ஃபோர்ப்ஸ் இதழானது, தனது 21வது வருடாந்திர உலகின் 100 மிக அதிகாரம் வாய்ந்த பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த உலகளாவிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் பெண்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள மூன்று இந்தியப் பெண்கள் அந்தந்தத் துறைகளில் மிக குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்துள்ளனர்.
நிதி மற்றும் பெரு நிறுவன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தப் பட்டியலில் 28வது இடத்தினைப் பெற்றுள்ளார்.
HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவரான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா இந்தப் பட்டியலில் 81வது இடத்தைப் பிடித்துள்ளார்.
உயிரித் தொழில்நுட்பத் துறையில் உள்ள கிரண் மஜும்தார்-ஷா 82வது இடத்தைப் பிடித்துள்ளார்.