இந்திய ரிசர்வ் வங்கியானது, எண்ணிம முறையில் மேற்கொள்ளப்படும் சிறு மதிப்பிலான அகல்நிலைப் பரிவர்த்தனைகளுக்கான ஒரு கட்டமைப்பினை அறிமுகம் செய்துள்ளது.
அகல்நிலைப் பண வழங்கீடுகளை அட்டைகள், வாலட்ஸ் (பணவைப்புக் கணக்குகள்) அல்லது கைபேசி (சிறு) சாதனங்கள் போன்ற எந்தவொரு வழியாகவும் மேற்கொள்ளலாம்.
ஆனால் அவற்றை அருகாமையில் (அ) நேருக்கு நேரான ஒரு பரிவர்த்தனை போன்ற முறைகளில் மட்டுமே மேற்கொள்ளலாம்.
அந்த அகல்நிலைப் பரிவர்த்தனையானது மோசமான அல்லது தரம் குறைந்த இணைய வசதி அல்லது தொலைதொடர்பு இணைப்பு உள்ள பகுதிகளில், குறிப்பாக புறநகர் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் டிஜிட்டல் (எண்ணிம) பரிவர்த்தனைகளை அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது.