TNPSC Thervupettagam

அசல் அடையாள அட்டை கட்டாயம்

October 23 , 2017 2443 days 840 0
  • மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருமான வரித்துறையானது கருப்பு பணம் மற்றும் கள்ளப் பணப்புழக்கத்தை களைய அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு 50,000 ரூபாய்க்கு மேற்பட்ட வங்கியியல் கையாடலின் போது தனிநபர்களின் உண்மையான அடையாள அட்டையை சரி பார்க்க வேண்டியது கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது.
  • இதற்காக வருமான வரித்துறையானது பணமோசடி தடுப்பு (ஆவண பராமரிப்பு) விதிகளில் திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது..
  • பண மோசடி தடுப்பு (ஆவண பராமரிப்பு) சட்டம் மற்றும் அவற்றின் விதிகளானது வங்கிகள், நிதியியல் நிறுவனங்கள் மற்றும் பிற இடைப்பரிவர்த்தனை நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் அடையாளங்களை சரிபார்த்து, ஆவணமிட்டு பராமரித்து அத்தகவல்களை இந்திய நிதியியல் நுண்ணறிவு பிரிவிடம் Financial Intelligence Unit of India (FIU-IND) அளிக்க வேண்டியதை கட்டாயமாக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்