இந்திய அரசானது, அருகி வரும் உயிரினங்கள் மற்றும் வனவிலங்குகளின் (CITES) வர்த்தகம் தொடர்பான ஒரு சர்வதேச உடன்படிக்கையின் மூலம் சமீபத்தில் ஏற்றுமதி மேற்கொள்வதற்கான ஒதுக்கீட்டினை அதிகரித்துள்ளது.
அகரு மரம் ஆனது, அதன் நறுமண மற்றும் மருத்துவம் சார் மதிப்புக்காக என்று அதிக மதிப்பிடப் படுகிறது.
இது ஊதுபத்திகள், நறுமண எண்ணெய்கள் மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.
இது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலின் கீழ் அச்சுறுத்தல் நிலையில் உள்ள இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த மரம் ஆனது, 1995 ஆம் ஆண்டு முதல் CITES உடன்படிக்கையின் IIவது பட்டியலில் வைக்கப் பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து இந்த மரத்தினை ஏற்றுமதி செய்வது 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை தடை செய்யப்பட்டது, ஆனால் அதன் மறு ஏற்றுமதி அனுமதிக்கப்பட்டது.
குறைந்தபட்சம் 139.89 மில்லியன் (13.989 கோடி) அகரு மரச் செடிகள் வனம் அல்லாத பகுதிகளில் சாகுபடி/தோட்டத்தில் உள்ளன.
CITES ஆவணத்தின்படி, இந்திய நாடானது 2023 ஆம் ஆண்டில் அகரு மரம் உற்பத்தி செய்யும் மற்ற நான்கு நாடுகளுடன் சேர்த்து முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தகத்தின் (RST) மதிப்பாய்வின் கீழ் கொண்டு வரப்பட்டது.
2024 ஆம் ஆண்டில் RST மதிப்பாய்வில் இருந்து இந்தியா நீக்கப்படுவதால், அகரு மரம் தொழிலில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ள மக்கள் பயன் அடைவார்கள்.