:
  • 1. நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதைத் துல்லியமாக அறியுங்கள். உங்கள் இலக்குகளை எழுதி, அவற்றை அடிக்கடி மதிப்பாய்வு செய்யுங்கள்.
  • 2. உங்கள் வாழ்க்கையின் தற்போதைய நிலையை ஏற்றுக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு அமைதியையும் தெளிவையும் தரும்.
  • 3. துரத்தும் மனநிலை பெரும்பாலும் வெளிப்புற அங்கீகாரத்தை நாடுகிறது. ஈர்க்கும் மனநிலை உள் மகிழ்ச்சி மற்றும் தன்னிறைவை ஊக்குவிக்கிறது.
  • 4. உங்கள் திறன்களை மேம்படுத்தி, உங்கள் மதிப்பை உணர்வது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. இது உங்கள் தினசரி வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • 5. உங்கள் திறன்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இது புதிய வாய்ப்புகளை ஈர்க்கும்.
  • 6. எதிர்காலத்தைப் பற்றிய கவலை பெரும்பாலும் துரத்தும் மனநிலையுடன் தொடர்புடையது. ஈர்க்கும் மனநிலை நிகழ்காலத்தில் கவனம் செலுத்த உதவுகிறது. இது கவலையைக் குறைக்கும்.
  • 7. துரத்தும் மனநிலை உங்களைக் குறுகிய பாதையில் வைக்கிறது. ஈர்க்கும் மனநிலை உங்கள் படைப்பாற்றலை விடுவிக்கிறது, புதிய யோசனைகள் மற்றும் தீர்வுகளுக்கு வழிவகுக்கிறது.
  • 8. உங்கள் பயங்களை அடையாளம் கண்டு அவற்றை எதிர்கொள்ளுங்கள். பயம் பெரும்பாலும் நம்மைப் பின்னோக்கி இழுக்கும்.
  • 9. உங்கள் செயல்களில் முதலில் உங்களுக்கு நம்பிக்கை வர வேண்டும். அந்த நம்பிக்கை அப்படியே வந்துவிடாது. உண்மையாக ஒரு செயலை முழுக் கவனத்துடன் செய்தால் மட்டுமே கிட்டும்.
  • 10. வெற்றி ஒரு பயணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது ஓர் இலக்கு அல்ல. பொறுமையுடன் பயணத்தின் ஒவ்வொரு சிறிய வெற்றியையும் கொண்டாடுங்கள்.
  • துரத்துவதை நிறுத்தி, ஈர்ப்பதைத் தொடங்குவது என்பது ஒரு மனநிலை மாற்றம். இது நம்மை மன அழுத்தத்திலிருந்து விடுவித்து, நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவுகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (10 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்