July 11 , 2022
743 days
362
- நான்கு கணிதவியலாளர்களுக்கு மதிப்புமிக்க ஃபீல்ட்ஸ் விருதுகள் வழங்கப் பட்டு உள்ளன.
- இது கணிதத்திற்கான நோபல் பரிசு என அழைக்கப்படுகிறது.
- இது சர்வதேச கணிதச் சங்கத்தினால் வழங்கப் படுகின்றது.
- அது ஒரு சர்வதேச அரசு சாரா அமைப்பு மற்றும் லாப நோக்கம் சாரா அறிவியல் அமைப்பு ஆகும்.
- இது 40 வயதிற்குட்பட்ட கணிதவியல் அறிஞர்களுக்கு வழங்கப் படுகின்றது.
- இதில் பரிசு பெற்ற நான்கு பேர்களின் பட்டியல்
- பிரான்சின் ஹ்யூகோ டுமினில்-கோபின் - இன்ஸ்டிட்யூட் டெஸ் ஹாட்ஸ் எடுட்ஸ் சயின்டிஃபிக்ஸ்
- அமெரிக்காவைச் சேர்ந்த ஜூன் ஹூ - பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
- பிரிட்டனின் ஜேம்ஸ் மேனார்ட் - ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
- உக்ரைனின் மரினா வியாசோவ்ஸ்கா - சுவிஸ் ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
- உக்ரைன் நாட்டின் மரியானா இந்த விருதினைப் பெற்ற இரண்டாவது பெண் ஆவார்.
- இந்த விருதினைப் பெற்ற மற்றுமொரு பெண் 2014 ஆம் ஆண்டில் ஈரான் நாட்டின் மர்யம் மிர்சாகாணி ஆவார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/11-917.jpg)
Post Views:
362