TNPSC Thervupettagam

அகில இந்தியப் பணிகள் (நடத்தை) விதிகள், 1968

November 22 , 2024 16 hrs 0 min 41 0
  • அரசு பணி விதிகளை மீறியதாகக் கூறி இரண்டு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை கேரள அரசு பணி இடைநீக்கம் செய்துள்ளது.
  • அகில இந்தியப் பணிகள் (நடத்தை) விதிகள், 1968 (AIS விதிகள்) இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி மற்றும் இந்திய வனப் பணி அதிகாரிகளின் நடத்தையை நிர்வகிக்கிறது.
  • AIS விதிகள் ஆனது குடிமைப்பணி அதிகாரிகளுக்கான நடத்தை விதிகளை வழங்கச் செய்கின்றன.
  • AIS விதிகளின் படி, அவர்கள் அரசியலமைப்பு விழுமியங்களின் மேலாதிக்கத்தை கட்டி காக்க (நிலை நிறுத்த) வேண்டும்.
  • அவர்கள் தங்கள் கடமைகளை நேர்மையாக நிறைவேற்றுவதில் பொது ஊடகங்களில் பங்கேற்கலாம் அல்லது பங்களிக்கலாம்.
  • அவர்கள் எந்தவொருப் பொதுத் தள ஊடகத்திலும் அரசாங்கத்தின் கொள்கைகளை மோசமாக விமர்சிக்கக் கூடாது.
  • அரசாங்கத்தின் முன் அனுமதியின்றி, விமர்சனத்திற்கு உட்பட்ட அதிகாரப்பூர்வச் செயலை நிரூபிப்பதற்காக அவர்கள் எந்த ஒரு நீதிமன்றத்தையும் அல்லது எந்தவொரு பத்திரிகையையும் நாடக்கூடாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்