அகில இந்தியப் புலிகள் கணக்கெடுப்பின் ஐந்தாவது சுற்று – 2022
April 14 , 2023 596 days 309 0
இந்தப் புலிகள் கணக்கெடுப்பானது இந்தியாவின் 20 மாநிலங்களில் உள்ள வன வாழிடங்களில் மேற்கொள்ளப் பட்டது.
2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3,167 ஆக இருந்தது.
இது 2018 ஆம் ஆண்டில் 2,967 ஆக இருந்த அளவிலிருந்து அதிகரித்துள்ளது.
இருப்பினும் 2014-2018 ஆம் ஆண்டுகளில் 33 சதவீதமாக இருந்த அதிகரிப்பு வீதமானது, அடுத்த இந்த நான்கு ஆண்டுகளில் 6.7 சதவீதமாக குறைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் மத்திய இந்திய மலைப்பகுதிகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகிய பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான (1,161) புலிகள் ஒளிப்படக் கருவியில் பதிவு செய்யப் பட்டன.
ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் புலிகள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் புலிகள் நடமாட்டம் 824 ஆகக் குறைந்துள்ளது.