TNPSC Thervupettagam

அகும்பே மழைக்காடுகள் வளாகம்

September 26 , 2023 474 days 267 0
  • கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தில் உள்ள அகும்பே மழைக்காடுகள் வளாகம் (ARC) ஆனது ‘தெற்கின் சிரபுஞ்சி’ எனப் பெயர் பெற்றது.
  • இது பருவமழை காலத்தின் போது 8,000 மி.மீ. அளவிலான மழைப்பொழிவைப் பெறும்.
  • பொதுவாக ஜூன் மற்றும் ஆகஸ்ட் ஆகிய பருவமழை மாதங்களில் இப்பகுதி 6,000 மி.மீ. அளவிலான அதிகபட்ச மழையைப் பெறும்.
  • ஆனால், தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக, இங்கு பதிவாகும் உச்சபட்ச பருவ மழைப் பொழிவானது சுமார் 5,250 மி.மீ. முதல் 5,500 மி.மீ. வரை என்ற அளவில் மாறிக் கொண்டிருக்கிறது.
  • இந்தப் பகுதியிலிருந்து 45 முதல் 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாட்பால் மற்றும் முத்ராடி போன்ற சில நகரங்களில் 2022 ஆம் ஆண்டில் அதிக மழைப் பொழிவுப் பதிவாகியுள்ளன.
  • 2022 ஆம் ஆண்டில் அகும்பேயில் 6,251.5 மி.மீ. மழைப் பொழிவுப் பதிவாகியுள்ளது,  இருப்பினும், நாட்பால் பகுதியில் 6,391.8 மி.மீ. மழைப் பொழிவுப் பதிவாகியுள்ளது.
  • ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹூலிக்கல் எனுமிடத்தில் 6,422.9 மி.மீ. மழைப் பொழிவுப் பதிவாகியுள்ளது.
  • இது மழைப் பொழிவின் அடிப்படையில், கர்நாடகாவில் அதிக மழைப் பொழிவுப் பெறும் பகுதிகளில் அகும்பே பகுதியினை மூன்றாவது இடத்திற்குத் தள்ளியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்