TNPSC Thervupettagam

ஃபுகுஷிமா அணு உலை விபத்து

April 21 , 2021 1189 days 600 0
  • ஃபுகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து 1 மில்லியன் டன்களுக்கும் அதிகமான அளவில் சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை வெளியேற்றும் திட்டத்திற்கு ஜப்பானிய அரசானது சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
  • சர்வதேச அணுசக்தி அமைப்பின் கூற்றுப்படி, ஃபுகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து அந்த நீரை வெளியேற்றுவது என்பது உலகின் பிற இடங்களில் அணுசக்தி ஆலைகளில் இருந்து கழிவுநீரை வெளியேற்றுவதைப் போன்றதே ஆகும்.
  • ட்ரிட்டியத்தை மட்டும் விட்டு விட்டு அசுத்தமான தண்ணீரை வெளியிட ஜப்பான் திட்டம் தீட்டிள்ளது.
  • மற்ற கதிரியக்கக் கழிவுகளுடன் ஒப்பிடும்போது ட்ரிட்டியமானது குறைவான தீங்கை மட்டுமே விளைவிக்கும்.
  • இது மனித சருமத்தில் ஊடுருவ போதுமான சக்தியை வெளியிடுவதில்லை.
  • 2011 ஆம் ஆண்டில், ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக அந்த அணுசக்தி ஆலையில் அணுசக்தி பேரிடர் ஏற்பட்டது.
  • சர்வதேச அணுசக்தி நிகழ்வு அளவில் நிலை 7 என வகைப்படுத்தப்பட்ட இது மிகவும் கடுமையான ஒரு அணு விபத்து ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்