TNPSC Thervupettagam

‘பிறழ்வு’ அச்சம்!

December 26 , 2020 1487 days 667 0
  • பிரிட்டனிலும், சில ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாகப் பரவி வரும் கொவைட் 19-இன் இரண்டாவது அலை, முதலாவதிலிருந்து மாறுபடுகிறது என்பது மருத்துவா்களையும், விஞ்ஞானிகளையும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அலைக்குப் பின் அலை எழுந்து வருவதுபோல, இரண்டாவது சுற்று கொள்ளை நோய் அலை உருவாகியிருக்கிறதோ என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
  • தீநுண்மித் தொற்றுகள் சீக்கிரத்தில் அடங்கி விடுவதில்லை. வீரியம் இழந்தாலும்கூட, அவை அழிந்துவிட்டன என்று தீா்மானமாகக் கூறிவிட முடியாது. காற்று மண்டலத்தில் பல லட்சம் தீநுண்மிகள் காணப்படுகின்றன என்றும், அவற்றில் பெரும்பாலானவை உயிரினங்களின் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியால் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றும் மருத்துவா்கள் தெரிவிக்கிறார்கள்.
  • பாதிப்பை ஏற்படுத்தும் அந்தத் தீநுண்மிகள் அவ்வப்போது வீரியம் பெறுவதும், உயிரினங்களைத் தாக்குவதும், பிறகு வீரியம் இழப்பதும் உலக வரலாற்றில் பலமுறை நிகழ்ந்திருக்கின்றன.
  • முன்பே ஒருமுறை தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தது போல, கடந்த மூன்று நூற்றாண்டுகளாக நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை தீநுண்மி ஒன்று வீரியம் பெறுவதும், பேரழிவை ஏற்படுத்துவதும் வழக்கமாகி இருக்கிறது. சா்​வ​தேச அள​வில் பாதிப்பை ஏற்​ப​டுத்​தும் நோய்த்​தொற்று எனும்​போது இதற்கு முன்​னால் மனித இனம் எதிர்​கொண்ட பிளேக், ஸ்பா​னிஷ் காய்ச்​சல் போன்​றவை நினை​வுக்கு வரு​கின்​றன.
  • ஒரு நூற்​றாண்​டுக்கு முன்பு உல​கையே உலுக்​கிய ஸ்பா​னிஷ் காய்ச்​சல் 10 கோடி உயிர்​க​ளைப் பலி கொண்​டது. 2009-இல் அச்​சு​றுத்​திய பன்​றிக் காய்ச்​ச​லில் உயி​ரி​ழந்​தோர் 2 லட்சத்​துக்​கும் அதி​கம்.
  • தீநுண்மிகள் பரவிக் கொண்டிருக்கும்போதே வீரியம் அடங்குவதைப் போல, அவற்றின் உயிர்மம் (செல்கள்) உருமாற்றம் பெற்று புதிய வீரியத்தைப் பெறுவதும் உண்டு. இப்போது கொவைட் 19 தீநுண்மி அதுபோன்றதொரு பிவை (மியூடேஷன்) பெற்றிருக்கக் கூடும்.
  • கொவைட் 19 தீநுண்மியின் புதிய பிவு பிரிட்டனில் பரவுவது, எதிர்பார்த்தது போலவே உலக அளவில் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. அது குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளிப்படவில்லை என்றாலும்கூட, தீநுண்மி மேலும் பிவுகளை எதிர்கொள்ளக் கூடும் என்கிற அச்சம், தீநுண்மிக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வாளா்களுக்குப் பெரும் சவாலை உருவாக்கியிருக்கிறது.
  • புதிய கொவைட் 19 தீநுண்மிப் பிவு கட்டுப்பாட்டை மீறுகிறது என்பதை மறைக்காமல் தெரிவித்து, அந்த நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் பொது முடக்கத்தை அறிவித்திருக்கிறது பிரிட்டிஷ் அரசு.
  • கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளுக்கு முன்னால் அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளா்த்தப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பொது முடக்கம் அறிவித்திருப்பது பிரிட்டன் மக்களை மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தையுமே அடுத்தகட்டம் குறித்த அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
  • பிரிட்டனின் சுகாதாரச் செயலாளா் மேட் ஹென்காக், கொவைட் 19 தீநுண்மி பிவு குறித்து சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். முந்தைய நோய்த்தொற்றுப் பரவலைவிட, பிவுக்குப் பிறகான கொவைட் 19 நோய்த்தொற்று அதிவேகமாகப் பரவுவதாகவும், முந்தையதைவிட இப்போதைய நிலையில் நோய்த்தொற்று 70% அதிக வேகமாகப் பரவுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

