TNPSC Thervupettagam

ஃபால் ஆர்மி புழு (FAW)

August 22 , 2018 2288 days 817 0
  • சமீபத்தில் தெலுங்கானாவில் கரீம் நகர், காம ரெட்டி, சங்கா ரெட்டி, மேடக் மற்றும் கட்வால் மாவட்டங்களில் உள்ள சில இடங்களில் கொடிய விவசாய பூச்சியான ஃபால் ஆர்மி புழுக்களின் தாக்குதல் காணப்பட்டது.
  • இது பலவிதமான பயிர்களை தாக்கி அழிப்பவையாக இருந்தாலும் இவை இலைகளில் உள்ள இனிப்புத் தன்மை காரணமாக மக்காச்சோளம் வகைகளையே பெரிதும் விரும்புகின்றன.
  • இந்த ஃபால் ஆர்மி புழு (அல்லது ஸ்போடொப்டெரா ஃப்ருகீபெர்டா) ஆனது லீபிடோப்ட்டா வரிசையின் ஒரு இனமாகும் மற்றும் இது ஒரு லார்வா நிலையில் உள்ள அந்துப் பூச்சி ஆகும்.
  • பூச்சியின் ஆயுட்காலமானது 30 முதல் 60 நாட்கள் வரை இருக்கும். மேலும் ஒவ்வொரு தலைமுறையும் 400 கி.மீ. தூரம் இடம் பெயரும்.
  • ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகளில் இது பெரிய அளவில் விவசாய இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
  • இப்புழு நாட்டில் முதலில் கர்நாடகாவில் காணப்பட்டது பின்னர் தமிழ்நாட்டிற்கும் பரவியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்