TNPSC Thervupettagam

அகில இந்தியப் பணிகள் (நடத்தை) விதிகள், 1968

July 20 , 2024 10 hrs 0 min 69 0
  • மத்திய அரசானது பயிற்சி இந்திய ஆட்சிப் பணி அதிகாரி (பூஜா கேட்கர்) சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களையும் பகுப்பாய்வு செய்வதற்குப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் (DoPT) கீழ் ஒற்றை உறுப்பினர் கொண்ட ஒரு குழுவினை அமைத்துள்ளது.
  • இந்த அதிகாரியின் நியமனம் குறித்து சமீபத்தில் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
  • அரசு ஊழியர்கள் முதன்மையாக இரண்டு நிர்வாக விதிகளின் மூலம் நிர்வகிக்கப் படுகின்றனர்:
    • அகில இந்தியப் பணிகள் (நடத்தை) விதிகள், 1968, மற்றும்
    • இந்திய ஆட்சிப் பணி (தகுதிகாண்) விதிகள், 1954.
  • அதிகாரிகளின் தகுதிகாண் காலத்தின் போது அவர்களின் நடத்தையை நிர்வகிக்கும் கூடுதல் விதிகள் உள்ளன என்பதோடு இது அரசுப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட பிறகு குறைந்தது இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும்.
  • விதி 12 ஆனது, தகுதிகாண் அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்வதற்கான பல்வேறு சூழ்நிலைகளை வழங்குகிறது.
  • மாற்றுத் திறனாளிகளுக்கான (PH) இட ஒதுக்கீடு ஆனது 2006 ஆம் ஆண்டு பணி நியமனத்தின் போது அறிமுகப்படுத்தப் பட்டது என்பதோடு ஒவ்வொரு பிரிவிலும் (பொது, இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலிடப்பட்ட சாதியினர், மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) 3 சதவிகித இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கென ஒதுக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்