TNPSC Thervupettagam

ஃப்ரேசர் தீவின் பெயர் மாற்றம்

June 15 , 2023 402 days 234 0
  • ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள சிறப்புமிக்க ஃப்ரேசர் தீவு அதிகாரப்பூர்வமாக ககாரி என மறுபெயரிடப்பட்டுள்ளது.
  • இதுவரை ஃப்ரேசர் தீவு என்று அழைக்கப்பட்ட இத்தீவிற்கு இப்பகுதியின் பாரம்பரிய உரிமையாளர்களான புட்சுல்லா மக்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ககாரி என மறுபெயரிட முடிவு செய்யப்பட்டது.
  • ககாரி பகுதியானது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தப் பகுதியில் வசிக்கும் புட்சுல்லா மக்கள் மத்தியில் மகத்தான கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
  • புட்சுல்லா மொழியில் "ககாரி" என்றப் பெயருக்கு "சொர்க்கம்" என்று பொருள் கூறப் படுகிறது.
  • பூர்வீக மொழிகள், வரலாறுகள் மற்றும் மரபுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்த மறுபெயரிடுதல் நடவடிக்கையானது நல்லிணக்கத்தின் ஒரு அடையாளமாக கருதப் படுகிறது.
  • இது உலகின் மிகப்பெரிய மணல் தீவு மற்றும் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்