இந்திய உள்துறை அமைச்சகம் ஆனது, ஃபெங்கல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக என்று மாநிலப் பேரிடர் நிவாரண நிதியில் (SDRF) இருந்து தமிழகத்திற்கு 944.80 கோடி ரூபாயை வழங்குவதற்காக ஒப்புதல் அளித்துள்ளது.
SDRF என்பது மாநில அரசுகள் ஆனது, அறிவிக்கப்பட்டப் பேரிடர்களுக்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வழங்கப்படும் ஒரு முக்கிய நிதியாகும்.
பொதுப் பிரிவு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கான SDRF ஒதுக்கீட்டில் 75% பங்கினை மத்திய அரசு வழங்குகிறது.
ஆனால் சிறப்புப் பிரிவு மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசங்களுக்கான (வடகிழக்கு மாநிலங்கள், சிக்கிம், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர்) SDRF ஒதுக்கீட்டில் மத்திய அரசின் பங்களிப்பு 90% ஆகும்.
2005 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் 46வது பிரிவின் படி, "கடுமையான இயற்கைப் பேரழிவு ஏற்படும் சூழலில், SDRF நிதியில் போதுமான நிதி இல்லை எனில், மாநிலப் பேரிடர் மீட்பு நிதிக்கு NDRF கூடுதல் நிதியினை வழங்குகிறது".