TNPSC Thervupettagam
May 16 , 2023 432 days 212 0
  • 25 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஃபோமல்ஹாட் ஆனது இரவு வானில் உள்ள 20 பிரகாசமான நட்சத்திரங்களில் ஒன்றாகும்.
  • நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியானது, அதன் அருகில் உள்ள நட்சத்திரத்தினைச் சுற்றியுள்ள சூடான தூசிப் படலத்தினைப் படம் பிடித்துள்ளது.
  • நமது சூரியக் குடும்பத்தின் குறுங்கோள் மற்றும் குய்பர் தூசிப் பட்டைகளை விட இந்த தூசி நிறைந்த அமைப்புகள் மிகவும் சிக்கலானவையாக உள்ளன.
  • ஒட்டு மொத்தமாக, இந்த நட்சத்திரத்திலிருந்து 14 பில்லியன் மைல்கள் (23 பில்லியன் கிலோ மீட்டர்) வரை மூன்று மூன்று உள்ளமைவு பட்டைகள் உள்ளன.
  • இது சூரியனிலிருந்து பூமி அமைந்துள்ள தொலைவின் 150 மடங்கிற்குச் சமமாகும்.
  • ஃபோமல்ஹாட் என்ற நட்சத்திரத்தின் தூசி வளையம் ஆனது 1983 ஆம் ஆண்டில் நாசாவின் அகச்சிவப்பு வானியல் செயற்கைக் கோள் (IRAS) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கண்டுபிடிக்கப் பட்டது.
  • இரவு வானில் உள்ள 18வது பிரகாசமான நட்சத்திரமான ஃபோமல்ஹாட், சூரியனின் நிறையில் 1.9 மடங்கினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்