TNPSC Thervupettagam

ஃபால்கன் கனரக ஏவுகலன்

November 10 , 2022 620 days 313 0
  • ஸ்பேஸ்எக்ஸ் விண்கல நிறுவனமானது புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கன் கனரக ஏவுகலத்தினை விண்ணில் ஏவியது.
  • ஃபால்கன் கனரக ஏவுகலம் என்பது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட பகுதியளவு மீண்டும் பயன்படுத்தக் கூடிய ஒரு கனரகச் செலுத்து வாகனமாகும்.
  • 2022 ஆம் ஆண்டில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செலுத்திய 50வது ஏவுதல் இதுவாகும்.
  • இது 2 முதல் நிலை உந்துவிசை வழங்கீட்டு மோட்டார்களை (ஸ்ட்ராப்-ஆன் பூஸ்டர்) கொண்ட ஒரு சக்தி வாய்ந்த ஏவுகலன் ஆகும்.
  • இரண்டு பக்கவாட்டு நிலை விசை வழங்கீட்டு மோட்டார்கள் மூலம் மீண்டும் பெறப் பட்ட நிகழ்வானது சுற்றுப்பாதையில் உள்ள ஏவுகலங்களின் 150வது மற்றும் 151வது மீள்வினைக் குறிக்கிறது.
  • தற்போது இயங்கி வரும் ஏவுகல வாகனங்களில் இது அதிகப் பொருட்களைத் தாங்கிச் செல்லும் திறன் கொண்டது.
  • இது ஏவப்படும் சமயத்தில் சுமார் 5 மில்லியன் பவுண்டுகளுக்கு மேலான உந்துதலை இதனால் உருவாக்க இயலும்.
  • இது சுமார் பதினெட்டு 747 ரக விமானங்களுக்குச் சமமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்