மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் மற்றும் சயின்சஸ் அகாடமியால் (Academy of Motion Picture Arts and Sciences - AMPAS) வழங்கப்பட்டு ஆஸ்கார்ஸ் என்று பொதுவாக அறியப்படும் 91-வது அகாடமி விருதுகள் 2018 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களைக் கௌரவித்தது.
இந்த விழா கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஹாலிவுட்டில் இருக்கும் டால்பி திரையரங்கத்தில் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதியன்று நடத்தப்பட்டது.
24 பிரிவுகளில் அகாடமி விருதுகளை அந்நிறுவனம் (AMPAS) வழங்கியது.
2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆவணப்படம் (குறுகிய பொருள்) என்ற பிரிவில், தமிழ்நாட்டின் அருணாச்சலம் முருகானந்தம் நடித்த உத்திரப் பிரதேசத்தை மையமாகக் கொண்ட திரைப்படமான “Period. End of Sentence” எனும் இந்திய ஆவணப்படம் அகாடமி விருதை வென்றிருக்கின்றது.