TNPSC Thervupettagam

வேண்டாமே பழமைவாத வகுப்பறைகள்

March 12 , 2024 130 days 138 0
  • இந்தியக் கல்வி முறை குறித்த விவாதம் சுதந்திரத்துக்கு முன்பு தொடங்கி இப்போது வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கற்பிப்பதோ ஏராளம், கற்றுக் கொள்வதோ புரிந்து கொள்வதோ குறைவு என்று 1991இல் வெளியான யஷ்பால் குழு அறிக்கை சொன்னது. பாடப் புத்தகம், வகுப்பறை, கற்பிக்கும் முறை எல்லாமே மாணவர்களை நோக்கி நகர்வதுதான் வளர்ச்சி.
  • அதுதான்ஜனநாயகக் கல்விஎன்கிறார் பேராசிரியர் . மாடசாமி. குழந்தைகளின் கற்றல் அனுபவத் தில் பல்வேறு கட்டங்களில் பலவித மான மாற்றங்களைக் கொண்டு வரத் தொடர்ந்து பரிட்சார்த்த முறையில் முயற்சி செய்துகொண்டே இருந் தாலும், கல்வியில் இந்தியா இமாலயத் தோல்வி அடைந்துள்ளதாகக் கல்வியாளர்கள் பரவலாகக் கூறி வருகின்றனர்.
  • இப்படியாகக் கல்வியாளர்களின் பல்வேறுபட்ட கல்வி குறித்த புரிதலை ஏற்றுக் கொண்டு அரசு பல வகையான புதிய கல்வித் திட்டங்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது. இருந்தபோதிலும் அந்தத் திட்டங்கள் எல்லாம் முழுமையான வெற்றியைப் பெறவில்லை என்பதை மாணவர்களின் அடைவு குறித்த ஆய்வறிக்கையின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

செயல்வழிக் கற்றல் முறை

  • ஆந்திராவில் ரிஷி பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள கிராமப்புறப் பள்ளிகளில் நடக்கும் கற்பித்தல் முறையை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான்செயல்வழிக் கற்றல் திட்டம்’. 2007-08இல் தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளி களிலும் இத்திட்டம் செயல்படுத்தப் பட்டது.
  • ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டார்கள். இதில் பல்வேறு புதுமையான அம்சங்கள் இருந்தபோதும், கற்பித்தல் முழுமையடையச் செய்யவில்லை. எனவே, இத்திட்டம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தத் தவறியதாகக் கருதப்படுகிறது.

