உலக சுகாதார அமைப்பானது ‘அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் மனநலம்: ஆபத்து மற்றும் பாதுகாப்பு காரணிகள் மற்றும் நல சேவைகளுக்கான அணுகல்’ என்ற தலைப்பிலான அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் 258 மில்லியன் அளவிற்கு சர்வதேசப் புலம்பெயர்ந்தோர் பதிவாகி உள்ளனர்.
2021 ஆம் ஆண்டின் இறுதியில், வலுக்கட்டாயமாக புலம்பெயர்ந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 89.3 மில்லியனாக இருந்த நிலையில் அவர்களில் 53.2 மில்லியன் பேர் உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள், 27.1 மில்லியன் பேர் அகதிகள் மற்றும் 4.6 மில்லியன் நபர்கள் புகலிடம் கோருபவர்கள் ஆவர்.
மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஐந்தில் ஒருவர் (22.1 சதவீதம்) மனச் சோர்வு, பதட்டம், பேரதிர்ச்சிக்குப் பிறகான மன உளைச்சல் (PTSD), இரு முனையக் கோளாறு அல்லது மனச்சிதைவு போன்ற பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.
வளர் இளம் (15-17 வயது) வயதுக் குழுவினருடன் ஒப்பிடும்போது, இளம் வயது (6-14 வயது) அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்த குழந்தைகளிடையே நடத்தை சார்ந்த கோளாறுகள் மிகவும் பொதுவான ஒரு பாதிப்பாக உள்ளது.