ஒடிஸாவின் கடற்கரையில் அப்துல்கலாம் வீலர் தீவில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனை வரம்பிலிருந்து உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட நிலத்திலிருந்து நிலவழி இலக்கினை நோக்கி ஏவத்தக்க, (Surface to Surface) அணு ஆயுதத்தை சுமந்து செல்லக்கூடிய, இடைநிலை வரம்புடைய கண்டங்களுக்கிடையேயான (Intermediate Range Ballistic Missile – IRBM), முழு செயல்பாட்டு கட்டமைப்பில் உள்ள (Full operational Configuration) அக்னி II ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் இராணுவப் பண்டக ஒத்துழைப்புடன் (logistic Support) இந்திய இராணுவத்தின் பாதுகாப்பு படைப் பிரிவால் (Strategic Forces Command-SFC) இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது கடைசி ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அக்னி ஏவுகணை வரிசைகளின் மூன்றாவது வெற்றிகர சோதனையாகும். இதற்கு முன் 5000 கிலோ மீட்டர் வரம்புடைய அக்னி-5 ஏவுகணையும், 700 கி.மீட்டர் வரம்புடைய அக்னி-I ஏவுகணையும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன.
இந்த ஏவுகணையை இரயில் மற்றும் நகரும் ஏவுகணை ஏவு அமைப்பு போன்றவற்றிலிருந்து ஏவ இயலும்.
நவீன மற்றும் மிகத் துல்லிய வழிகாட்டு அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ள இந்த ஏவுகணைக்கு திட இராக்கெட் உந்துதல் அமைப்பின் மூலம் உந்துதல் அளிக்கப்படுகின்றது (Social rocket Propellant System).