TNPSC Thervupettagam

ஃபிட்ச் – இந்தியாவின் இறையாண்மை மதிப்பீடு

May 3 , 2018 2399 days 975 0
  • சர்வதேச மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் தரநிர்ணய நிறுவனம் இந்தியாவின் இறையாண்மை மதிப்பீட்டை மேம்படுத்தாததோடு, நிலையான நோக்கோடு BBB– என்றளவில் இந்தியாவின் மிகக்குறைந்த அளவிலான முதலீட்டுத் தரத்தை மறு உறுதி செய்துள்ளது.
  • இம்மதிப்பீட்டு மேம்பாடு, நாட்டின் விவரத்தை (Profile) மாற்றியமைப்பதோடு, முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான ஒரு கருவியாகவும் உள்ளது.
  • கடந்த ஆண்டு6% ஆக குறைந்த பொருளாதாரத்தை 2018-2019-ல் 7.3% ஆகவும் 2019-2020-ல் 7.5% ஆகவும் வளர்ச்சியடைவதற்கு புத்தாக்கம் பெற வேண்டிய அவசியத்தை எடுத்துக் காட்டியுள்ளது.
  • ஆளுகைகள் மற்றும் தரநிலைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பலவீனமான நிதியளிப்பு மற்றும் சில பின்தங்கிய அமைப்பு ரீதியிலான காரணிகள், தற்போது வரையில் கடினமான ஆனால் மேம்பாடடையும் பொருளாதார சூழல் ஆகியவை இந்த மதீப்பீடு செயல்பாட்டுக்கான காரணிகளாகும்.
  • பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2017 – ல் மூடி நிறுவனம் இந்தியாவின் மதிப்பீட்டை Baa3 லிருந்து Baa 2 நிலைக்கு உயர்த்திய போதும், ஸ்டேன்டர்ட்ஸ் மற்றும் பூவர்ஸ் (S&P) நிறுவனம், நிலையான நோக்கோடு (Stable outlook) இந்தியாவின் மதிப்பை BBB – என்ற அளவிலேயே நிர்ணயித்துள்ளது.

இறையாண்மை நன்மதிப்பு மதிப்பீடு

  • இறையாண்மை நன்மதிப்பு மதிப்பீடு, குறிப்பிட்ட நாட்டில் முதலீடு செய்யும் போது அங்கு நிலவி வரும் அரசியல் இடர்பாடுகள் மற்றும் முதலீட்டில் உள்ள இடர்பாடுகள் ஆகியவை தொடர்பான நுண்ணறிவை முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது.
  • ஃபிட்ச் மதிப்பீடு, மூடியின் முதலீட்டு சேவை மற்றும் ஸ்டாண்டர்ட்ஸ் மற்றும் பூவர்ஸ் ஆகியவை ஏறக்குறைய 95% அளவிலான உலகளாவிய வணிக மதிப்பீடுகளை கட்டுப்படுத்தும் மூன்று பெரிய சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்