இந்தியத் தபால் பணவழங்கீட்டு வங்கியானது (IPPB - India Post Payments Bank) ஃபின்க்ளூவேஷன் (Fincluvation) என்ற ஒரு முன்னெடுப்பினைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது
ஃபின்க்ளூவேஷன் என்பது, நிதி உள்ளடக்கத்திற்கான சில தீர்வுகளை இணைந்து உருவாக்கவும், புதுமையான தீர்வுகளை உருவாக்கவும் வேண்டி நிதித் தொழில்நுட்பப் புத்தாக்க நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் ஒரு கூட்டு முயற்சி ஆகும்.
ஃபின்க்ளூவேஷன் என்பது, நிதி உள்ளடக்கத்தை இலக்காகக் கொண்ட மதிப்புமிக்க நிதித் தயாரிப்புகளை உருவாக்குவதற்காக தொடக்க நிறுவனச் சமூகங்களை ஒன்று திரட்டுவதற்கான ஒரு சக்தி வாய்ந்த தளத்தை உருவாக்குவதற்காக வேண்டி இந்தத் தொழில்துறை மேற்கொள்ளும் முதல் முயற்சியாகும்.
ஃபின்க்ளூவேஷன் என்பது இதில் பங்கு பெறும் சிலப் புத்தாக்க நிறுவனங்களுடன் இணைந்து நிதித் தீர்வுகளை உருவாக்குவதற்கான இந்தியத் தபால் பணவழங்கீட்டு வங்கியின் ஒரு நிரந்தரத் தளமாக இருக்கும்.