TNPSC Thervupettagam

அகில இந்தியப் பணிகள் (இறப்பு மற்றும் ஓய்வூதியப் பலன்கள்) திருத்த விதிகள், 2023

July 24 , 2023 364 days 205 0
  • இந்தியக் குடிமைப் பணி, இந்தியக் காவல் பணி மற்றும் இந்திய வனப் பணி (IFoS) ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதியப் பலன்கள் தொடர்பான விதிகளில் மத்திய அரசு சில திருத்தங்களைச் செய்துள்ளது.
  • தற்போது, குற்றம் செய்த ஓய்வூதியம் பெறுவோர் மீது நடவடிக்கை ஒன்றை எடுக்கவும், அவர்களின் ஓய்வூதியத்தை நிறுத்தவும் அல்லது ஓய்வூதியப் பயனைத் திரும்பப் பெறவும் அரசுக்கு அதிகாரம் உள்ளது.
  • ஓய்வூதியம் பெறுவோர் மிகவும் தவறான நடத்தையில் ஈடுபட்டதாகக் கண்டறியப் பட்டாலோ அல்லது கடுமையான ஒரு குற்றத்திற்காகத் தண்டிக்கப் பட்டாலோ இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • ஓய்வூதியம் பெறுபவர் மிகவும் தவறான ஒரு நடத்தையில் ஈடுபட்டதாகக் கண்டறியப் பட்டாலோ அல்லது கடுமையான ஒரு குற்றத்திற்காக நீதிமன்றத்தினால் தண்டிக்கப் பட்டாலோ, மத்திய அரசே தன்னிச்சையாகச் செயல்பட்டு அதற்கான நடவடிக்கையை எடுக்க முடியும்.
  • இந்த விதிகள் அலுவல் முறை இரகசியச் சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ள ஏதேனும் ஓர் ஆவணம் அல்லது ஒரு தகவலைப் பரிமாறிக் கொள்வது அல்லது வெளிப்படுத்துவது என்பதை ‘மிகவும் தவறான நடத்தை’ என வரையறுக்கிறது.
  • மேலும், ‘கடுமையான ஒரு குற்றம்’ என்பது அலுவல்முறை இரகசியச் சட்டத்தின் கீழ் குறிப்பிடப் பட்ட எந்தவொரு குற்றத்தையும் குறிக்கிறது.
  • ஓய்வூதியத்தை நிறுத்துவது அல்லது திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசின் முடிவே இறுதியானது என இந்தத் திருத்தப்பட்ட விதிகள் வலியுறுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்