TNPSC Thervupettagam

அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் மனநலம்

October 30 , 2023 263 days 276 0
  • உலக சுகாதார அமைப்பானது ‘அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் மனநலம்: ஆபத்து மற்றும் பாதுகாப்பு காரணிகள் மற்றும் நல சேவைகளுக்கான அணுகல்’ என்ற தலைப்பிலான அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் 258 மில்லியன் அளவிற்கு சர்வதேசப் புலம்பெயர்ந்தோர் பதிவாகி உள்ளனர்.
  • 2021 ஆம் ஆண்டின் இறுதியில், வலுக்கட்டாயமாக புலம்பெயர்ந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 89.3 மில்லியனாக இருந்த நிலையில் அவர்களில் 53.2 மில்லியன் பேர் உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள், 27.1 மில்லியன் பேர் அகதிகள் மற்றும் 4.6 மில்லியன் நபர்கள் புகலிடம் கோருபவர்கள் ஆவர்.
  • மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஐந்தில் ஒருவர் (22.1 சதவீதம்) மனச் சோர்வு, பதட்டம், பேரதிர்ச்சிக்குப் பிறகான மன உளைச்சல் (PTSD), இரு முனையக் கோளாறு அல்லது மனச்சிதைவு போன்ற பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.
  • வளர் இளம் (15-17 வயது) வயதுக் குழுவினருடன் ஒப்பிடும்போது, இளம் வயது (6-14 வயது) அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்த குழந்தைகளிடையே நடத்தை சார்ந்த கோளாறுகள் மிகவும் பொதுவான ஒரு பாதிப்பாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்