TNPSC Thervupettagam

அகில இந்தியப் புலிகள் கணக்கெடுப்பின் ஐந்தாவது சுற்று – 2022

April 14 , 2023 596 days 307 0
  • இந்தப் புலிகள் கணக்கெடுப்பானது இந்தியாவின் 20 மாநிலங்களில் உள்ள வன வாழிடங்களில் மேற்கொள்ளப் பட்டது.
  • 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3,167 ஆக இருந்தது.
  • இது 2018 ஆம் ஆண்டில் 2,967 ஆக இருந்த அளவிலிருந்து அதிகரித்துள்ளது.
  • இருப்பினும் 2014-2018 ஆம் ஆண்டுகளில் 33 சதவீதமாக இருந்த அதிகரிப்பு வீதமானது, அடுத்த இந்த நான்கு ஆண்டுகளில் 6.7 சதவீதமாக குறைந்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் மத்திய இந்திய மலைப்பகுதிகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகிய பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான (1,161) புலிகள் ஒளிப்படக் கருவியில் பதிவு செய்யப் பட்டன.
  • ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் புலிகள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.
  • மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் புலிகள் நடமாட்டம் 824 ஆகக் குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்