ஃபோர்ப்ஸ் இதழின் உலகின் 2000 முன்னணி நிறுவனங்களின் பட்டியல்
June 20 , 2023 524 days 283 0
2023 ஆம் ஆண்டு உலகின் 2,000 முன்னணி நிறுவனங்களின் ஒரு தரவரிசையினைப் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனமானது எட்டு இடங்கள் முன்னேறி இதில் 45வது இடத்தைப் பெற்றுள்ளது.
ஃபோர்ப்ஸ் இதழினால் சமீபத்தில் வெளியிடப்பட்ட உலகின் 2000 முன்னணிப் பொது நிறுவனங்களின் பட்டியலில் முதல் இடம் பெற்ற இந்திய நிறுவனம் இதுவாகும்.
2022 ஆம் ஆண்டு தரவரிசையில் 105வது இடத்தில் இருந்த ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 77வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
HDFC வங்கி 128வது இடத்திலும் (2022 ஆம் ஆண்டில் 153வது இடம்) ICICI வங்கி 163 வது (2022 ஆம் ஆண்டில் 204 வது இடம்) இடத்திலும் உள்ளன.
NTPC லிமிடெட் நிறுவனமானது இப்பட்டியலில் 433வது இடத்தைப் பெற்றுள்ளது.
இப்பட்டியலில் இடம் பெற்ற மற்ற இந்திய நிறுவனங்கள்: ONGC 226, HDFC 232, LIC 363, ஆக்சிஸ் வங்கி (423) மற்றும் NTPC (433) ஆகியவையாகும்.
3.7 டிரில்லியன் டாலர் அளவிலான சொத்துக்களுடன் அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியான ஜேபி மோர்கன் வங்கி 2011 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக இந்த பட்டியலில் முதல் இடத்தில் இடம் பெற்றுள்ளது.
இதில் அதானி எண்டர்பிரைசஸ் 1062வது இடத்திலும், அதானி பவர் 1488வது இடத்திலும், அதானி போர்ட்ஸ் & சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் 1598வது இடத்திலும் உள்ளன.