புகழ்பெற்ற சட்ட நிபுணரும், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான ஃபாலி நரிமன் சமீபத்தில் புது தில்லியில் காலமானார்.
அவர் 1991 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் மற்றும் 2007 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருதுகளைப் பெற்றவர் ஆவார்.
அவர் 1972 ஆம் ஆண்டில் இந்தியாவின் துணைத் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப் பட்டார், ஆனால் அவர் 1975 ஆம் ஆண்டில் தனது பதவியினை இராஜினாமா செய்தார்.
அவர் 1991 முதல் 2010 ஆம் ஆண்டு வரை வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.
அவரது காலத்தில், அவர் மாபெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் மூலம் சட்டம் மற்றும் வழக்கறிஞர் தொழிலில் ஓர் அடையாளத்தினைப் பதித்தார்.
இரண்டாவது நீதிபதிகள் வழக்கு : உச்ச நீதிமன்றத்தின் பதிவுரு வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் மத்திய அரசு இடையிலான வழக்கு.
தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய வழக்கு
பாராளுமன்றத்தினால் அடிப்படை உரிமைகளை ரத்து செய்ய முடியாது: I.C. கோலக் நாத் மற்றும் பஞ்சாப் மாநில அரசு இடையிலான வழக்கு.
போபால் விஷவாயு கசிவு துயரச் சம்பவம்: யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் மத்திய அரசு இடையிலான வழக்கு (1989).
அமைச்சர்கள் சபை, முதலமைச்சர் ஆகியோரின் உதவி மற்றும் ஆலோசனையின் படி மட்டுமே ஆளுநர் செயல்பட வேண்டும்: நபம் ரெபியா & பாமாங் பெலிக்ஸ் மற்றும் துணை சபாநாயகர் இடையிலான வழக்கு.
காவிரி நதிநீர்ப் பிரச்சினை: கர்நாடகா மாநில அரசு மற்றும் தமிழ்நாடு மாநில அரசு இடையிலான வழக்கு.