TNPSC Thervupettagam

வெளிச்சம் தேடும் பட்டாசுத் தொழிலாளர்கள்

October 30 , 2024 25 days 47 0

வெளிச்சம் தேடும் பட்டாசுத் தொழிலாளர்கள்

  • வண்ணங்களும் ஆரவாரமுமாக தீபாவளியை நமக்குக் கொண்டு​வரும் பட்டாசுத் தொழிலா​ளர்​களின் வாழ்க்கை, அதேபோல் வண்ணங்​களும் ஆரவார​முமாக இல்லை என்பதுதான் யதார்த்த நிலை. தமிழ்நாடு முழுவதும் பட்டாசுத் தொழிலில் ஆண்டுக்கு 6,000 கோடி ரூபாய்க்கு வரவு - செலவு நடைபெறுகிறது. இந்நிலை​யில், பட்டாசுத் தொழிலா​ளர்கள் எதிர்​கொள்ளும் பிரச்​சினைகள் பேசப்பட வேண்டுமில்​லை​யா?
  • ​விருதுநகர் மாவட்​டத்தில் சிவகாசி, விருதுநகர், சாத்தூர், வெம்பக்​கோட்டை ஆகிய ஊர்களை மையமாகக் கொண்டு மொத்தம் 1,101 ஆலைகள் உரிமத்​துடன் இயங்கு​கின்றன. உரிமம் பெறாமல் தற்காலிகமாக இயங்கும் ஆலைகளும் உண்டு. ஏறக்குறைய 3 லட்சம் பேர் பணிபுரி​கின்​றனர். இதில் ஏறக்குறைய 65 சதவீதம் பேர் பெண்கள்.
  • தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளில் 2024 ஜனவரி முதல் அக்டோபர் வரை மட்டும் 17 விபத்துகள் ஏற்பட்​டுள்ளன; 52 பேர் உயிரிழந்​துள்ளனர்.

விபத்து​களின் பின்னணி:

  • விதிமுறைகளை மீறுவதுதான் வெடிவிபத்து​களுக்கு முதன்​மையான காரணம் எனத் தொழிலா​ளர்கள் கூறுகின்​றனர். உற்பத்தி என்பது பட்டாசுக்கான மருந்துக் கலவை சேர்ப்பது, அதற்கு மேல் வண்ணத்தாள் ஒட்டுவது உள்ளிட்ட வேலைகள் (பிராசஸ்) ஆகியவற்றை உள்ளடக்​கியது.
  • இந்த வேலைகளின்​போதுதான் பெரும்​பாலான விபத்துகள் நிகழ்​கின்றன. வேதிப்​பொருளைப் பட்டாசில் நிரப்புவது, வெடிமருந்தில் உருட்டுவது, திரியைப் பொருத்துவது போன்ற வேலைகளை ஒரே நாளில் செய்து முடிக்க வேண்டும். பாதியில் விட்டு​விட்டு அடுத்​தடுத்த நாள்களுக்குத் தொடரக் கூடாது.
  • பட்டாசு உற்பத்​தியும் மருந்துக் கலவை சேர்ப்​பதும் அறைக்​குள்தான் செய்யப்பட வேண்டும். ஆனால், சில ஆலைகளில் அவை அறைக்கு வெளியே மரத்தடி நிழலிலும் மண் தரையிலும் மேற்கொள்​ளப்​படு​கின்றன. பட்டாசுகளை உலர வைக்கத் தனிக் களம் இருக்க வேண்டும். அறைகளிலும் களத்திலும் ரப்பர் விரிப்பு விரிக்​கப்​பட்​டிருக்க வேண்டும்.
  • அறை 10:10 சதுர அடியில் 4 பேர் மட்டும் பணிபுரிவதாக இருக்க வேண்டும். மருந்​துக்கலவை தயார் செய்யும் அதே அளவு கொண்ட அறையில் 2 பேர்தான் இருக்க வேண்டும். விதிமுறைகள் மீறப்​பட்டால் விபத்து​களுக்கான சாத்தியம் அதிகம். தரைச்​சக்​கரம், புஸ்வாணம், பென்சில் தயாரிப்​பில், காகிதக் குழாய்​களிலும் காகிதத் குப்பிகளிலும் மருந்தை நிரப்புவது, திரி வைப்பது போன்ற வேலைகளின்​போதுகூட விபத்து ஏற்படலாம்.
  • அனுபவம் இல்லாத பணியாளர்கள் செய்யும் தவறுகளாலும் விபத்துகள் ஏற்படுவது உண்டு. சரியாக வழிநடத்து​வதற்குத் தீத்தொழில்​நுட்ப வல்லுநர்கள் அவசியம்.
  • தேசியப் பசுமைத் தீர்ப்​பா​யத்தால் நியமிக்​கப்பட்ட ஒரு குழு, சிவகாசிப் பகுதி பட்டாசு ஆலைகளை முன்பு பார்வை​யிட்டது. ஆலைகள் செயல்​படும் கட்டிடங்​களின் அமைப்பும், விபத்து​களின்போது சேதாரத்தை அதிகப்​படுத்தும் வகையில் உள்ளதாக அது குறிப்​பிட்டது.

