TNPSC Thervupettagam

ஃபென்டேல் எரிமலை வெடிப்பு

March 2 , 2025 2 days 49 0
  • எத்தியோப்பியாவில் உள்ள ஃபென்டேல் எரிமலை வளிமண்டலத்தில் மிக அதிக அளவு மீத்தேன் வாயுவினை வெளியேற்றியுள்ளது.
  • இந்த எரிமலையானது ஆற்றல் வாய்ந்த பசுமை இல்ல வாயுவின் பெரிய பிழம்புகளை வெளியேற்றியதால், ஆராய்ச்சியாளர்கள் இந்த நிகழ்வை "பர்ப்" என்று விவரித்து உள்ளனர்.
  • இந்த எரிமலை ஆனது ஒரு மணி நேரத்திற்கு 58 மெட்ரிக் டன் மீத்தேன் வாயுவினை வெளியேற்றியுள்ளது.
  • மீத்தேன் ஆனது, 100 ஆண்டு காலத்தில் கார்பன் டை ஆக்சைடு வாயு உட்கிரகிக்கும் வெப்பத்தினை விட 28 மடங்கு அதிக வெப்பத்தைத் தேக்கி வைக்கிறது.
  • இது உலக வெப்பமயமாதலுக்கு மிக அதிகளவுப் பங்கினை அளிக்கும் இரண்டாவது வாயுவாக உள்ளது.
  • இது உலகின் மொத்தப் பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வில் சுமார் 11% உமிழ்விற்கு காரணமாகும்.
  • ஃபென்டேல் எரிமாலையானது அடிக்கடி வெடிக்காத எரிமலையாகும்.
  • கடைசியாக 1820 ஆம் ஆண்டில் தான் இது வெடித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்