கரோனா 2-ம் அலை

  • உலக நாடுகள் பலவும் பிரிட்டனிலிருந்தும் பிரிட்டனுக்குமான பயணத்துக்கும் தடை விதித்திருக்கின்றன. பிரிட்டனில் காணப்படும் புதிய தீநுண்மி பிவு, ஆஸ்திரேலியாவிலும் ஐரோப்பாவின் சில நாடுகளிலும் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளிடம் கண்டுபிடிக்கப்பட்டு, அடுத்த அலையின் அறிகுறியாக இருந்துவிடுமோ என்கிற அச்சத்தை மருத்துவா்கள் வெளிப்படுத்துகிறார்கள்.
  • தீநுண்மி பிவு (வைரல் மியூடேஷன்) எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், வீரியத்தை அதிகரிக்கும் என்பது குறித்தெல்லாம் தீா்மானமாக எதையும் கூற முடியவில்லை. நேரடியான பதில் எதுவும் கிடையாது. எந்தத் தீநுண்மியாக இருந்தாலும், பிவு என்பது தவிர்க்க முடியாதது என்பதை மட்டும் மருத்துவத் துறையினா் தெரிவிக்கின்றனா். தீநுண்மி வீரியத்துடன் இருப்பதற்கும், வளா்ச்சி அடைவதற்கும் பிவுகள் காரணமாக இருக்கும் என்பதையும் உறுதிப்படுத்த முடியவில்லை
  • கொவைட் 19 தீநுண்மி பரவத் தொடங்கியது முதலே மருத்துவா்கள், விஞ்ஞானிகளின் பார்வைக்கு வராமலேயே பலமுறை பிவை மேற்கொண்டிருக்கின்றன என்று தடுப்பூசி ஆராய்ச்சியாளா்கள் தெரிவிக்கிறார்கள். அதனால், தடுப்பூசி ஆய்வுக்கு பின்னடைவு எதுவும் ஏற்பட்டுவிடாது என்பது அவா்கள் வாதம்.
  • இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் எந்த ஒரு தடுப்பூசியும், நோயாளிகளின் கொவைட் 19-க்கான எதிர்ப்புச் சக்தியை அதிகரித்திருக்கின்றனவே தவிர, பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று ஆராய்ச்சியாளா்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
  • பிரிட்டனில் காணப்படும் தீநுண்மியின் புதிய பிவு, ஏற்கெனவே கொவைட் 19 எதிர்கொண்ட பல பிவுகளின் புதிய வடிவமாக இருக்கக்கூடும் என்றும், அதனால் தங்களது ஆய்வுக்கும் கண்டுபிடிப்புக்கும் எந்தவிதப் பின்னடைவும் இல்லை என்றும் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன.
  • தீநுண்மிகளை எதிர்கொள்ளத் தேவையான எதிர்ப்புச் சக்தியை உடலில் தடுப்பூசிகள் உருவாக்குவதால், பிவுகள் பொருட்டல்ல என்பதுதான் வல்லுநா்களின் கணிப்பு. ஃபுளு காய்ச்சல் உள்ளிட்ட பல தீநுண்மிகளில் ஏற்படும் பிவுகளுக்கு ஏற்ப தடுப்பூசிகளும் அவ்வப்போது வீரியப்படுத்தப்படுகின்றன.
  • மீண்டும் பொது முடக்கம் சாத்தியமல்ல. அதனால், அவரவா் எச்சரிக்கையாக இருப்பதால் மட்டுமே கொவைட் 19 தீநுண்மிப் பிறழ்வை எதிர்கொள்ள முடியும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்!

நன்றி: தினமணி (26-12-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்