பிரச்​சினைக்​குரிய வேலை முறை:

  • தொழிலா​ளர்கள் பணிபுரிகிற முறையும் தொடர்ச்​சியான விபத்து​களுக்கு ஒரு காரணியாக உள்ளது. வரையறுக்​கப்பட்ட கால அளவில் பணிபுரியும் வழக்கமான முறையைவிட, ‘10 வெடி அல்லது 10 சரத்துக்கு இவ்வளவு ஊதியம்’ என்கிற ‘பீஸ் ரேட்’ (piece-rate) அடிப்​படையில் பணிபுரியத் தொழிலா​ளர்கள் அதிகம் விரும்​புவ​தாகக் கூறப்​படு​கிறது. இதில் ஒரு நாளுக்கு ரூ.700 வரைக்கும் சம்பா​திக்க முடியும் என்பதே இதற்குக் காரணம். அதிகம் உழைத்தால் அதிக ஊதியம் என்கிற இலக்கு, தங்கள் திறன், பாதுகாப்பு போன்ற​வற்றைப் பற்றிக் கவலைப்​படாமல் வேலைசெய்ய அவர்களைத் தூண்டுகிறது.

நிவாரணத்​துக்குப் போராட்டம்:

  • விபத்து​களின்போது உயிரிழக்கும் தொழிலா​ளர்​களுக்கு நிவாரணம் பெறுவதே ஒரு காலத்தில் பெரும் போராட்டமாக இருந்தது. அவர்களது குடும்பத்​தினரும் சக தொழிலா​ளர்​களும் ஆலை நிர்வாகத்​துக்கு எதிராகச் சாலைமறியல் செய்துதான் நிவாரணம் பெற முடிந்தது. தொழிற்​சங்​கங்​களின் முயற்​சியால் இந்நிலை மாறியிருப்​பினும், விபத்து​களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பது அவசியம்.
  • உயிரிழந்​தவருக்கு ஆலை நிர்வாகம் சார்பில் ஏறக்குறைய 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்​கப்​படு​கிறது. காயமுற்​றோருக்கு ஆலை நிர்வாகம் மருத்​துவச் சிகிச்சை அளிப்​பதுடன் சரி. இழப்பீடு அளிப்​ப​தில்லை எனத் தொழிலா​ளர்கள் வேதனை தெரிவிக்​கின்​றனர். விபத்தில் இறந்தவருக்குத் தமிழக அரசு ரூ.3 லட்சம் வழங்கு​கிறது. இது கடந்த 4 ஆண்டு​களாகத்தான் வழக்கத்தில் உள்ளது. காயமுற்​றோருக்கு அரசு சார்பில் ரூ.1 லட்சம் அல்லது 50 ஆயிரம் ரூபாய் அளிக்​கப்​படு​கிறது.
  • “மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள்கள் பாதுகாப்புத் துறை (பெசோ) பட்டாசுத் தொழில் விதிமுறை​களைத் தீர்மானிக்கும் அமைப்பு. மாநில அரசின்கீழ் வரும் தொழிலகப் பாதுகாப்பு - சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை போன்ற​வையும் ஆலைகளைக் கட்டுப்​படுத்​தக்​கூடியவை” என்று குறிப்​பிடும் விருதுநகர் மாவட்டத் தீப்பெட்டி - பட்டாசுத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவரான பி.என்​.தேவா, “இவை முறையாக ஆய்வுசெய்து, தணிக்கைக்கு உட்படுத்​தினால் விதிமீறல்​களும் விபத்து​களும் குறையும். சம்பளத்தைக் குறைத்துக் கொடுக்கும் ஆலைகளின் நடவடிக்கைகளும் மாற வேண்டும்” என்று சுட்டிக்​காட்டு​கிறார்.