எண்ணும் எழுத்தும்

  • 2020இல் கரோனா பெருந்தொற்றி னால் 19 மாத காலக் கற்றல் இடை வெளி ஏற்பட்டது. இதைச் சரிசெய்யும் பொருட்டு 2022இல் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்புகளுக்குஎண்ணும் எழுத்தும்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது.
  • இந்த வகுப்புகளில் ஏற்பட்ட மாற்றத்தின் நீட்சியாக 2023-24 கல்வி ஆண்டில் இத்திட்டம் நான்கு, ஐந்து வகுப்புகளுக்கும் நீட்டிக்கப்பட்டது. இத்திட்டம் மாணவர்களின் பன்முகத்திறனை வளர்ப்பதற்கான களமாக வகுப்பறை அமைய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
  • கடந்த ஆறு மாத காலமாக மதுரை மேற்கு ஒன்றியத்தில் அமைந்துள்ள 80 ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளின் வாயிலாகஎண்ணும் எழுத்தும்திட்டம் வகுப்பறையில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தின் அளவினை அறிந்து கொள்ள முடிகிறது. இதுவரை நீடித்திருந்த கற்றுக்கொள்வதற்கும் புரிந்து கொள்வதற்குமான இடை வெளி குறைந்து குழந்தைகளிடம் பலவிதமான அறிவுத் திறன்கள் வளர்ந்துள்ளதைக் காண முடிகிறது.
  • குழந்தைகள் ஒன்றாக இணைந்து கற்கிறார்கள், குழுக்களாகப் பிரிந்து கலந்துரையாடுகின்றனர். குழந்தைகளுடன் ஆசிரியர் இணைந்து பாடி, ஆடி, கதை சொல்லி உரையாடல் நிகழ்த்திக் கற்பிக்கின்றார். இப்படி யானதொரு மாற்றத்தை வகுப்பறைச் சூழலில் தொடங்கியிருப்பது சிறப்பு.
  • இதுவரை அதிகாரத்தின் மையமாக இருந்த வகுப்பறை ஜனநாயகப்படுத்தப் பட்டுள்ளது. கற்றல் என்பது மனப் பாடம் செய்து ஒப்பித்தல் என்ற நிலையிலிருந்து மாறிப் புரிந்து கற்றல், பங்கேற்றுக் கற்றல் என்கிற நிலையை எட்டியுள்ளது.
  • மாணவர்கள் நாள் முழுவதும் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் நிலைமை மாறிச் சுதந்திரமாக வகுப்பறை முழு வதும் ஆடிப்பாடி விளையாடிக் கற்கிறார்கள். வகுப்பறை என்பது மாணவர்கள் மகிழ்ச்சியாக வந்து கூடும் இடமாக மாறியுள்ளது. இதன் காரணமாக இடைநிற்றல் குறைந்துள்ளது. மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது.
  • ஒவ்வொரு குழந்தையும் அதனதன் வேகத்தில் நிலைவாரியாகக் கற்று, கற்றல் நிலையை அடைய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் மாணவர்கள் தாங்கள் கற்றுக்கொண்டதை மதிப்பீடு செய்வதும் அடுத்த நிலைக்கு முன்னேறுவதும் வகுப்பறையில் இதுவரை காணாத மாற்றமாகும்.
  • மகாத்மா காந்தி சொன்னதுபோல இதுவரை வெறும் வார்த்தைகளால் மட்டும் பேசி, மாணவர்களின் மூளையைக் களைப்படையச் செய்த அந்தக் கால வகுப்பறைகள் இப்போது மறையத் தொடங்கியுள்ளன. இத் திட்டத்தின் மூலம் வகுப்பறையில் புது வெளிச்சம் பாய்ச்சப்பட்டுள்ளது.

குறைகளும் சரிசெய்யும் விதமும்

  • இதுவரை தமிழகக் கல்வி வரலாற்றில் எத்தனையோ கல்வித் திட்டங்கள் வந்துள்ளன. வெற்றியோ தோல்வியோ அதுவும் காலாவதியாகிச் சென்றிருக்கின்றன. இதுவரை நடைமுறைபடுத்தப்பட்டுள்ள எந்தத் திட்டத்திலும் செயல்படுத்தும் நபர்களின் ஆலோசனையின் அடிப் படையில் திட்டத்தில் திருத்தங்களும் மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளதாக வரலாறு இல்லை.
  • ஆகச்சிறந்த திட்டமாக இருந்தாலும்எண்ணும் எழுத்தும்திட்டத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் பல வகையில் வந்து கொண்டே இருக்கின்றன. ஆசிரியர் பற்றாக்குறை, பழமைவாதக் கற்பிக்கும் முறையில் இருந்து மாற மறுக்கும் ஆசிரிய மனோபாவம் போன்றவை சரி செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.
  • ஒவ்வொரு பாடத்திலும் பாடப்பொருள் சார்ந்த காணொளி மாதிரி கொடுக்கப்பட்டிருந்தாலும் அவற்றை மாணவர்களுக்குக் காண்பிப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகளின் போதாமை உள்ளது. அப்படிப்பட்ட சூழலில் திட்டத்தின் செயல்பாடு முழுமையாக மாணவர்களைச் சென்றடைவதில் சுணக்கம் ஏற்படுகிறது. ஆகவே, இத்திட்டத்துக்கான எதிர்ப்பு ஆசிரியர்கள் மத்தியிலும் அவர்கள் சார்ந்த சங்கங்களிலும் எழுந்து வலுப்பெற்று வருகிறது.
  • ஆசிரியர் சங்கங்கள் மேலோட்டமாக இந்தத் திட்டத்தை எதிர்க்காமல் திட்டத்தின் நோக்கம், தொலைநோக்குப் பார்வை குறித்து ஆக்கப்பூர்வமான கலந்துரை யாடல்களை நிகழ்த்த வேண்டும். தேவையான வழிகாட்டுதல்களை ஆசிரியர்கள் அரசுக்கு வழங்கினால், இத்திட்டம் சிறந்த வடிவமைப்பு கொண்ட திட்டமாக மாறி, தமிழகக் குழந்தைகளின் வாழ்வில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தும்.

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்