அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிபர் கூப்ச்சோ என்பவர் மெக்சிகோவைச் சேர்ந்த மரியா பாசி என்பவரை வீழ்த்தி அகஸ்டா மாஸ்டர்ஸ் குழிப் பந்தாட்டத் தொடரை வென்ற முதலாவது பெண்மணியாக உருவெடுத்துள்ளார்.
தொழில்சார் குழிப் பந்தாட்டத்தின் நான்கு முக்கிய சாம்பியன்ஷிப்களில் அகஸ்டா மாஸ்டர்சும் ஒன்றாகும்.
இது போபி ஜோன்ஸ் என்பவரால் 1934 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது எப்பொழுதும் அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள அகஸ்டா தேசிய குழிப் பந்தாட்டக் கழகத்தில் மட்டுமே நடைபெறும்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆண்கள் மட்டுமே பங்கு கொள்ளக் கூடிய குழிப் பந்தாட்டத் தொடரில் முதன் முறையாக 2019 ஆம் ஆண்டில் பெண்கள் குழிப் பந்தாட்ட வீராங்கனைகளும் பங்கு கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.