ஆலைகளின் நடவடிக்கைகள்:

  • அய்யன் ஃபயர் வொர்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அபிரூபன், “பெட்​ரோலியம் - வெடிபொருள்கள் பாதுகாப்பு நிறுவனச் சட்டம், தொழிலாளர் எண்ணிக்கை, வெடிமருந்தின் அளவு, பட்டாசு உற்பத்தி செய்யப்​படும் இடத்தின் உள்ளேயும் வெளியே​யுமான பரப்பளவு ஆகிய மூன்றுக்கும் குறிப்​பிட்ட வரம்பு நிர்ண​யித்​துள்ளது.
  • விதிமுறைகளை முழுமை​யாகப் பின்பற்றுகிறோம். தொழிலா​ளர்​களுக்குக் குறிப்​பிட்ட கால இடைவெளியில் பாதுகாப்​பாகப் பணிபுரிவது குறித்த பயிற்சி வகுப்பு​களும் நடத்து​கிறோம். தமிழக அரசின் தொழிலாளர் நலத் துறைச் சட்டத்​தின்​படியும் பயிற்சி அளிக்​கப்​படு​கிறது. தொழிலா​ளர்​களில் அனுபவமும் திறனும் மிகுந்தவர் முறையான தேர்வு எழுதி ‘ஃபோர்​மேன்’ ஆகிப் பிறரை வழிநடத்து​வதையும் உறுதிப்​படுத்து​கிறோம்” என்கிறார்.
  • விநாயகா சோனி ஃபயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்​களில் ஒருவரும் தமிழ்நாடு பட்டாசு - அமார்சஸ் உற்பத்​தி​யாளர் சங்கத்தின் (டான்ஃபாமா) தலைவருமான கணேசன் பஞ்சுராஜன், “விதி​முறைகள் அறிவுறுத்தும் வெடிமருந்தின் அளவைப் பின்பற்றுகை​யில், ஒருவேளை விபத்து ஏற்பட்​டால்கூட, அதன் வீரியம் குறைவாகவே இருக்​கும். தீ அடுத்த அறைக்குப் பரவாது. எங்கள் நிறுவனத்தில் பொட்டாசியம் நைட்ரேட், ஸ்ட்ரான்​சியம் நைட்ரேட், கால்சியம் கார்பனேட் போன்ற அனுமதிக்​கப்பட்ட வேதிப்​பொருள்களை மட்டுமே பயன்படுத்து​கிறோம்.
  • வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள பகுதி என்பதால், எல்லா ஆலைகளும் வளாகத்தில் வேப்ப மரங்களை வளர்ப்பது வழக்கம். மழைக் காலத்தில் மரங்கள் மின்னலை ஈர்க்கும் என்பதால், மழை வரும் முன்பே தொழிலா​ளர்களை அனுப்​பி​வைத்து​விடு​கிறோம். உடலில் உருவாகும் நிலை மின்சா​ரத்தைப் பருத்தி ஆடைகள் பூமிக்குக் கடத்தக்​கூடியவை என்பதால், தொழிலா​ளர்கள் அவற்றையே அணியும்படி பார்த்​துக்​கொள்​கிறோம்” என்கிறார். விதிமுறைகளை முறையாகப் பின்பற்றும் உரிமை​யாளர்கள் இருப்​பினும், அதிக உற்பத்தி, விரைவாக இலக்கை எட்டுவது எனச் சிலர் செயல்​படு​வதும் கவனிக்​கத்​தக்கது.
  • காவல் துறை, தொழில் துறை, தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் இணைந்து ஒரு குழுவாக ஆலைகளைக் கண்காணித்து வருகின்​றனர். இத்தகைய 40 குழுக்கள் ஏப்ரலில் இருந்தே சிவகாசி வட்டார ஆலைகளில் ஆய்வு செய்து​வரு​கின்றன. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவல​கத்தில் நான்கு மாதங்​களுக்கு ஒருமுறை ஆய்வுக்​கூட்டம் நடத்தப்​படு​கிறது. தமிழக அரசின் இந்நட​வடிக்கைகள் வரவேற்​கத்​தக்கவை எனினும், அரசின் பல்வேறு துறைகள், கெடுபிடிகளை மட்டும் காட்டித் தங்களிடம் பணம் மட்டும் வசூல் செய்வதாக வருந்தும் ஆலை உரிமை​யாளர்​களும் உள்ளனர்.

இனி வரும் காலம்:

  • ஏறக்குறைய நூறாண்​டுகளாக விருதுநகர் வட்டாரம் பட்டாசுத் தொழிலின் களமாக உள்ளது. தொழிலா​ளர்​களில் பாதிப் பேர் பட்டியல் சாதியினர். பிற சாதிகளைச் சேர்ந்த தொழிலா​ளர்கள் தங்களோடு இத்தொழிலை நிறுத்​தி​விட்டு, பிள்ளை​களைப் படிக்க வைத்து வேறு தொழிலுக்கு நகர்த்தி​விட்ட நிலையில், பட்டியல் சாதியினரின் நிலை மாறவில்லை. பட்டாசுத் தொழில் நடைபெறாத ஓரிரு மாதங்​களில் விவசாய வேலை பார்த்துவந்த தொழிலாளர் பலர், முன்பு துண்டு நிலத்​துக்​காவது உரிமை​யாளராக இருந்​தனர். பொருளா​தாரப் போராட்​டத்தில் நிலங்களை விற்று​விட்ட இவர்கள், தற்போது பட்டாசுத் தொழிலையே நம்பி உள்ளனர்.
  • பட்டாசுகளால் ஏற்படும் காற்று மாசுபாடு குறித்த முறையீடு​களை​யொட்டி, பட்டாசுகளில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்து​வதற்கு 2018இல் உச்ச நீதிமன்றம் தடைவி​தித்தது. இது அத்தொழிலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்​தியது. ஏற்கெனவே காற்று மாசுபாட்டில் அல்லாடும் டெல்லி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை​களின்போது பட்டாசு கொளுத்தும் கால அளவைக் குறைத்து உத்தர​விட்டது.
  • பஞ்சாப், ஹரியாணா, மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்​களும் கட்டுப்​பாட்டை அமல்படுத்து​கின்றன. தமிழ்​நாட்​டிலும் இந்தக் கட்டுப்பாடு கடந்த சில ஆண்டுகளாக அமலில் உள்ளது. இது தற்போது சம்பிர​தாயமாக இருப்​பினும், காலப்​போக்கில் கட்டுப்​பாடுகள் இறுகு​வதற்கான சாத்தி​யங்களே அதிகம்.
  • இந்நிலை​யில், தொழிலா​ளர்​களின் பாதுகாப்பை உறுதி​செய்​வதோடு, அவர்களுக்கான மாற்றுத்​தொழிலுக்கான ஆயத்த வேலைகளும் முன்னெடுக்​கப்பட வேண்டும். தீபாவளியின் தித்திப்பைப் பட்டாசுத் தொழிலாளர்​களும் சுவைக்க வேண்டும்​!

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்